Pages

Thursday, July 14, 2011

மனசு...



என்னங்க, சுந்தரி அவளோட மாமியார் வீட்டுக்கு போனாளாம்.”
பறிமாறிக்கொண்டே பேச்சு ஆரம்பிக்கும்.
ம்ம்ம்ம்
வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு கேட்டுடலாம்ன்னு முடிவு பண்ணிட்டாளாம். மனசில இருந்த ஆதங்கத்தை எல்லாம் கடிதாசிலே எழுதி பையன் மூலமா கொடுத்துட்டாளாம்.
ம்ம்ம்ம்
அதை படிச்சுட்டு மாமியாரும் மாமனாரும் வந்து "ரொம்பவே வருத்தமா இருக்குமா. வேணா நாங்க உன் அப்பா அம்மாகிட்டே மன்னிப்பு கேட்கிறோம்" ன்னு சொன்னாங்களாம்.
ம்ம்ம்ம்
எல்லாம் வேஷம். இவங்களாவது வருத்தப்படறாவது?
ம்ம்ம்ம்…....
எல்லாம் உள்ளுக்குள்ள நிறைய வன்மம். பொறாமை.
----
இத்தனைக்கும் சுந்தரி இவங்களுக்கு உறவில்லை. ரொம்ப ஒண்ணும் தெரிஞ்சவங்களும் இல்லை. ஊரார் கதை. சுந்தரியோட மாமியாரையும் மாமனாரையும் திருமணத்தின் போது பார்த்தது. அவங்களை முன்னே பின்னே தெரியாது.
பின்ன ஏன் ரொம்ப தெரிஞ்ச மாதிரி விமர்சனம் செய்யணும்?
அதான் சிலர் இயல்பு.

எண்ணங்கள் வலிமையானவை. இதை அடிப்படையா வெச்சு பல வைத்தியங்களே உண்டு. சிலர் இறைவனை வேண்டிக்கொண்டு கொடுக்கும் திருநீரே மருந்தாகிவிடும் என்றும் நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடன் அதை உட் கொண்டால் சரியாகி விடுகிறது. அதே திரு நீற்றை நம்பிக்கையில்லாமல் உட்கொண்டு ஒண்ணும் வேலை செய்யலைன்னு சொல்கிறவங்க உண்டு. நமக்கு வேண்டப்பட்ட டாக்டர் ஒண்ணும் கவலைப்பட வேண்டாம் அதே மருந்தை தொடருங்கன்னு சொன்னா நிம்மதி ஆகிவிடுகிறோம். இந்த அட்வைஸுக்காக நானூறு கிலோமீட்டர் பயணம் செய்யத் தயாராக இருக்கிறோம். மற்ற படி அதே அட்வைஸ் எந்த எக்ஸ்பெர்ட் கிட்டேந்து வந்தாலும் ஏற்கிறதில்லை.
எல்லாம் மனசுதான் காரணம்.
இந்த மனசை சுத்தமா வெச்சுக்கொண்டால் என்ன?
பலரும் அப்படி வைத்துக்கொள்வதில்லை. அதற்கு முயற்சி செய்வது கூட இல்லை.
ஆன்மீகத்தில எந்த வழியானாலும் சுத்தி சுத்தி கடைசில மனசுலதான் வந்து நிக்கும்.

நம்மோட பிரச்சினைகளே ஏராளமாக இருக்க மற்றவர் பிரச்சினைகளில புகுந்து புறப்படுவது எந்த விதத்தில உதவப்போகுது? ஏன் எதிர் மறையான எண்ணங்களை வளர்க்கணும்? அவற்றை வெளியே விடணும்? இவற்றையே வளர்த்தால் அப்படியே நடந்தும் விடலாம்.

பலருக்கும் இள வயதில் உலகையே புரட்டிப்போட்டுவிட வேண்டுமென்று ஆசை பிறக்கிறது. நடக்கிற அநியாயங்கள் அக்கிரமங்கள் இவர்களை வெகுவாக பாதிக்கின்றன. போர் போர் ன்னு கிளம்பத் தோணுது. அப்புறம் அவரவர் பிரச்சினைகள் பெரியதாக ஆனதும் இதெல்லாம் காணாம போயிடுது.
இரண்டுமே தப்பா தோணுது.
எத்தனையோ ஜாம்பவான்கள் உலகை புரட்டிப்போட முயற்சி பண்ணியும் ப்ரக்ருதி அதன் போக்கிலேயே போய் கொண்டு இருக்கிறது.
அதுக்குன்னு ஒண்ணுமே செய்ய வேண்டாம், அநியாய அக்கிரமங்களை பார்த்துக்கொண்டு சும்மா இருன்னு சொல்ல வரலை. பலதும் நடக்கிறது. அதில நம்ம பங்கு என்ன? உருப்படியா ஏதாவது செய்ய முடியுமான்னு பார்க்கணும். சம்பந்தமில்லாத விஷயங்களில அல்லது நம்மால ஒண்ணும் செய்ய முடியாத விஷயங்களில மூக்கை நுழைக்க வேண்டாமே!
போகட்டும், எப்படியும் நமக்கு நிச்சயமா தெரியாத விஷயங்களில மனசை செலுத்தி, அலைக்கழிச்சு, நாமும் கஷ்டப்பட்டு, மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறதில அர்த்தமே இல்லை! (குறைஞ்சது சாப்பாட்டு நேரத்திலேயாவது இதெல்லாம் கிளப்பாம இருப்போம்.:-)


1 comment:

Geetha Sambasivam said...

போகட்டும், எப்படியும் நமக்கு நிச்சயமா தெரியாத விஷயங்களில மனசை செலுத்தி, அலைக்கழிச்சு, நாமும் கஷ்டப்பட்டு, மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறதில அர்த்தமே இல்லை! (குறைஞ்சது சாப்பாட்டு நேரத்திலேயாவது இதெல்லாம் கிளப்பாம இருப்போம்.:-)//

நல்லவேளையா சாப்பாட்டு நேரத்திலே இதெல்லாம் பேசறதில்லை. ஒருத்தருக்கொருத்தர் வம்பு மட்டுமே! :)))))) இல்லைனா சாப்பாடு ஜீரணம் ஆகாதே!