மஹா பெரியவர் அவருடைய இளமைக்காலங்களில் தமிழ்நாடு முழுதும சுற்றுப்பயணம் செய்தார்.அந்த காலத்தில் பொழுது சாய்ந்தால் கிராமம் உறங்கி விடும். ஸ்வாமிகள் மேனா எனப்படும் பல்லக்கு மாதிரியான ஒரு கூண்டில் பயணம் செய்வார். அதிலேயே படுத்து உறங்கலாம். கிராம மக்களை தொந்திரவு செய்ய விரும்பாமல் அவ்வவ்போது இரவு முகாம் என்று ஒரு வழியில் உள்ள கிராமத்தில் ஏதோ ஒரு திண்ணையில்/ மரத்தடியில் மேனாவை இறக்கி விட்டு கூட வருவோர் ஒவ்வொரு திண்ணையை தேடி போய் விடுவார்கள்.
இது போல் ஒரு மழைக்காலத்தில் ஒரு கிராமத்தில் தங்கினர். மழை பெய்து ஓய்ந்து இருந்ததால் தவளைகள் உற்சாகத்துடன் இரவு முழுதும் ஓசை எழுப்பி கொண்டிருந்தன. பரிவாரத்தில் யாருக்கும் தூக்கம் வரவில்லை!
காலை எழுந்த பிறகு ஸ்வாமிகளை மற்றவர் கேட்டார்கள்: இரவு தூங்கிணீர்களா?
ஆஹா! இரவு முழுதும் சிவா த்யானத்திலேயே கழிந்தது!
இரவு முழுதும் தவளைகள் சத்தம் போட்டுக்கொண்டே இருந்தனவே?
ஆமாம்! அவை ஹர ஹர, ஹர ஹர என்றே சொல்லிக்கொண்டிருந்தன. அதனால் சிவ த்யானமே இரவு முழுதும்!
3 comments:
நாம் பார்க்கும் பார்வைதான் அனைத்திற்கும் காரணம்
ஹர ஹர, ஹர ஹர என்று தவளைகள் சத்தத்தை மொழியாக்கம் செயதமாதிரி நாமும் இஷ்ட தெய்வ நாமமாக க்ன்வர்ட் செய்து கொண்டால் தியானம் எளிதாகும்.
இம்மாதிரி நமக்கும் தோன்ற அந்த மஹாபெரியவரே அனுகிரஹம் செய்ய வேண்டும்.
Post a Comment