Pages

Tuesday, June 16, 2009

மனசு இருந்தாதானே கஷ்ட நஷ்டம்?



19.
சத்து ரூபப் பிரமத்திற் சத்துவ மனம் லயித்த போது சத்துக்கள் பிராரத்த போகம் அனுபவிப்பது எப்படி என வினாவுதல்.

ஏகமாய் மனமிறந்தாற் சீவன் முத்த ரிருக்குமட்டும் பிராரத்த மெதினா லுண்பார்
போகமா னதுபுசித்துத் தொலைப்ப தன்றோ புசிப்பதென்றால் மனந்தானும் போன தன்றே
சோகமா மனமிறந்தாற் போகமில்லை தோன்றுமெனின் முத்தரென்று சொலக்கூடாதே
மோகமா மிதுதெளிய குருவே நன்றா மொழிந்தருள்வாய் தெளிவதன்றோ முத்திதானே

ஏகமாய் மனமிறந்தால் சீவன் முத்தர் இருக்கும் மட்டும் பிராரத்தம் எதினால் உண்பார்? போகமானது புசித்துத் தொலைப்பது அன்றோ? புசிப்பதென்றால் மனம் தானும் போனது அன்றே? சோகமாம் (துன்பம் தரும்) மனம் இறந்தால் போகமில்லை. [மனம்] தோன்றும் எனின் முத்தரென்று சொலக்கூடாதே. மோகமாம் இது தெளிய குருவே நன்றாய் மொழிந்தருள்வாய். தெளிவது அன்றோ முத்திதானே.

அடுத்த கேள்வி கேட்கிறான் சீடன். 
குருவே, கர்மாவை அனுபவிச்சுதானே தீர்க்கணும்? அதாவது நாம முன்னே  மத்தவங்களுக்கு செய்த தப்புங்களுக்கு இப்ப நாம அனுபவிக்கணும். அப்படி கஷ்டம் அனுபவிச்சாத்தான் அது தீரும்.
 
சரி, சீவன் முக்தர் ஒத்தர் இருக்கார். அவர் சீவன் முக்தர் என்கிறதால அவருடைய மனம் நாசமாயிடுத்துன்னு தெரியுது.
ஆனா மனசு இருந்தாதானே கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கலாம்? மனசு இல்லைனா கஷ்டம் இல்லை. கஷ்டம் இல்லைனா கர்மவினையை அனுபவிச்சதா ஆகுமா? கஷ்டத்தை அனுபவிக்க மனசு இருக்கிறதா சொன்னா அப்ப அவரை சீவன் முக்தர்ன்னு சொல்ல முடியாதே!
 
இந்த சிஷ்யன் சமான்யப்பட்டவன் இல்லை.
கரெக்டா பாய்ன்ட பிடிக்கிறார் பாருங்க.


5 comments:

கபீரன்பன் said...

//கஷ்டம் இல்லைனா கர்மவினையை அனுபவிச்சதா ஆகுமா? கஷ்டத்தை அனுபவிக்க மனசு இருக்கிறதா சொன்னா அப்ப அவரை சீவன் முக்தர்ன்னு சொல்ல முடியாதே!//

வீட்டில் குடியிருப்பதற்கு வாடகை கொடுக்க வேண்டுமாம்,அரசுக்கு வரி கட்டணுமாம். ஐயோ கட்டணுமே அன்று அழுபவர்கள் கஷ்டம் அனுபவிப்பவர்கள். மனம் திறந்து அதை கடமையாக ஏற்றுக் கொள்பவர்கள் சுகம் அறிந்தவர்கள்.

இது பார்க்கிறவன் பார்வையில் வருகிற வித்தியாசம் தானே ?

yrskbalu said...

dear kabiranban,

no. its not like that.

like us only mind working.

for jeevanmukthar- there is no mind at all.

coming sloga will explain it.

previous chapters this point explained in detail. you can refer.

திவாண்ணா said...

உமேஷ்! பாலு சார் சொல்கிற மாதிரி அடுத்த பாடல்லே விடை கிடைக்கும்.
இருந்தாலும் நீங்க சொல்வது ஒரு வகையில் தப்பில்லைதான். பார்வை எப்போது இந்த மாதிரி ஆகும்? ஒருவர் முள் குத்தினா அழுது ஆகாத்தியம் பண்ணுகிறார். ஒருவர் கத்தியால வெட்டு பட்டாலும் ஒரு கட்டு போட்டு கொண்டு அவர் பாட்டுக்கு போறார்.
இந்த மைண்ட் செட் எப்படி வரும்? அதிலேதான் இருக்கு வித்தியாசம்.

கபீரன்பன் said...

Thanks Balu,

//for jeevanmukthar- there is no mind at all//

precisely that's what I tried to convey through an allegorical example . Jeevanmukta's troubles are so only from onlooker's point of view. As he is aware that these troubles are due to Prarabdha Karma he remains unconcerned about it. Like T.V. says it is a mind set acquired through sadhana.

திவாண்ணா said...

பாலு சார், எப்படி அடுத்த பதிவு பத்தி தெரியும்? கைவல்லியம் படிச்சாச்சா? :-))