Pages

Wednesday, October 13, 2010

ஸம்சாரத்தின் காரணம்:



द्रष्टृदृश्ययोः संयोगो हेयहेतुः ।।17।।
ஸம்சாரத்தின் காரணம்:
த்³ரஷ்ட்ரு«த்³ரு«ஶ்யயோ​: ஸம்°யோகோ³ ஹேயஹேது​: || 17||

த்ரஷ்டாவுக்கும் த்ருஷ்யத்துக்கும் சேர்க்கையானது வரவுள்ள துன்பத்திற்கு (காண்பவனுக்கும் காணப்படுவதற்கும் உள்ள சேர்க்கையானது ஹேயத்துக்கு) காரணமாகிறது.

புருஷனே த்ரஷ்டா (காண்பவன்). ப்ரக்ருதி புருஷனை விட வேறானது. ப்ரக்ருதியின் வடிவம் சுகம், துக்கம், மோஹம் ஆகியவை. ப்ரக்ருதியும் அதன் எல்லா காரியங்களும் த்ருச்யம் (காணப்படுவது) ஆகும். இவை அனத்துமே புத்தி மூலமாக அறியப்படுவதால் புத்தியையே காணப்படுவது எனச்சொல்லலாம். ஆகவே புருஷனுக்கும் புத்திக்கும் ஏற்படும் சேர்க்கையே ஸம்ஸாரத்துக்கு காரணமாகும்.
புத்தி புருஷனுக்கு வெகு அருகில் இருக்கிறது. காந்தக்கல் இரும்பை இழுப்பது போல புத்தி புருஷனை இழுக்கப்பார்க்கிறது. புருஷனின் நிழல் போன்ற ஒன்றை இழுத்தும் விடுகிறது. தான் வேறு, புருஷன் வேறு அல்ல என்பதாக இது காட்டுகிறது. பிரதிபிம்பமான புருஷனுக்கு இந்த புத்தி மூலம் புலப்படும் அத்தனையும் போக விஷயங்கள் ஆகின்றன. இதனால் புத்தி பார்க்கப்பட்ட விஷயமாயிற்று. உண்மையில் எதனுடனும் சேராது இருக்கும் புருஷன் த்ரஷ்டாவாகிறான். இப்படியாக ஒரு சேர்க்கை அவித்தையால் ஏற்படுகிறது. அவித்தை அனாதி - துவக்கமில்லாதது; ஆகையால் இந்த சேர்க்கையும் அனாதியே.
பிரலய காலத்தில் கூட க்லேசங்களும் கர்மமும் வாஸனைகளும் அந்தக்கரணத்துடன் ப்ரக்ருதியில் ஒடுங்குகின்றன. கோடை காலத்தில் மண்ணோடு மண்ணாக கலந்த விதைகள் மழைக்காலத்தில் மீண்டும் முளைப்பது போல சிருஷ்டி காலத்தில் இவை மீண்டும் வெளிக்கிளம்புகின்றன.
துக்கத்துக்கு காரணமான இந்த சேர்க்கையை யோக சாதன அனுஷ்டானத்தால் போக்க முடியும். செருப்பு மாட்டிக்கொண்டு நடப்பவன் காலில் முள் தைக்காததைப்போல சேர்க்கையான காண்பவன், காணப்படுவது, காணப்படும் செயலான சம்யோகம் ஆகிய மூன்றும் வெவ்வேறு என அறியும் யோகி இவை ஒன்று சேர்வதை தவிர்க்கும் வழிகளை கடைபிடித்து துக்கத்தை தொலைக்கிறான். மாறுதல் அடையும் சித்தமே தாபம் அடையும்; ஆன்மா தாபமடையாது. சித்தத்தில் பிரதி பலித்த ஆன்மாவின் நிழலே தாபமடைந்தது போல தோன்றுகிறது.
அடுத்து காணப்படுவதின் சொரூபத்தை பார்க்கலாம்.

No comments: