Pages

Thursday, June 4, 2009

மனம் அலையாதிருக்க உபாயம் கேட்டல்வஞ்சகமில்(லாத) பரமார்த்த குருவே சொன்ன வழிகள் அறிந்தேன். இனியோர் வசனங்கேளீர். சஞ்சலமற்று அகண்ட பூரணமாய்ச் சித்தம் (மனம்) ததாகாரம் (பிரமம்) ஆவதன்றோ சமாதி யோகம். உஞ்சலை (ஊஞ்சலை) ஒத்து அலைவது தன் சுபாவமாகி ஒரு கணத்தில் பல உலகாய் உதிக்கும் இந்த நெஞ்சகம் வத்துவில் அசையா நிவாததீப நிலை அடைவது எப்படியோ நீர் சொல்வீரே. {மனம் அலையாதிருக்க உபாயம் கேட்டல்}

நல்ல கேள்விப்பா. மனசுக்கு சத்வம் ரஜஸ் தமஸ் ன்னு மூணு குணம் உண்டு இல்லையா? அதில ஒரு நேரத்தில ஒரு குணம்தான் மேலோங்கி இருக்கும்.
சத்துவம் மேலோங்கின போது ஈஸ்வர பக்தி, கருணை, சாந்தம், ஞானம் ன்னு சன் மார்க குணங்கள் உண்டாகும்.
அதுவே ரஜோ குணம் அதிகமாகும்போது உலக சம்பந்தமான விஷயங்கள், உடம்பு சம்பந்தமான விஷயங்கள், சாத்திர வாசனை இப்படி இதில எல்லாம் விருப்பம் வருகிற குணம் இதெல்லாம் உண்டாகும்.
தமோ குணம் மேலோங்கித்துனா அகங்காரம், டம்பம், சோம்பல், தூக்கம், காமம், குரோதம் எல்லாம் உண்டாகும்.

இந்த மூணிலே தமத்தை விடணும்ன்னு எல்லாருக்குமே தெரியும். ரஜோ குணத்தையும் ஞானம் தேடுகிறவங்க விடணும்.
இந்த ரஜோ குணத்திலே மூணு விதம்.

உலக வாசனை என்பது உலகத்திலே எல்லாரும் புகழும் படியா மெச்சும் படியா துதிக்கும்படியா நாம இருக்கணும்ன்னு ஆசை படுகிறது.
இப்படி எல்லாரும் பிரியப்படுகிற மாதிரி நடந்து கொள்கிறது இயலாத காரியம். எப்பவும் எல்லாரையும் திருப்தி செய்ய முடியாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொத்தரை திருப்தி செய்யலாம் அவ்வளவே. ஏன் மழை பெய்யறது. சிலர் பாழும் மழைன்னு திட்டறாங்க. சிலர் ஆஹா மழைன்னு சந்தோஷப்படறாங்க.
பதிவிரதையான சீதையையே குறை சொல்லித்து இந்த உலகம். அப்புறம் என்ன? அதுவும் 2 யுகங்களுக்கு முன்னே. இப்ப கலி யுகத்திலே கேக்கவே வேண்டாம்.
அதனால நமக்கு சரின்னு தோன்றியதை செய்து கொண்டே போகணும். மத்தவங்க மேம்போக்கா பாத்துட்டு புகழறதும் வேணாம்; இகழறதும் வேணாம். ஆனம் லாபம் எந்த வழியிலோ அதிலேயே போகப்பாக்கணும்.

இரண்டாவது தேக வாசனை. காயகல்பம் எல்லாம் சாப்பிட்டு தேகத்தை நெடுங்காலம் அழியாம அப்படியே வெச்சுக்கணும். சந்தனம், பூ எல்லாம் அணிஞ்சு அலங்காரம் செய்துக்கணும் என்கிற ஆசை. இந்த காலத்திலே வருஷா வருஷம் மெடிகல் செக்அப் ன்னு நிறைய பரிசோதனைகள் எல்லாம் செய்து பல பரிசோதனை கூடங்கள் பிழைக்க வழி செய்து தரோம். நிறைய வைட்டமின் மாத்திரை விற்பனை ஆகுது. ஒரு சின்ன ஜலதோஷம்ன்னா கூட ஒரு சுக்கு கஷாயம் வெச்சு குடிக்காம டாக்டரை தேடி ஓடறோம். மொத்தமா ஒரு 500 ரூபா செலவானாதான் அப்பாடான்னு இருக்கு. நம்மால சில ப்யூட்டி பார்லர்கள் பிழைக்குது. எல்லாம் சில மணி நேரம் மட்டுமே நிக்கிற அலங்காரத்துக்கு! தினம் மூணு தரம் ஆடை மாத்தாட்டா ஏதோ குறைஞ்சு போனதா நினைக்கிறோம்.
ஹும்!
என்னதான் பணக்காரன் ஆனாலும், படிச்சவங்களா இருந்தாலும் ஒரு நாள் யமதர்ம ராஜன் கூப்பிட்டா கிளம்பித்தான் ஆகணும். இதோ இந்த ஐஸ்க்ரீமை சாப்பிட்டுட்டு வரேன்ன்னு சொல்ல முடியாது. டிரெஸ் மாத்திட்டு வரேன்னு சொல்ல முடியாது.
ஞானத்தை அப்பியாசிக்கிறவங்க உடல் மேலே இருக்கிற இந்த அபிமானத்தையும் விலக்கவே வேணும்.

மூணாவது சாத்திர அபிமானம். அதாவது எல்லாரைவிட நமக்கு அதிகமா தெரியணும். நம்மை விட அதிகமா தெரிசஞ்ச ஆசாமி இருக்கவே கூடாதுன்னு ஒரு விசித்திர எண்ணம். "இதை தெரியுமா? அதை தெரியுமா? சொல்லுங்க பாப்போம்!” ன்னு கேட்டுகிட்டே இருப்பாங்க. மத்தவங்க எதை சொன்னாலும் "அப்படியா? என்ன ஆதாரம்?"ன்னு கேட்டு மட்டம் தட்டப் பாப்பாங்க.Post a Comment