Pages

Thursday, December 3, 2009

விசார சங்கிரகம்-1
ஓம்
விசார சங்கிரகம்
1. ஸ்வாமி எப்போதும் துக்கமற்ற நித்யானந்த நிலை எய்துதற்குரிய உபாயம் யாது?

எங்கெங்கே சரீரம் உள்ளதோ அங்கங்கே துக்கம் உள்ளது என வேதத்திற் கூறியுள்ளதன்றி எல்லோர்க்கும் பொதுவான பிரத்யக்ஷ அனுபவமாவிருத்தலான் எப்போதும் சரீரமில்லாத தனது யதார்த்த சொரூபம் இன்னது என்று விசாரித்துணர்ந்து உள்ளவாறிருத்தலே அந்நிலை எய்துதற்கு உரிய உபாயம்.

2. தனது யதார்த்த சொரூபத்தை விசாரித்துணர்வது என்றால் என்ன?

எல்லோர்க்கும் சுபாவமாக உண்டாகும் போனேன் வந்தேன் இருந்தேன் செய்தேன் என்பதாகிய அநுபவங்களில் இருந்தே அவ்வநுபவ நிகழ்ச்சிக்குரிய வினைகளுக்கு முதலாக நான் என்றதோர் போதம் (நினைப்பு) தோற்றுகிறதல்லவா? அந்த போதத்தின் உண்மை வடிவை (நான் யார் என்ற விசாரத்தால்) விசாரித்து தானாயிருப்பதே தனது யதார்த்த சொரூபத்தை விசாரித்து உணர்வது என்பதாம்.

3. நான் யார் என்று விசாரிப்பது எப்படி?
போதல் வருதல் ஆதிய தொழில்கள் தேகத்தினவே யன்றி வேறின்மையால் தேகமே நானென்று சொல்வதாக அன்றோ தெரிகிறது? பிறத்தற்கு முன் தேகம் இன்மையாலும் பஞ்ச பூதாத்மகம் (பஞ்ச பூதங்களால் ஆனது) ஆதலானும் சுழுத்ததியில் அபாவம் (இல்லை) ஆதலானும் பிணமாக போதலானும் அதை நான் என்னும் போதமாக சொல்லுதல் கூடுமா? கட்டையை போன்ற ஜட பதார்த்தம் ஆகிய இச்சரீரம் நான் தான் என்று ஸ்புரித்து வழங்கி வருமா> இப்படி அவாந்தரமாகத் தேகத்தை குறித்து நான் என்று எழும் போதமே தற்போதம் என்றும் அகங்காரம் என்றும் அவித்தை என்றும் மாயை என்றும் மலம் என்றும் ஜீவன் என்றும் பலவிதமாகச் சொல்லப்படுகிறது. இதைப்பற்றி விசாரியாது இருக்கலாமா?விசாரித்து உணர்ந்து உய்தற்கன்றோ சகல சாஸ்திரங்களும் ஏற்பட்டு அத்தற்போத நாசமே முக்தி என்று கோஷிக்கின்றன. ஆகவே பிணமான தேகத்தை பிணம் என்றே இருத்தி வாக்கினாலும் நானென்று சொல்லாமல் இருந்து இப்போது நான் என்று எழுவது எது என கூர்மையாய் விசாரித்தால் அப்போது ஹ்ருதயத்தில் 'நான் நான்' என்னும் சப்தமில்லாமல் ஓர் வித ஸ்புரிப்பு அதாவது கண்டமாயும் (துண்டாகவும்) நாநா வாகவும் இருந்த நினைவுகள் போய் அகண்டமாகவும் ஏகமாகவும் (ஒன்றாகவும்) ஞெப்தி மாத்திரம் தனக்குத்தானே தோற்றிக்கொண்டு இருக்கும். அதனை விடாமல் சும்மாவிருந்தால் தேகம் நானென்னும் அகங்கார ரூப ஜீவ போதத்தை முற்றிரும் நாசப்படுத்தி கர்ப்பூரத்தில் பற்றிய நெருப்பு போல் முடிவில் தானும் சாந்தமாய் விடும். இதுவே மோக்ஷம் என்று பெரியோர்களாலும் சுருதிகளாலும் சொல்லப்படுகிறது.

4 comments:

திவாண்ணா said...

என் கை வரிசையை காட்டலை, வேண்டி இராது என்று நினைக்கிறேன்

கிருஷ்ண மூர்த்தி S said...

கைவரிசை, கொஞ்சம் உதவியாக இருக்கும். உதாரணமாக ஞெப்தி மாத்திரம் என்ற ஒரு பதப்ப்ர்யோகம் என்னை நிறையவே தடுமாற வைத்தது.

சம்ஸ்க்ருதம் அறிந்தவர்களுக்கு, மணிப்ரவாளம் தெரிந்த பெரியவர்களுக்குப் புரியக் கூடியாதாய் இருக்கும் பழைய வார்த்தைகளை முடிந்த வரை, தற்காலம் புழக்கத்தில் இருக்கும் வார்த்தைகளைக் கொண்டோ அல்லது கொஞ்சம் கூடுதல் விவரம் சேர்த்தோ சொல்லிவருவது என்னை மாதிரி அரைகுறைகளுக்குக் கொஞ்சம் புரிய வைக்கிற பேருபகாரமாகவும் இருக்கும்!

yrskbalu said...

gi,

starting itself started in top gear.

it needed some editing and your usual touches. so others also will benefited.

கவிநயா said...

டம்மீஸ்க்கு ஆன்மிகம்னு சொல்லிட்டு இப்படி கை விடுவது நியாயமா??