Tuesday, February 3, 2009
கர்ம இந்திரியங்கள்
தனித்தனியா நின்னு வேலை செய்கிற தன் மாத்திரைகளோட ரஜோ குணம் என்ன ஆகுது?
கர்ம இந்திரியங்களா. தனித்தனியா என்கிறதால வெவ்வேற இடங்கள்ல இருந்து கொண்டு வேலை செய்யும்.
திருப்பியும் நினைவு படுத்திக்கலாம். இவை நாம பாக்கிற கை, கால் இல்லை. அவற்றை இயக்கற சக்திதான். வாய் இருந்தும் பேச முடியாம, காது இருந்தும் கேட்க முடியாம சிலார் இருக்கிறதை நினைவுக்கு கொண்டு வந்தா புரியும்.
கர்ம இந்திரியங்கள் ஐந்து:
1.வாக் - ஆகாய ரஜோ குணம். ஆதனால ஆகாயத்திலே பேச்சு பரவும்.
2. கை - வாயுவோட ரஜோ குணம். சலித்துகிட்டே இருக்கணும். ஏண்டா கை வெச்சுகிட்டு சும்மா இருக்க முடியாதுன்னா, ஆமாம்! அதோட இயல்பான குணம் அது!
3.கால் - அக்னியோட ரஜோ குணம்.
4.பாயுரு - ஜல மலம் கழிக்கிற வேலை. நீரோட குணம். ஓடிகிட்டே இருக்கணும். அதே போல கழிவுப்பொருள் வெளீயே போய்கிட்டே இருக்கணும். இல்லாட்டா பிரச்சினைதான்!
5. உபஸ்தம் - ஆண் குறி/ பெண் குறி : மண்ணோட ரஜோ குணம். ஆனந்தத்தை உண்டாக்கும்.
இந்த பதினேழும் அதாவது ஐந்து ஞானேந்திரியங்கள் +மனம்+ புத்தி+ ஐந்து வாயுக்கள் + ஐந்து கர்மேந்திரியங்கள் = பதினேழு தத்துவங்களும், சுரர் அசுரர் நரர் விலங்குன்னு தோன்றி இருக்கிற உயிர்களுக்கு எல்லாம் (சீவர்க்கெல்லாம்) சூட்சும சரீரங்கள்.
போச்சுடா, அது என்ன சூக்ஷ்ம சரீரம்? இதை எல்லாம் காரண சரீரம்ன்னு சொல்லலை?
இல்லை.
காரண சரீரத்திலே பிராணன்கள் இல்லை.
நாம இறந்தா பிராணன் போயிடும். மீதி இருக்கிறதை ஆணவம், கன்மம் , மாயை என்கிற காரண சரீரம் தூக்கிகிட்டு போய் அடுத்த பிறவி எடுக்க வைக்கும். (அடுத்த பிறவிக்கு காரணமானதாலே அந்த மூணும் காரண சரீரம் ஆகும்.) சரிதானே? :-)
38.
இராசத குணத்தில் வேறிட் டெடுத்தகூ றைந்து மைந்தும்
பிராணவா யுக்களென்றும் பெருந்தொழிற் கருவியென்றும்
பராவிய பெயரா மிந்தப் பதினேழு மிலிங்க தேகம்
சுராசுரர்நரர் விலங்காய்த் தோன்றியவுயிர் கட்கெல்லாம்.
இராசத (ரஜோ) குணத்தில் எடுத்த (எடுத்து ஒன்றாக்கிய) கூறு ஐந்தும் பிராண வாயுக்கள் என்றும், வேறிட்டு எடுத்த (தனித்தனியே எடுத்து வைத்த) ஐந்தும் பெருந் தொழிற் கருவி (கர்மேந்திரியங்கள்) என்றும் பராவிய (பரவிய) பெயராம். இந்த பதினேழும் (ஞானேந்திரியங்கள் ஐந்து+மனம்+ புத்தி+ஐந்து வாயுக்கள்+ ஐந்து கர்மேந்திரியங்கள் = பதினேழு தத்துவங்களும்) சுரர் அசுரர் நரர் விலங்காய் தோன்றிய உயிர்கட்கு எல்லாம் (சீவர்க்கெல்லாம்) இலிங்கதேகம். (சூட்சும சரீரங்கள்)
Labels:
நான்காம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
திரும்ப வரேன்!
//காரண சரீரத்திலே பிராணன்கள் இல்லை.
நாம இறந்தா பிராணன் போயிடும். மீதி இருக்கிறதை ஆணவம், கன்மம் , மாயை என்கிற காரண சரீரம் தூக்கிகிட்டு போய் அடுத்த பிறவி எடுக்க வைக்கும். (அடுத்த பிறவிக்கு காரணமானதாலே அந்த மூணும் காரண சரீரம் ஆகும்.) சரிதானே? :-)//
பிராணன் போனதுக்கப்புறம் என்ன மீதி இருக்கும்? புரியலை. அப்போ ஆணவம், கன்மம், மாயைங்கறது தான் காரண சரீரமா?? :(((((
//பிராணன் போனதுக்கப்புறம் என்ன மீதி இருக்கும்? புரியலை. அப்போ ஆணவம், கன்மம், மாயைங்கறது தான் காரண சரீரமா?? :(((((//
அதேதான்!
பிராணன் போன பிறகு மீதி?
ப்ராணன் ஸ்தூல சரீரத்தை விட்டுதானே போச்சு?
விஞ்ஞானத்தின் படியும் சக்தியை புதுசா உருவாக்கவோ அழிக்கவோ முடியாது.
அதனால சூக்கும சரீரம் இருக்குமே!
இந்த சூக்கும சரீரம் மறு பிறவி எடுக்க காரணம் ஆணவம் கன்மம் மாயை. அதாவது காரண சரீரம்.
Post a Comment