Pages

Monday, December 22, 2008

சிரத்தை



அடுத்து சிரத்தை.
பரம சற்குரு (ஈஸ்வரன்) நூல் (வேத சாத்திரங்கள்) மீது அன்பு பற்றுதலே சிரத்தையாகும்.

இது கொஞ்சம் ஆச்சரியமா இருக்கலாம். ஆரம்ப காலத்திலே சரி, இப்பவா?
ஆரம்ப காலத்திலே நமக்கு ஒண்ணும் ஆத்மா பத்தி அறிவு இல்லை. சொல்லால சொல்ல முடியாத ஒண்ணைத்தானே சொல்ல முயற்சி பண்ணறோம்? அதனால இதில் நிறைய விஷயங்களுக்கு நேரடி ஆதாரம் காட்ட முடியாது. வேதம், சாத்திரங்கள், ஞான நூல்கள், பெரியவர்கள் சொன்னது இப்படி பலதுல ஒரு நம்பிக்கை இருந்தாதான் கொஞ்சம் இந்த கருத்துக்களோட கூடப்போய் பார்த்து புரிஞ்சுக்கலாம். அந்த நேரத்துல சிரத்தை வேணும்ன்னு சொன்னா சரி கரெக்ட்டு.
இப்ப நிறையவே பண்ணியாச்சு. எது நித்தியம் எது அநித்தியம் என்கிற அறிவை ஓரளவாவது வளத்தாச்சு; ஓரளவு வைராக்கியம் வந்தாச்சு; இந்திரியங்களையும் மனசையும் கட்டிப்போட்டு மனசை சாந்தமா வைக்க பழகியாச்சு. மனசில வெறுமை, பொறுமை எல்லாம் வந்தாச்சு. அப்புறம் இப்ப என்ன சிரத்தை?

இப்படி முன்னேறியதாலதான் சிரத்தை!

ஆரம்ப காலத்தில சாதகனுக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கும்.¨நமக்கு இந்த ஆத்ம வித்யை பத்தி ஒண்ணுமே தெரியாதே! பேசாம பெரியவங்க, இதில் திளைச்சவங்க சொல்கிறதை கேட்டுப்போம்¨ அதனால சிரத்தை தானா இருக்கும். ஆனா இப்பவோ எனக்கு மனசு, புத்தி குழப்பம் எல்லாம் போய் தெளிவா இருக்கோம். இனிமேல சாக்ஷாத்காரம் விஷயமா நடக்க வேண்டியது எல்லாம் தானா நமக்கே புரிஞ்சுடும். இப்படி தோண ஆரம்பிச்சுடும். முன்னேயே சொன்னது போல அகங்காரம் எப்ப வந்ததுன்னு தெரியாமலேயே உள்ளே வந்து வளந்தும் விடும்.

ஆனா ஆத்ம தரிசனம் கிடைக்கும் முடிவான நிலைவரைக்கும் கூட பல விஷயங்கள் புத்திக்கு எட்டாதபடிதான் நடந்து கொண்டு போகும். சாக்ஷாத்காரம் கிடைத்து ஞானி ஆகிவிட்டாலும் கூட புத்தி மட்டத்துல பல விஷயங்களை தெளிவு பண்ண முடியாமலே இருக்கும். அதுவரைக்கும் பின்பற்றின வழியையே கேள்வி கேட்காமல் தொடர்ந்து போகணும். என்னென்னமோ சிலது நடந்துதான் திடீர்ன்னு சூர்யோதயம் மாதிரி ஆத்ம சாக்ஷாத்காரம் பிரகாசிக்கும். அது என்ன என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இப்படி சிலது நடந்து கொண்டு போகும் போது புத்தியால விசாரிக்காம எளிமையா அப்படியே அடங்கி ஏத்துக்கொண்டு போகணும். அது நடத்துவிக்கிறப்படி நடக்கணும். ¨இவ்வளோ தூரம் சாதனைல வந்தோம். இதுக்கு அருள் பண்ண பகவானுடைய அனுக்கிரஹ சக்தி இன்னும் மேலே கொண்டுவிடாம போகாது; இப்ப ஏதோ புத்திக்கு விளங்காம நடக்கிறது. இது ஒரு சோதனைதான் என்கிற தெளிவோட புத்தியை கொண்டு வராம நம்பிக்கையோட நடக்கிறதை ஏத்துக்கிட்டா கடைதேறலாம். அந்த விமோசனம் பெற்ற பிறகு கூட புத்தி விசாரணைக்கு எல்லாமே எட்டாது. மகா ஆசார்யராக பலரும் ஒத்துக்கிற சங்கரர் கூட அந்த ரகஸ்யத்தை புத்திக்கு புரிகிற மாதிரி சொல்ல முடியாதுன்னு சிரத்தைன்னு ஒரு படியா வெச்சுட்டார்.


5 comments:

Geetha Sambasivam said...

சிரத்தையோடயே கேட்டுக்கிறோம் இதையும்.

திவாண்ணா said...

நன்னி!

மெளலி (மதுரையம்பதி) said...

//இப்ப ஏதோ புத்திக்கு விளங்காம நடக்கிறது. இது ஒரு சோதனைதான் என்கிற தெளிவோட புத்தியை கொண்டு வராம நம்பிக்கையோட நடக்கிறதை ஏத்துக்கிட்டா கடைதேறலாம். அந்த விமோசனம் பெற்ற பிறகு கூட புத்தி விசாரணைக்கு எல்லாமே எட்டாது.//

உண்மை.

Kavinaya said...

எனக்கு அவ்வளவா புரியல. அனுபவிச்சவங்களுக்குத் தான் புரியுமோ என்னவோ. இருந்தாலும் கீதாம்மா சொன்னதுக்கு ரிப்பீட்டு.

திவாண்ணா said...

@ கவிநயா
:-(
எது புரியலைன்னு சொன்னா நல்லது. மடல் போடுங்க. இன்னும் சுலபமா சொல்லப்பாக்கிறேன்.