Friday, February 27, 2009
மீள் பார்வை - பஞ்ச பூதங்கள்
முதல்லே பகவான் விட்சேப சக்தி மூலமா ஆகாயத்தை படைத்தான்.
அதிலேந்து வாயு.
வாயுலேந்து அக்னி.
அக்னிலேந்து நீர்.
நீரிலேந்து மண்.
இதெல்லாம் நாம இப்ப பாக்கிற மாதிரி இல்லை. அதெல்லாம் அப்புறமா வரும். இப்ப இதெல்லாம் சூக்ஷுமமா இருக்கு. பாக்க முடியாம... அதாவது பருப்பொருள் (solid) உருவாகாம அதுக்கான சக்தி தன்மை உருவாயிட்டது.
இதுக்கெல்லாம் இப்ப பேர் சூக்கும பஞ்ச பூதங்கள் அல்லது தன் மாத்திரைகள்.
மாத்திரைகள்? இல்லை இல்லை நம்ம சாப்பிடற மாத்திரை இல்லை. குழப்பமா இருந்தா இந்த தன்மாத்திரையை விட்டுடலாம். பஞ்ச பூதங்கள் நமக்கு ஏற்கெனெவே தெரிஞ்சதால அதையே வெச்சுக்கலாம். இவை சூக்கும பஞ்சபூதம் நாம பாக்கிற பஞ்சபூதம் இல்லைன்னு நினைவிருந்தா போதும்.
ஆனா
ஒண்ணுக்குள்ள ஒண்ணா இவை இருக்கும்.
ஆகாசத்திலே வாயு முதலான மத்தது நாலும் இருக்கும். வாயுவிலே அக்னி முதலா மத்தது மூணும் இருக்கும்...இப்படியே...
இப்படி ஒண்ணுலேந்து ஒண்ணு வந்ததாலே ஒவ்வொன்னும் அது வந்து இருக்கிற கிரமப்படி மத்த தன்மாத்திரைகளோட குணமும் கொண்டு இருக்கும்.
குழப்பிட்டேனா?
ஆகாசத்தின் குணம் எல்லாத்துக்கும் இடம் தருவது.
வாயுவுக்கு இந்த குணமும் உண்டு. மேலும் அதோட இயற்கையான சலன குணமும் உண்டு.
அக்னிக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல் கூட அதோட குணமான உருவமும் உண்டு.
நீருக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல், உருவம் கூட அதோட குணமான ருசியும் உண்டு.
மண்ணுக்கு மேலே கண்ட இடம் தருதல், சலித்தல், உருவம் ருசி, கூட அதோட குணமான மணம் உண்டு.
இவற்றினால அனுபவிக்கிற சாதனமான தநு - சூட்சும உடல்கள் உண்டாகும்.
36.
விட்சேப சக்தியில் தன் மாத்திரையான சூட்சும பூத உற்பத்தி கூறல்.
தோற்றமாஞ் சத்திதன்னிற் சொல்லிய விண்ணாம் விண்ணிற்
காற்றதாங் காற்றிற்றீயாங் கனலினீர் நீரின்மண்ணாம்
போற்றுமிவ் வைந்துநொய்ய பூதங்களென்று பேராம்
சாற்றுமற் றிவற்றிற்போக சாதனதநு வுண்டாகும்
[முன்] சொல்லிய தோற்றமாம் சத்திதன்னில் (விட்சேபசக்தியில்) (சத்தத்தின் மாத்திரையான) விண்ணாம்; விண்ணிற் (ஸ்பரிசத்தின் மாத்திரையான) காற்றதாம்; காற்றின் (ரூபத்தின் மாத்திரையான) தீயாம்; கனலின் (ரஸத்தின் மாத்திரையான) நீர்; நீரின் (வாசனையின் மாத்திரையான) மண்ணாம். போற்றும் இவ்வைந்தும் (இந்த 5 தன் மாத்திரைகளும்) நொய்ய (சூட்சுமமான) பூதங்கள் என்று பேராம். சாற்றும் இவற்றில் போக சாதன[மான] தநு (சூட்சும தேகங்கள்) உண்டாகும்.
[விட்சேப சக்தியில் இருந்து பஞ்ச பூதங்களின் தன்மைகள் உண்டாகும்]
--
தன் மாத்திரைகளுக்கு காரணமான சத் ரஜஸ் தமஸ் முதலான 3 குணங்களும் இந்த சூக்கும பஞ்ச பூதங்கள் (அதாவது இந்த தன்மாத்திரைகள்) ஐந்திலும் தொடர்ந்து கூடி நிற்கும்.
அதாவது சத்வம் ரஜஸ் தமஸ் சேர்ந்து இருந்து வித்தியாசப்படுத்தும்.
முன்னே சத்வத்திலே சத்வம் விஷ்ணு, சத்வத்திலே ராஜசம் ப்ரம்மா, சத்வத்திலே தாமசம் ருத்திரன் ன்னு சொன்னது போல..
இப்ப தாமசத்தின் ஒரு பகுதியான விட்சேபத்திலேயும் இதே போல வித்தியாசம். ஒவ்வொரு தன்மாத்திரையுடனும் இந்த சத்வ, ரஜ, தமஸ் குணங்கள் சேர்ந்து இருந்து வித்தியாசப்படுத்தும்.
அதோட இல்லாம 5 தன் மாத்திரைகளும் தனியாகவும் கூட்டாகவும் இருந்து வெவ்வேறு விதமா வெளிப்படும்.
தனியா நிக்கிறதை வியக்தி ன்னும் கூட்டு போட்டு இருக்கிறதை சமஷ்டி ன்னும் சொல்வாங்க.
அதாவது வியக்தி தனி மரம் போல; சமஷ்டி தோப்பு போல.
Labels:
நான்காம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
புரியறாப்லதான் இருக்கு...
ஆகாசாத் வாயு:
வாயோரக்நி:
அக்நேராப:
அப்த்ய: ப்ருத்வீ
இப்படைப்புத் தொடரைச் சலனப்படம்
வாயிலாக நன்கு விளக்கியுள்ளீர்கள்.
தேவ்
/புரியறாப்லதான் இருக்கு...//
thanks!
//இப்படைப்புத் தொடரைச் சலனப்படம்
வாயிலாக நன்கு விளக்கியுள்ளீர்கள். //
நன்றி தேவ். சிரமப்பட்டதற்கு கிடைத்த பலன் !
இந்தப் பதிவு இப்போதுதான் புரியுது....படம் கலக்கல் :)
நன்றி மௌலி!
நெருப்பு நரியிலே படம் எதுவும் வரலை, ப்ளக் இன்னைத் தரவிறக்கிக்கோனு சொல்லுது. எதுக்கு வம்புனு விட்டுட்டேன். :((((((
விட்சேப சக்தி =distraction???? இல்லைனா diversion???ம்ம்ம்ம்??? துகள், துகளாய்ச் சிதறியது?? இங்கே இதுதான் சரியா வருமோனு நினைக்கிறேன்.
//இப்படி ஒண்ணுலேந்து ஒண்ணு வந்ததாலே ஒவ்வொன்னும் அது வந்து இருக்கிற கிரமப்படி மத்த தன்மாத்திரைகளோட குணமும் கொண்டு இருக்கும்.
குழப்பிட்டேனா?//
குழந்தை அப்பா, அம்மா இருவரின் ஜீன்களையும் கலந்து பிறக்கிறாப்போல்! எப்போவோ இருந்த முன்னோர்களைக் கூடச் சில சமயம் நிறம், குணத்தில் கொள்ளும்னும் சொல்றாங்க அது போலன்னும் வச்சுக்கலாமோ??
ப்ளாஷ் ப்ளக் இன் வேணும். தரவிறக்கிக்கலாம். தப்பில்லை.
விட்சேப சக்தி =multiplicity of phenomenon.
// குழந்தை அப்பா, அம்மா இருவரின் ஜீன்களையும் கலந்து பிறக்கிறாப்போல்! எப்போவோ இருந்த முன்னோர்களைக் கூடச் சில சமயம் நிறம், குணத்தில் கொள்ளும்னும் சொல்றாங்க அது போலன்னும் வச்சுக்கலாமோ??//
நல்லாவே சொன்னீங்க! வெச்சுக்கலாம்.
ஆர்காட் விஜயம் இப்பல்லாம் அதிகமாவே இருக்கு. பெரும்பாலான பிற்பகல் நேரம் முழுக்க போயிடுது! பதிவு போடவே கஷ்டமா இருக்கு.
ஹும்! பாக்கலாம்.
ஆர்காட் விஜயம் இப்பல்லாம் அதிகமாவே இருக்கு. பெரும்பாலான பிற்பகல் நேரம் முழுக்க போயிடுது! பதிவு போடவே கஷ்டமா இருக்கு.
ஹும்! பாக்கலாம்.//
ம்ம்ம்ம்ம்???? இங்கேயும் தினமும் இருக்கு, அதான் கஷ்டமா இருக்கு. :(((((((((
Post a Comment