Pages

Wednesday, June 10, 2009

மனசோட சக்தி



சில காட்டுத்தீக்கள் எப்படி உண்டாகுதுன்னா யாராவது பிக்னிக் போயிட்டு பாட்டில் ஏதாவதை காலியானதை அப்படியே போட்டுவிட்டு போயிடுவாங்க. சில நாட்களிலே சூரிய கதிர்கள் அதன் வழியா புகுந்து அது லென்ஸ் மாதிரி வேலை செய்வதாலே குவிஞ்சு பக்கத்தில இருக்கிற காய்ஞ்ச புல்லை பத்த வைக்கும். இது அப்படியே பரவி புதர்கள் மரங்கள் பிடிச்சுக்கொண்டு எரிய ஆரம்பிச்சுடும். இதனாலேயே பாட்டில் கொண்டு போகக்கூடாதுன்னு தடை விதிச்சு இருக்கிற பூங்காக்கள் உண்டு.

சாதாரணமா கடும் கோடையிலே "அப்பா வெயில் கொளுத்துது"ன்னு நாம சொன்னாலும் எவ்வளோ வெயில் அடிச்சாலும் எதுவும் பத்திக்கிறதில்லை. ஆனா குவிக்கப்பட்ட கதிர்கள் ஒரு காட்டையே எரிக்கும். அதைப்போல மனசோட சக்தி சாதாரணமா விஷயங்களை பற்றுகிற ரஜோ, தமோ குணங்களா பரவி இருக்கு. சத்வ குணம் மாறாக நிச்சலனமானது. மனசோட வல்லமை லென்ஸால குவிக்கப்பட்ட வெயில் மாதிரி சத்துவத்தில குவிஞ்சா அதோட வல்லமை காட்டுத்தீ போல அபாரமா ஆகும். அதனால அப்படி குவிக்க முடியறவங்க சாதாரணமா பலரும் செய்ய முடியாததை எல்லாம் செய்வாங்க. முடிவில மாயையையே நீக்கி பரம்பொருளை அடையவும் கூட இந்த சக்தியால செய்ய முடியும்.

இப்படி மூன்று குணங்களிலே ஒன்னு மேலெழும் போது மற்றது அடங்கும் ன்னு யோக வாசிட்டத்திலேயும் சொல்லியிருக்கு.

வாழுஞ்சத்துவ மற்றையவ்விரண்டையு மறைத்துத்
தாழு மற்றையவ் விரண்டுமத்தமோகுணந்தழைப்பின்
வீழும் சத்துவந் தமங்களவ்விரசதம் விளைவி
னூழிந் மற்றவை யிரண்டுந்தாழ்ந் தொன்றுமிக்குளவாம்.
வாழும் சத்துவ மற்றை அவ்விரண்டையும் மறைத்துத்
தாழும் அற்றை அவ் விரண்டும். அத் தமோ குணந்தழைப்பின்
வீழும் சத்துவம். தமங்கள் அவ்விரசதம் விளைவின்
ஊழின் மற்றவை இரண்டுந் தாழ்ந்து ஒன்று மிக்க உளவாம்.

18.திருஷ்டாந்தத்துடன் விடை கூறி முடித்தல்

களங்கமற்ற கண்ணாடி தன்முன் வேறோர் களங்கமற்ற கண்ணாடி காட்டும் போது
விளங்கியதன் மயமாகி யபேதமாகி விகற்பமின்றி நிருவிகற்ப மானாற் போல
அளந்தறியப் படாவிடிவாய்ச் சத்தாய்ச் சித்தா யானந்த மாம்பிரமத் தைக்கிய மான
உளந்தெளிந்த படியிருந்தா லுலக மெங்கே யுலைவெங்கேயென்று சங்கையொழிந்திடாயே

களங்கமற்ற கண்ணாடி தன்முன் வேறோர் களங்கமற்ற கண்ணாடி காட்டும் போது
விளங்கிய [து போல] தன் மயமாகி அபேதமாகி விகற்பமின்றி நிருவிகற்பமானால் போல அளந்தறியப் படா விபுவாய் (வ்யாபகமாய்) சத்தாய் சித்தாய் ஆனந்தமாம் பிரமத்து ஐக்கியமான உளந்தெளிந்த படி இருந்தால், உலகம் எங்கே? உலைவு எங்கே? என்று சங்கை ஒழிந்திடாயே

ஒரு மாசில்லாத கண்ணாடி முன்னே இன்னொரு மாசில்லா கண்ணாடியை காட்டினா இதுவும் அதே போல நிர்மலமா தோணும் இல்லையா? அது போல பிரமத்தைப்போல நிர் மலமா, மாசில்லாத, சாந்தமாய் இருக்கிற உன் உள்ளம் அகண்டமாய், ஆனந்தமாய் இருக்கிற அந்த பிரம்மத்தில் ஐக்கியமாகி தெளிவாக நின்னுதுன்னா இந்த உலக தோற்றமும் ஏது? சலனமேது? என்று உணர்ந்து சந்தேகத்தை போக்கிக்க என்கிறார். இப்ப பாத்தவைகளால சலனமில்லாத களங்கமில்லாத உள்ளமே அறிவு ஆன்மா ன்னு புரியும். இது நடக்கிற விஷயங்களுக்கு சாட்சியா மட்டும் இருக்கு.

5 comments:

Geetha Sambasivam said...

காட்டுத் தீயும், கண்ணாடியும் அருமையான விளக்கம், எளிமையும் கூட. நன்றி.

yrskbalu said...

dear vasudevan ji,

whatever explained today- this is possible only by practice.

thatswhy the mahans said stay with

one sadna,one guru . do practice without worrying results.

results will take care by guru/god

திவாண்ணா said...

நன்னி கீதா அக்கா!
@ பாலு.
ஆமாம் ஞானம் சாதனையாலேதான் வரும். நாம் இங்கே பாக்கிறது தியரிதான்.
உண்மையான குரு கிடச்சாச்சுன்னா அப்புறம் ஒண்ணுமே தேவையில்லை. அவர் வழிகாட்டலிலே கடை தேறிடலாம்.

Kavinaya said...

//காட்டுத் தீயும், கண்ணாடியும் அருமையான விளக்கம், எளிமையும் கூட.//

ரிப்பீட்டேய்!

சொல்வதையெல்லாம் கேட்டா ஆ...சையா இருக்கு... ஹும்...

திவாண்ணா said...

/சொல்வதையெல்லாம் கேட்டா ஆ...சையா இருக்கு... ஹும்...//

நல்ல விஷயத்துக்கு ஆசை படணும்தான்!