Pages

Monday, June 8, 2009

மனோலய உபாயம்:



17. மனோலய உபாயம்:
மனது சத்துவ சொரூபமற் றிரண்டும் வந்து கலந்தன வவற்றைமாற் றினார்போம்
தனது சன்மார்கத் தைவிடா திருந்தபோது தமோ குணமும் ரஜோகுணமுஞ் சமிக்கும்பின்னைக்
கன பரிணாமஞ் சலனம் போம் போனக்காற் களங்க மற்றுநின்ற வாகாசம் போலும்
நினதுள மப்படியா மப்பிரமத் தொன்றாய் நிருவிகற்ப சமாதியிலே நிற்குந் தானே

மனதுக்கு [இயல்பானது] சத்வ சொரூபம். மற்றிரண்டும் [இடையே] வந்து கலந்தன. அவற்றை மாற்றினால் போம். (நீக்கினால் நீங்கும்). தனது சன்மார்கத்தை விடாதிருந்த (நீக்காமல் அனுஷ்டித்த) போது [தேகத்தின் இயல்பான] தமோ குணமும் [பிராணத்தின் இயல்பான] ரஜோகுணமும் சமிக்கும் (நீங்கும்). பின்னை கன (கனமாகிய விஷய) பரிணாமமும் (ஒரு விஷயத்திலிருந்து மற்றொரு விஷயத்துக்கு தாவும்) சலனம் போம். போனக்கால் களங்கமற்று நின்ற ஆகாசம் போலும் நினது உள்ளம் அப்படியாம் அப்பிரமத்து ஒன்றாய் நிருவிகற்ப சமாதியிலே நிற்குந்தானே.

ரஜோ குணம் மனசோட சலனத்துக்கு காரணமா இருக்கு. இந்த சலனம் பிராணனின் காரியம். தமோ குணம் ஸ்தூல பொருளை - அதான் பருப்பொருளை அறிய காரணமா இருக்கு. ஆசை, கோபம், அகங்காரம், டம்பம், சோம்பல், தூக்கம் இதெல்லாம் இந்த 2 குணங்களை சேர்ந்ததுதான். இதெல்லாம் இடையிலே வந்தவை. நிலையா இருக்காது.

நாம் கடைக்கு போறோம். அங்கே கடைக்காரணோட ஏதோ தகராறு. சண்டை போட்டுட்டு புரு புருன்னு வீட்டுக்கு வரோம். எல்லாம் சரி! இந்த கோபம் எவ்வளவு நேரம் இருக்கும். வீட்டிலே குழந்தையை, பேத்தி பெயரனை பாத்ததும் அது காணாம போயிடும். சிரிச்சு விளையாடறோம். இல்லை ஆசை மனைவி காப்பி போட்டு கொண்டுவந்து கொடுத்து "சரி விடுங்க அதை!" ன்னு சொன்னபின் காணாம போயிடும். இதை நிறுத்தி வைக்க முடியாது. யாரானா "இதோ பாருப்பா இப்படியே ரெண்டு நாள் கோபப்பட்டு கொண்டு இரு பாக்கலாம். ஆயிரம் ரூபா தரேன்" னு சொன்னாக்கூட அப்படியே கோபத்தை நிறுத்தி வைக்க முடியாது. அதை கேட்டு உடனே சிரிச்சாலும் சிரிச்சுடுவார்.

இல்லை மாறாக அடிச்சது லக்கு லாட்டரி, இல்லை இணையத்திலே எழுதிய கதைக்கு ஏதோ பரிசு கிடைக்குது; இல்லை சூடான பதிவுகள்ளே உங்க வலைப்பூ போடு போடுன்னு போடுது. ரொம்ப சந்தோஷப்படறோம். எவ்வளவு நேரம்? ரெண்டு மூணு நாள்? அப்புறம்? அதுவும் கொஞ்ச கொஞ்சமா போயிடும். இல்லை ஆபீஸ் டேமேஜரை பாத்த உடனே சட்டுனு காணாம போயிடும். எந்த "தாங்க முடியாத துயரம்" ன்னு சொல்கிற விஷயம் கூட நாளடைவிலே காணாம போயிடுது.
ஏன்னா இதெல்லாம் நம்மளோட சுபாவ குணம் இல்லை.

சத்துவமே சலனமில்லாத நல்ல குணம். விரும்பினா அதிலேயே இருக்கலாம். எவ்வளவு நேரம், நாள் வேணுமனாலும். "பத்து ரூபாய் தரேன் இன்னிக்கு சாந்தமாவே இரு. யார் கோபப்படுத்தினாலும் கோவம் வராம பாத்துக்க" ன்னா அது கொஞ்சம் முயற்சியோட முடிகிற காரியம்தான். ஆனா லட்ச ரூபா கொடுத்தாலும் கோபத்தையோ சோகத்தையோ வர வைக்கவும் முடியாது, நிலையா நிறுத்தி வைக்கவும் இயலாது.

18.திருஷ்டாந்தத்துடன் விடை கூறி முடித்தல்

களங்கமற்ற கண்ணாடி தன்முன் வேறோர் களங்கமற்ற கண்ணாடி காட்டும் போது
விளங்கியதன் மயமாகி யபேதமாகி விகற்பமின்றி நிருவிகற்ப மானாற் போல
அளந்தறியப் படாவிடிவாய்ச் சத்தாய்ச் சித்தா யானந்த மாம்பிரமத் தைக்கிய மான
உளந்தெளிந்த படியிருந்தா லுலக மெங்கே யுலைவெங்கேயென்று சங்கையொழிந்திடாயே

களங்கமற்ற கண்ணாடி தன்முன் வேறோர் களங்கமற்ற கண்ணாடி காட்டும் போது விளங்கிய [து போல] தன் மயமாகி அபேதமாகி விகற்பமின்றி நிருவிகற்பமானால் போல அளந்தறியப் படா விபுவாய் (வ்யாபகமாய்) சத்தாய் சித்தாய் ஆனந்தமாம் பிரமத்து ஐக்கியமான உளந்தெளிந்த படி இருந்தால், உலகம் எங்கே? உலைவு எங்கே? என்று சங்கை ஒழிந்திடாயே



Post a Comment