Pages

Wednesday, June 3, 2009

மனசு எப்படி சமாதியிலே அசைவில்லாம நிக்க முடியும்?



வஞ்சனை பண்ணாம உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லிக்கொடுக்கிற குருவே நீங்க சொல்கிறது எல்லாம் புரிஞ்சது. இன்னொரு சந்தேகம்.
சமாதி என்கிறது என்ன? மனசு கொஞ்சம் கூட சலனமடையாம, அலையில்லாத கடல் மாதிரியும், காத்தில அசையாத தீபம் மாதிரியும் எங்கும் நிறைஞ்ச பரிபூரண நிலையான பிரம்மாகாரமா ஆகிறதுதானே?

ஆனா இந்த பாழும் மனசோ எப்பவுமே அலை பாஞ்சுகிட்டுதானே இருக்கு? ஊஞ்சல் மாதிரி எப்பவுமே அசைஞ்சு கொண்டிருக்கு. (ஆதி சங்கரர் மனசுக்கு கொடுத்த டெபனஷனே சஞ்சலம்தான்)
இப்படிப்பட்ட மனசு எப்படி பிரம்மகாரமான சமாதியிலே அசைவில்லாம நிக்க முடியும்?

அலையிலா சாகரம் போல் அனிலம் சேரா விளக்கது போல்
நிலையொன்றியநற் சமாதியுற்று நின்றாட்கமலத் தெழும்புரச
நிறைவாரிதியிற் புகுந்தடியேன் நேசித்து அதனில் இருப்பேனோ
திருப்போரூர் சந்நிதி முறை - சிதம்பர ஸ்வாமிகள்.

15
வஞ்சகமில் பரமார்த்த குருவே சொன்ன வழிகளறிந் தேனினியோர் வசனங்கேளீர்
சஞ்சலமற் றகண்ட பூரணமாய்ச் சித்தந் ததாகார மாவதன்றோ சமாதி யோகம்
உஞ்சலையொத் தலைவதுதன் சுபாவ மாகி யொருகணத்திற் பலவுலகா யுதிக்கு மிந்த
நெஞ்சகம்வத் துவிலசையா நிவாததீப நிலையடைவ தெப்படியோ நீர்சொல்வீரே


வஞ்சகமில்(லாத) பரமார்த்த குருவே சொன்ன வழிகள் அறிந்தேன். இனியோர் வசனங்கேளீர். சஞ்சலமற்று அகண்ட பூரணமாய்ச் சித்தம் (மனம்) ததாகாரம் (பிரமம்) ஆவதன்றோ சமாதி யோகம். உஞ்சலை (ஊஞ்சலை) ஒத்து அலைவது தன் சுபாவமாகி ஒரு கணத்தில் பல உலகாய் உதிக்கும் இந்த நெஞ்சகம் வத்துவில் அசையா நிவாததீப நிலை அடைவது எப்படியோ நீர் சொல்வீரே. {மனம் அலையாதிருக்க உபாயம் கேட்டல்}



No comments: