विवेकख्यातिरविप्लवा हानोपायः ।।26।।
விவேகக்²யாதிரவிப்லவா ஹாநோபாய: || 26||
விவேகக்²யாதி: = ப்ரக்ருதி சம்பந்தமில்லாத புருஷனை சாக்ஷாத்கரிப்பது; அவிப்லவா = (மித்யாக்ஞான வாசனையால்) தடை செய்யப்படாத; ஹாந உபாய: = மோக்ஷத்துக்கு காரணமாகிறது.
ப்ரக்ருதி வேறு புருஷன் வேறு என்று அறிவதே விவேகக்யாதி. இது சாஸ்திர அப்யாஸத்தால் உண்டாகும். இருப்பினும் வெகு கால பழக்கத்தால் இது நாசமாக வாய்ப்பு இருக்கிறது. ஆகவே விவேக க்யாதி ஏற்பட்டதும் இதை அடிக்கடி மனனம் செய்து நிலைநாட்டி விட்டால் எல்லா விஷயங்களிடத்திலும் வைராக்கியம் ஏற்படும். புருஷன் பால் ஈர்க்கப்பட்ட சித்தம் அதையே ஆவ்ருத்தி செய்து வளர்த்துவரும். இந்த த்யான மகிமையால் இயங்கு சக்தியான புருஷ பிரதி பிம்பத்தை அனுபவிக்கலாம். இது வாசனைகளால் ஏற்படும் பொய்யறிவை நாசமாக்கும். பிராரப்தமான சரீரம் தொலைந்து போகும். இனி துக்கமே ஏற்படாத மோக்ஷம் கிடைக்கும்.
No comments:
Post a Comment