प्रकाशक्रियास्थितिशीलं भूतेन्द्रियात्मकं भोगापवर्गार्थं दृश्यम् ।।18।।
ப்ரகாஶக்ரியாஸ்தி²திஶீலம்° பூ⁴தேந்த்³ரியாத்மகம்° போ⁴கா³பவர்கா³ர்த²ம்° த்³ரு«ஶ்யம் || 18||
ப்ரகாஶ க்ரியா ஸ்தி²தி ஶீலம்° பூ⁴த இந்த்³ரிய ஆத்மகம்° போ⁴க³ அபவர்க அ³ர்த²ம்° த்³ரு«ஶ்யம்
த்ருஷ்யம் எனப்படுவது..
புத்தியின் வளர்ச்சி (வ்ருத்தி) மூலமான பிரகாசத்தையும்; ப்ரயத்னம் (முயற்சி), சேஷ்டை ஆகிய செயல்கள் (க்ரியா) இவற்றையும்; இவ்விரண்டையும் தடை செய்யும் விஷயத்தையும் இயல்பாக உடையது.
மேலும் ஸ்தூல பஞ்ச பூதங்கள்; ஸூக்ஷ்மமான பஞ்ச தன் மாத்திரைகள்; ஞான கர்ம இந்திரியங்கள்; ஆத்மா இவற்றின் சமூகமாகவும், விஷய சுக துக்க மோக்ஷங்களின் பலன் தருவதாகவும் ஆகிறது.
புத்தி வ்ருத்தியால் உண்டாகின்ற பிரகாசம் ஸத்வ குணத்தின் இயல்பு (தர்மம்). க்ரியா ரஜோ குணத்தின் இயல்பு. இவற்றை தடை செய்வது தமோ குணத்தின் இயல்பு - தர்மம். போகமும் மோக்ஷமும் புத்தியால் அறியப்படுவன. ஆகவே அதையே சார்ந்தவை. ஒரு அரசனின் படை பெறும் வெற்றி தோல்வி அரசனையே சார்வது போல புத்தி அறிகிற விஷயங்கள் அதன் எஜமானனான புருஷனை சார்கிறது. உண்மையில் புருஷன் அசங்கன்; போக மோக்ஷத்துக்கு சம்பந்தம் இல்லாதவன்.
முக்குணங்கள் சேர்ந்து சரீரத்தை உண்டாக்கும் போது சத்வ குணம் மிகுந்தால் அது தேவ சரீரமாகும். தமோ குணம் மிகுந்தால் தாவர மிருக சரீரமாகும். இந்த மூன்று குணங்கள் இல்லாத ஜீவன் ஏதும் ப்ரக்ருதியில் இருந்து உண்டான லோகம் எதிலும் இல்லை.
No comments:
Post a Comment