Tuesday, December 1, 2009
விசார சங்க்ரஹம்
கம்பீரம் சேஷையர் என்பவர் ஒரு ராம பக்தர். 1900 ஆண்டு வாக்கில் ஸ்ரீ ரமண பகவான் விரூபாக்ஷி குகையில் வசித்த காலத்தில் பகவானிடம் வரலானார். அது முதல் பகவானின் எளிய தொண்டனாய் தன்னைக் கருதிக்கொண்டு குகையை துப்புரவாக வைத்துக் கொள்வது முதல் பல தொண்டுகளை செய்து வந்தார். அவருக்கு ராஜ யோகம் போன்றவற்றில் ஈடுபாடு உண்டு. ராஜ/ஞான யோகங்கள் பற்றி ஸ்வாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைகளை படித்துவந்தார். அதில் எழும் சந்தேகங்களை பகவானிடம் காட்டி நிவர்த்தி செய்து கொள்வதுண்டு. அவை ஆங்கிலத்தில் இருக்கும். அம்மொழியில் புலமை அதிகம் இல்லாததால் தமக்கு தெரிந்த தமிழ் மொழியில் புரிந்து கொள்ள பகவானை தமிழில் அந்த உபதேசங்களை எழுதித்தர வேண்டினார். பகவானும் சமாதியில் இல்லாத போது அவ்வாறே துண்டு காகிதங்களில் எழுதிக்கொடுத்தார். இப்படி இரண்டு ஆண்டுகள் சேகரித்தவை ஒரு நோட்டுப்புத்தகமாக உருவாயிற்று. பின்னால் இது சிலரால் பகவான் சந்நிதியிலேயே தொகுக்கப்பட்டு "விசார சங்கிரஹ வினா- விடை" என்று பிரசுரிக்கப்பட்டது.
இது இப்போது நமக்கு பயனாகக்கூடுமோ என்று தட்டச்சு செய்யலானேன். மொழி நடை நமக்கு இப்போது பரிச்சயமில்லாதது. ஞான காண்டம் படித்தவர்களுக்கு மட்டுமே இது பயனாகும். ஆகவே கூடவே எளிய மொழியில் விளக்கங்கள் தேவையாக இருக்கிறது.
வாரம் இரண்டோ மூன்றோ பதிவுகளாக வெளியாகும்.
Labels:
ரமணர்,
விசார சங்க்ரஹம்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
மொழி நடை மட்டும் தானா?
கேள்விகள் கேட்பதற்கே இன்றைக்குத் தோன்ற விடாமல் டிவி சீரியல்களில் பொழுதையும், மனசையும் தொலைத்துக் கொண்டிருக்கிற கால அல்லவா இது!
ஏன் என்ற கேள்வி இங்கே கேட்காமல் வாழ்க்கை இல்லை தான்! அதைக் கூடப் பழைய பாடலாக, எப்போதாவது தேடித் பிடித்துத் தான் கேட்கவேண்டியிருக்கிறது!
எழுதுங்கள் அண்ணா! பாடம் கேட்பதற்கு, மதுரையில் ஒருத்தன் ஆவலாகக் காத்திருக்கிறேன்!
gi,
i am ready for feast
ஆஹா!, அடுத்ததூ ஆரம்பிச்சாச்சா?...
நான் உங்களை 'ப்ரபஞ்ச சாரம்' எழுத விண்ணப்பிக்கலாம் என்று இருந்தேன்.நேயர் விருப்பத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் அண்ணா.
பின்னூட்டம் இட்டவங்களுக்கு நன்னி!
@மௌலி ,பயமுறுத்தாதேப்பா!
திவா அண்ணாவைக் கூடப் பயமுறுத்துவதற்கு இங்கே ஆட்கள் இருக்கிறார்களா என்ன:-))
Post a Comment