Pages

Tuesday, June 2, 2009

ஜீவன் என்கிறது...



ஜீவன் என்கிறது என்னன்னு கொஞ்சம் தெளிவாக்கிக்கலாம்.
அந்தக்கரணம் ரஜோ குணத்தில சத்துவம். அதனால தெளிவானது.
பிரம்மத்தோட ஒரு துணுக்கு கூடஸ்தன். அதோட சத்துவ நிழல் அதில படிகிற போது அது ஜீவனாகிறது. ஒரு கண்ணாடில பாக்கிற கடல் அலையோட பிம்பத்தை கற்பனை செய்தா கொஞ்சம் புரியலாம்.
அப்ப கூடஸ்தன் +அதன் நிழல் +அந்தக்கரணம் மூணும் சேர்ந்தது ஜீவன்.

ஒரு குளம் இருக்கு. அதில ஆகாசத்தில ஒளி வீசற சந்திரனோட பிம்பம் பிரதிபலிக்குது. இப்படி பிம்பம் தோணனும்னா ரெண்டு விஷயம் அவசியம். நாம கண்ணாடில நம்மோட முகத்தை பாக்கிறப்ப முதலாவதா நாம் இருக்கணும். அடுத்து கண்ணாடி வேணும். அப்படி இருந்தா நம்ம முகத்தை கண்ணாடியிலே பாத்து மகிழலாம். கண்ணாடியில பாக்கிறது நம்மோட பிம்பம். நாம் இல்லாம, கண்ணாடி இல்லாம பிம்பம் இல்லை. வானத்து சந்திரன் இல்லாம, குளம் இல்லாம சந்திர பிம்பம் இல்லை.

இது போல அந்தக்கரணத்தில பிரதிபலிக்கிற கூடஸ்தனோட பிம்பம் ஜீவன்.
வானத்து சந்திரன் அசையாம நிக்க தண்ணீர் அலைச்சலில சந்திர பிம்பம் அசைகிறது. இந்த ஆபாச சந்திரன் அதிஷ்டான வான சந்திரனேதான் நாம் ன்னு மறந்து போச்சு! ஏதோ நீர் அலைகிறதை தான் அசைந்து அலைகிறதா நினைக்குது! இது போல ஜீவனோட தன்மை.

அதிஷ்டான கூடஸ்தனே நாம் ன்னு மறந்து போய் தான் ஜீவன் அப்படின்னு மயங்குகிறது; மனசு இயங்க பலம் ஆபாசனான தன்னோட சக்தியாலதான்னு கவனிக்காம, மனசு தான் இல்லாம வேற பொருள்ன்னும் அது மயங்குகிறது. மனசோட வேலை எல்லாம் தன் வேலைன்னு மயங்குகிறது.

ஜீவன் அப்படி இல்லாம தான் வேற கூடஸ்தன் வேற இல்லைன்னு புரிஞ்சு, சாட்சியாவே நின்னு பாக்குமோ அப்ப இது வரைக்கும் நம்மை ஆட்டிப்படைச்சதா நினைச்ச மனசு எங்கேடான்னு தேடி பாக்க, மனசோட உண்மை தெரிய வரும்.

ஏக காலத்திலே மனசையும் உண்மையான நான் ஐ யும் பாக்க முடியாது. அதனால ஒண்ணுதான் உண்மை. எது?

அதாவது உனக்குள்ளே இருக்கும் நான் என்பதைக்கொண்டு மனம் எங்கே என்று பார்த்தால் அது காணப்படாது.

அட, நான் யாருன்னு தெரியலையே? தெரிஞ்சாதானே அப்படி பாக்கன்னு சொன்னா...
வாஸ்தவம். சரி அப்படின்னா மனத்தை கொண்டு நான் என்பதை பார். அப்போது நான் இன்னது என்று தோன்றியதும் மனம் இல்லாமல் போகும்.
இப்படி பெரியவங்க சொல்லி இருக்காங்க.
இதன் படி பார்க்கிறப்ப "நான்" ஐ கொண்டு மனசை பாத்தாலும், மனசை கொண்டு "நானை" பாத்தாலும் மனம்தான் காணாம போகுது. நான் எப்பவும் இருக்கு. இந்த நானேதான் மனசு தோண காரணமாயும் இருக்கு.

டெக்னிகலா இதை விகங்க மார்கமா மனோலயமாக நேர் வழி என்கிறாங்க. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா!

தாயுமானவர் மனசை பாத்து ¨நின் ஜன்ம தேயத்தில் நீ செல்ல வேண்டும்" ன்னு சொன்ன இந்த வழி கஷ்டமான வழி. சிரம சாத்தியம். அதாவது செய்ய முடியும்னாலும் கஷ்டப்பட்டுதான் சாதிக்க முடியும்.


2 comments:

yrskbalu said...

dear diva ji,

very good work you are doing with
god blessings

1. can i know you are male or female
because for further our discussion it will be needed.

2. are you studied this vedentha in chinmiyamission ?

3. currently you are doing SADANA?

திவாண்ணா said...

welcome sri.yrsk.balu!

//very good work you are doing with
god blessings//
thanks!

// 1. can i know you are male or female
because for further our discussion it will be needed.//

well if you really think it matters... male.

// 2. are you studied this vedentha in chinmiyamission ?//

no. though i have read vedanta books authored by chinmaya ...

// 3. currently you are doing SADANA?//

not what people will call seriously. i am trying to understand the philosophy first. and practice as much as possible. i am still a gruhasta and do several rituals. as my mail id implies an agnihotri.