Pages

Wednesday, December 23, 2009

விசாரசங்கிரஹம் -7



12.பிராரப்தாநுசாரமான வ்யவகாரங்களை செய்ய வேண்டியிருக்கிற மனதிற்கு வ்யவகார நிலையிலேயே முற்கூறிய சொரூபாநுபவம் வாய்க்குமா?

ப்ராஹ்மணன் என்ன வேஷம் போட்டுக்கொண்டு ஆடினாலும் அவன் மனத்தில் ப்ராஹ்மணனென்னும் பாவம் எப்படியோ அப்படியே எந்த வ்யவகாரங்களிரிருந்தாலும் தேகாதிகள் நானெனத் தோற்றாமல் ஆன்மா நானென்னுந் திடபாவம் வரவேண்டும். மனம் தன் நிலையை விட்டுப் பஹிர் முகப்படுமானால் உடனே "ஓ ஓ! தேகாதிகள் நாமல்லவே! நாமார்?” என்னும் விசாரத்தால் மறுபடியும் தன்னிலையிலேயே யிருத்த வேண்டும். நானாரென்னும் விசாரம் சர்வ துக்க நிவிருத்திக்கும் பரமானந்த ப்ராப்திக்குமான முக்கிய ஹேது. இப்படித் தன்னிலையில் மனம் அடங்க அடங்க, யாதொரு தடையுமில்லாமல் சொரூபானுபவம் தானாகவே வாய்க்கும். அப்பால் விஷய துக்கங்கள் மனதில் தாக்கா. எல்லாம் ஸ்வப்நம் போல் பற்றற்றுத் தோன்றும். எப்போதும் சர்வ பரிபூரணமாயுள்ள ஸ்வாத்ம பாவனையை மறவாதிருத்தலே முடிவான பக்தியும் யோகமும் ஞானமும் மற்றுமுள்ள எல்லா தபசுகளுமா மென்று பெரியோர் கூறுகின்றனர்.

பிறந்துட்டோம். வேற வழியில்லை. கர்மாவை அனுபவிச்சே தீர்க்கணும். பிராரப்தம் அப்படி இருக்கு. அதுக்கு தகுந்தபடி வ்யவகாரங்களை செய்ய வேண்டியிருக்கிற மனசுக்கு வ்யவகார நிலையிலேயே முன்னே சொன்ன சொரூபாநுபவம் வாய்க்குமா?

ஒத்தன் என்ன வேஷம் போட்டுக்கொண்டு ஆடினாலும் மேடையிலே ஜாதி இல்லைன்னு பேசினாலும் அவன் மனசில நான் இன்ன ஜாதி என்கிற பாவம் எப்படி போகாம இருக்குமோ, அப்படியே எந்த வ்யவகாரத்திலே இருந்தாலும் தேகம் முதலானது நான் ந்னு தோணாம ஆன்மா நான் என்கிற திடபாவம் வரணும். மனம் அந்த தன் நிலையை விட்டு வெளியே போகுமானால் உடனே "ஓ ஓ! தேகம் முதலானதெல்லாம் நாம இல்லையே! நாம் யார்?” என்கிற விசாரத்தால மறுபடியும் தன்னிலையிலேயே அதை கொண்டு வரணும். நான் யார் என்கிற விசாரம் எல்லா துக்கங்களும் போவதற்கும், பரமானந்தம் கிடைக்கவும் முக்கிய ஹேது. இப்படித் தன்னிலையில் மனம் அடங்க அடங்க, யாதொரு தடையுமில்லாமல் சொரூபானுபவம் தானாகவே வாய்க்கும். அதுக்கு அப்புறமா விஷய துக்கங்கள் மனசில தாக்கா. எல்லாம் கனவு போல பற்று இல்லாம தோணும். எப்பவும் சர்வ பரிபூரணமா இருக்கிற ஸ்வாத்ம பாவனையை மறக்காம இருக்கிறதே முடிவான பக்தியும் யோகமும் ஞானமும் மத்த எல்லா தபசுகளுமாம் ன்னு பெரியவங்க சொல்கிறாங்க.


2 comments:

yrskbalu said...

மனம் அந்த தன் நிலையை விட்டு வெளியே போகுமானால் உடனே
நாம் யார்?” என்கிற விசாரத்தால மறுபடியும் தன்னிலையிலேயே அதை கொண்டு வரணும்.

this is one of practice for mind explained in upanised.

for practising itself we need great amount of vivega and vairagya.

திவாண்ணா said...

ஆமாம் பாலு சார். இங்கே பகவான் சொல்கிறதெல்லாம் ரொம்பவே சாதனை பண்ண ஆசாமி கேட்கிற கேள்விகளுக்கான பதிலகள்தான். இது அட்வான்ஸ்ட். அதனால்தான் முதல்லேயே எச்சரிக்கை கொடுத்தேன்!
:-))