Thursday, July 7, 2011
உரத்த சிந்தனைகள் -1
உரத்த சிந்தனைகள்:
சும்மா லாஜிக்கலான வாதமாக இல்லாமல் மனசு ஓடுகிற ஓட்டத்தை அப்படியே எழுத யோசனை. அதனால் லாஜிக்காக இல்லாமல் ஆரம்பித்த விஷயத்தை விட்டு எங்கு வேணுமானாலும் இது போகும்.
-------------
இன்றைய சிந்தனை கொல்லாமை பற்றி.
அன்றாட வாழ்விலே எத்தனை கொலை செய்து கொண்டிருக்கிறோம்! ஆச்சரியமாக இருக்கு. சிலது கண்ணுக்கு புத்திக்கு தெரிந்தே நடக்கிறது. பலதும் புத்தி வரை வராமலே நடக்கிறது. அட! அப்படியான்னா ஆமாம். யோசித்து பார்த்தா ஆமாம்ன்னு ஒத்துக்கொள்ள வேண்டி இருந்தாலும், அட இப்படித்தான் பல காலமா செய்து கொண்டு இருக்கிறோம்; எல்லோருமே செய்கிறார்கள்; அதில என்ன இருக்கு ன்னு என்றெல்லாம் தோன்றலாம். அதை பிழை சொல்லவரவில்லை.
சர்வ சாதாரணமாக வீட்டில் கொசு வத்தி ஏற்றுகிறோம். கொஞ்சமாவது கொசுக்கள் இறந்து போகின்றன. விளம்பரம் என்னவோ எங்க …. ப்ரான்ட் கொசு வத்தி தேடித்தேடி அழித்துவிடும்ன்னு இருந்தாலும் பல கொசுக்கள் இதற்கு பெப்பே காட்டிவிட்டு உயிர் வாழ்கின்றன. நாளடைவில் கொசுக்கள் கொசு வத்தி புகையை சகிக்கப்பழகி விடும் போலும். கொசு வத்தி மேலேயே கொசு உக்காரும் என்று கூட சொல்கிறார்கள்.
ஒரு தமாஷ் பாத்தீங்களா? சிங்கம் புலியைக்கூட கூண்டில் அடைத்துவிடும் மனுஷன் கொசுவுக்காக தான் வலைக்குள்ள புகுந்துக்கறான். அப்ப கொசுதானே மோர் பவர்புல்?
ஆமாம். கொசு வலை கட்டிக்கொள்வதே நல்லது. கொல்லாமையும் கடை பிடிக்கலாம்; கொசு கடியில் இருந்தும் தப்பலாம். கண்ட கெமிக்கல் புகையை சுவாசித்து அவஸ்தை படவும் வேண்டாம். நான் சின்ன பையனாக இருந்த போது இதுவே பலரும் பயன்படுத்துவதாக இருந்தது.
இதில் பிரச்சினையே வலைக்கு உள்ளே புகுந்துவிடும் கொசுக்கள்தான். அதால வெளியே போகவும் முடியாது. ராத்திரி முழுக்க கடிச்சுகிட்டே இருக்கும். கடைசில நாம் நிம்மதியா தூங்காம புரண்டு படுக்கும்போது நசுங்கி செத்துப்போகும். இதுக்காக தினசரி ராத்திரி விளக்கை அணைத்த பிறகு டார்ச் அடிச்சு உள்ளே யாரும் வரவேற்காத விருந்தாளி இருக்காங்களான்னு சோதிக்க வேண்டி இருக்கு. அப்படி இருந்தாலும் கொல்ல மனசில்லாம பிடிச்சு பிடிச்சு வலைக்கு வெளியே விடறதா இருக்கு. அதுல இப்ப கொஞ்சம் எக்ஸ்பர்டைஸும் வந்தாச்சு.
இந்த கொசு விரட்டில பல வகை வந்தாச்சு. கம்பனிக்கு கம்பனி போட்டில புதுசு புதுசா ஏதாவது வருது. இன்னும் பவர்புல் இன்னும் அதிக நேரம் வேலை செய்யுதுன்னு வளர்ந்துகிட்டே இருக்கு. மின் கொசு விரட்டியிலே மின் சக்தியை இரட்டிப்பாக்கி ஒரு கம்பனி போட்டா இன்னொரு கம்பனி ஸ்லைடர் கண்ட்ரோல் போடறாங்க. ஆனா எது செஞ்சாலும் வர கொசு வந்துகிட்டுத்தான் இருக்கு.
பெண் கொசுக்கள்தான் கடிக்குது. அதுவும் கர்ப்பிணி பெண் கொசுக்கள். அதுங்க முட்டை போட ப்ரோட்டீன் வேண்டி இருக்கு. அதுக்காக நம்ம ரத்தத்தை உறிஞ்சுதுங்க. ஆண் கொசுக்கள் ஏதும் அறியாத அப்பிராணிங்க! இப்படி இருந்தாலும் கொசுக்களுக்கு சாதகமா பெண்கள் கொடி பிடிப்பாங்கன்னு பாத்தா அவங்க பேட் பிடிக்கிறாங்க. அதுவும் சரிதான்; டு பேட் பார் சம் ஒன் ன்னு ஆங்கில சொலவடை ஒண்னு இருக்கில்ல?
பக்கத்து வீட்டம்மா வெகு சிரத்தையா தினசரி ஒரு டென்னிஸ் பேட் எடுத்துகிட்டு வீசிகிட்டே இருக்காங்க. அவங்க வீச வீச பட் கட் ன்னு சத்தம் வேற. முதல்ல ஒண்ணும் புரியலை. அப்புறம் பாத்தா அது கொசு பேட்டாம்! பாட்டரி போட்டு மின்சாரத்த ஒரு கம்பி வலைக்குள்ள ஏத்தி …. நம்மை கடிக்கிற கொசுவை ஒரு ரெப்லெக்ஸ் ல பட்டுனு அடிக்கிறது புரியுது! கொசுவை தேடித் தேடி அழிச்சா அதை என்னன்னு சொல்லறது? வாழ அதுங்களுக்கு இல்லாத ரைட்ஸ் நமக்கு என்ன இருக்கு? அதுங்க என்னத்தான் பண்ணும்? ஆட்டை கடிக்க முடியுமா இல்லை மாட்டை கடிக்க முடியுமா? மனுஷனை கடிச்சுதான் உயிர் வாழனும்ன்னு விதிச்சிருக்கே?
இருந்தாலும் இது டூ மச் ன்னு சொன்னீங்கனா சரிதான். அது உங்க நிலைப்பாடு. சாதாரணமா க்ருஹஸ்தனுக்கு இவ்வளவு தூரம் கொல்லாமை விதிக்கலே. சன்னியாசிங்களுக்குத்தான் அஹிம்சை பரம தர்மம். (ப்லாக். பஸ் எழுதி ஹிம்சை பண்ணும் சன்னியாசிங்க பத்தி என்கிட்டே கேக்காதீங்க. அந்த ஆட்டத்துக்கு நான் வரலை!)
இருந்தாலும் ஆன்மீகத்தில முன்னேறனும்ன்னு நினைக்கிற எல்லாருமே யோசிக்க வேண்டிய விஷயம் இது. கொல்லாமை அவங்களுக்கும் தர்மம்.
--
பிகு. இதான் கொசு வத்தி சுத்தறதுன்னு சொல்லறாங்களோ? :-))
Labels:
உரத்த சிந்தனைகள்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
/*ஆமாம். கொசு வலை கட்டிக்கொள்வதே நல்லது. கொல்லாமையும் கடை பிடிக்கலாம்; கொசு கடியில் இருந்தும் தப்பலாம். கண்ட கெமிக்கல் புகையை சுவாசித்து அவஸ்தை படவும் வேண்டாம். நான் சின்ன பையனாக இருந்த போது இதுவே பலரும் பயன்படுத்துவதாக இருந்தது.*/
A doctor told me that one night inhale of this mosquito repellent is equal to a pocket of cigar smoking.
கொசுவலைக் கடையே இருந்தது வீட்டிலே. இப்போ மாதிரிக்குக் கூட ஒண்ணும் இல்லை, எங்கே போச்சுன்னும் தெரியலை,:( நாங்க அதிகமா மின் விசிறியை மட்டுமே பயன்படுத்திப்போம். யாரானும் விருந்தாளிங்க வந்தால் அவங்களுக்காகக் கொசு வத்திகளைக் கொடுக்கிறது உண்டு. :))))))
Post a Comment