Pages

Monday, October 11, 2010

விவேகிக்கு துக்கம்!



परिणामतापसंस्कारदुःखैर्गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ।।15।।
பரிணாம தாப ஸம்°ஸ்கார து³​:கை²ர் கு³ண வ்ரு«த்தி விரோதா⁴ச்ச து³​:க²மேவ ஸர்வம்° விவேகிந​: || 15||

{गुणवृत्ति =गुणवृत्य கு³ண வ்ரு«த்தி -கு³ண வ்ரு«த்தய - பாட பேதம்.}

(பரிணாமம்) துக்க வடிவான ராகத்தின் மாறுதல் ரூபமாகவும்; (தாபம்) துக்கத்தையோ துக்க சாதனத்தையோ எண்ணும்போது த்வேஷ ரூபமாகவும்; (ஸம்ஸ்காரம்) சுகானுபவத்திலிருந்து சித்தத்தில் உண்டாகும் வாசனா ரூபமாகவும், மூவகையாக உள்ள துக்கங்களுடன் சேர்ந்திருப்பதால், குணங்களுக்கிடையே விரோதம் ஏற்படாததால் (திருஷ்ட அத்ருஷ்டமாக உள்ள விஷய சுகங்கள் ) எல்லாமே யோகத்தில் பிரவேசம் செய்த விவேகிக்கு துக்கமாகவே ஆகிறது.
ஆசை இல்லாமல் சுகத்தை நாடுவதில்லை. ஒரு விஷயத்தில் உண்டாகுமாசையே அது கிடைத்த போது சுகமாக பரிணாமிக்கிறது - மாறுகிறது. அது கிடைக்கவில்லையானால் தாபம் உண்டாகிறது. கிடைக்காமல் செய்தவரிடம் துவேஷம் உண்டாகிறது
ஒரு போதும் இந்திரியங்களின் ஆசையை பூர்த்தி செய்ய இயலாது. அனுபவிப்பதால் இன்னும் வேண்டும் என்ற எண்ணம் உண்டாகுமே தவிர போதும் என்று தோன்றாது. அதனால் அனுபவித்து ஆசையை தீர்க்க முடியாது. அது எரிந்து கொண்டிருக்கும் பெரு நெருப்பை நெய் கொட்டி அணைப்பது போலாகும். ஒரு விஷயத்தை அனுபவித்து உண்டாகும் சுகம் மேன் மேலும் அதை விரும்பி தேட வைக்கிறது. ஆகவே விஷய சுகம் என்பது நாம் அடைந்த காரியம் ஆனாலும், அதற்கும் ஆசை என்கிற துக்க வடிவ காரணத்துக்கும் வித்தியாசம் இல்லை.
ஆகவே உண்மையில் விஷயங்களில் இந்திரியங்கள் போகாமல் திருப்புவதே சுகம்; ஆசையை முன்னிட்டு இந்திரியங்கள் விஷயங்களில் செல்லுதலே துக்கம்.


No comments: