எல்லாருக்குள்ளேயும் கடவுள் இருக்கார்ன்னா ஏன் எல்லாரையும் நல்லவங்களா வைத்திருக்ககூடாது?
இப்படி சமீபத்தில ஒத்தர் கேட்டார்.
ம்ம்ம்ம்ம் எல்லாருமே நல்லவங்களா இருந்தா ரொம்பவே போர் அடிக்கும்ன்னு ஒரு வாதம்.
பகவான் ப்ரஜாபதிக்கு கொடுத்த வேலை ப்ரஜைகளை உண்டு பண்ணுவது.
ஆரம்பத்துல படைச்ச ப்ரஜைகள் எல்லாம் ஞானமடைஞ்சு (சனகாதியர்கள்) பிரஜைகளை உற்பத்தி செய்யறதுல ருசி இல்லாம போயிட்டாங்களாம். அடுத்து படைச்சவங்களும் இதே கதைதான். அடுத்து படைக்கும் முன் பக்வான்கிட்டே முறையிட்டார். என் வேலையை சரியா செய்ய முடியலைன்னு. பாத்துக்கிறேன் போன்னார் பகவான்.
மாயையில அகப்பட்ட அடுத்த ஜெனெரேஷன் சுக துக்கங்கள் தரும் வேலைகளில ஈடுபட்டு ஞானம் இல்லாம உழல ஆரம்பிச்சாங்களாம். அப்ப ஆரம்பிச்சது பாப புண்ணியங்கள்.
(ஸ்ரீமத் பாகவத்துல படிச்ச நினைவு. லூஸா எழுதியிருக்கேன். சரியா இல்லைன்னா பெரியவங்க சொல்லுங்க. இப்போதைக்கு உசா துணை புத்தகம் கிடைக்கலை)
இந்த பாப புண்ணியங்கள் இல்லாத கர்மாக்கள் - செயல்கள் - இல்லை. பெரும்பாலும் இரண்டும் சேர்ந்தே இருக்கும். விகிதம் மட்டுமே வேறுபடும். புரியலையா?
ஒரு செயல் செய்கிறோம். அதால பலருக்கும் நல்லது ஏற்படுது. சிலருக்கு கெட்டது ஏற்படும். ஒரு இடத்தை வாங்கி அங்கே ஆக்கிரமிச்சு இருக்கிற சில குடும்பங்களை விரட்டி அங்கே பொதுவா ஒரு பள்ளி கட்டறோம். இதில பலருக்கு நல்லது ஏற்படுது. ஆக்கிரமிச்சு இருந்த சில குடும்பங்கள் கஷ்டப்படும்.
இதில பாபமா புண்ணியமா, எது ஏற்படும்? இரண்டுமே இல்லையா?
இதே போலத்தான் பல செயல்களும்.
சிலது எல்லாருக்குமே நல்லது செய்யும். சிலது எல்லாருக்குமே கெட்டது செய்யும்.
இந்த பாப புண்ணியங்களுக்கான பலனை அனுபவிச்சே ஆகணும். தப்பிக்கவே முடியாது. முழுக்க பகவான் கிட்ட சரணடைஞ்ச சிலரே அவங்களோட செயல்களின் வினையிலிருந்து தப்பிக்க முடியும். 'நான்' என்ற எண்ணத்தை அறவே விட்டவங்களை மட்டுமே வினை பற்ற முடியாது.
அதனால் எப்பவும் ஏதோ பாபமோ புண்ணியமோ இந்த ஜீவன்களுக்கு இருந்துகிட்டே இருக்கும். பாபத்துக்கு புண்ணியம் கணக்கை சரி செய்யாது. பாபம் செஞ்சதுக்கு பலனை அனுபவிக்கணும். புண்ணியம் செஞ்சதுக்கும் பலனை அனுபவிக்கணும். இப்படி பலனை அனுபவிக்கறதுக்காக பிறப்பு இறப்பு இருந்துகிட்டே இருக்கும். அனுபவிக்க வேண்டிய கர்மாவை பொருத்தே பிறப்பு அமையும். ஜீவனுக்கு முக்குணங்களின் சேர்க்கையும் அமையும். இதனாலேயே சிலர் செயல் வீரர்களாயும் சிலர் சோம்பேரிகளாயும் சிலர் கோபத்தோடேயும் சிலர் தூங்கி வழிபவர்களாயும் இருக்கிறோம். வெகு சிலரே சுத்த சத்வமாக சாந்த ஸ்வரூபியாக இருக்காங்க.
இந்த குணத்தை மாத்திக்கலாம்ன்னா அது கொஞ்சம் கஷ்மே! கொஞ்சம் என்ன நிறையவே கஷ்டம். இருந்தாலும் பெரும் முயற்சி எடுத்து பெருமளவு மாத்திக்கலாம். அதுக்கு உணவு ஒரு முக்கிய காரணியா அமையும். காரம் உப்பு முதலியன ரஜோ குணத்தை வளர்க்கும். ஊசிப்போனது, ரொம்ப காரம், ரொம்ப புளிப்பு இதெல்லாம் தமோ குணத்தை வளர்க்கும். அசட்டு திதிப்பு சத்வ குணத்தை வளர்க்கும்.
உள்ளே பகவான் இருக்கறப்ப எப்படி நல்லவங்களா இல்லைன்னு கேட்டா உள்ளே இருக்கற பகவானை நாம் செயல்பட விடறதில்லை. அப்படித்தான் அவனுடைய விளையாட்டு இருக்கு. நமக்கு சுய இசைன்னு ஒன்னை கொடுத்து இஷ்டத்துக்கு வேலை செய்யவும் அதுக்கு பலனை அனுபவிக்கவும் விட்டு இருக்கான்.ஒரு நிகழ்ச்சியிலே பலரோட கர்மாவையும் பின்னி பிணைத்து பலனை கொடுக்கிரதுதான் அவனோட அமேசிங் திறமை!
எப்படி இருந்தாலும் செயலில்லாமல் நம்மால இருக்க முடியாது என்கிறதால கர்மா சேர்ந்துகிட்டேதான் இருக்கும். பிறப்பிறப்பு இருந்துகிட்டேதான் இருக்கும். இதிலிருந்து விடுபடுவதே மோக்ஷம். இதை அடைய அகங்காரத்தின் வெளிப்பாடான 'நான்', 'எனது' என்ற எண்ணங்களை விட்டு உள்ளே இருக்கிற பகவானையே செயல்பட விடணும். இது சுலபமில்லை. இருந்தாலும் முயற்சி செய்ய வேண்டும்.
3 comments:
நான்' என்ற எண்ணத்தை அறவே விட்டவங்களை மட்டுமே வினை பற்ற முடியாது.
தெளிவான பகிர்வுக்கு நன்றி.
'எருவாய்ச் சிதைந்தும் குறையா வினை' அப்படின்னு சொன்னார் ஒருத்தர். அப்படிப்பட்ட வினையிலிருந்து அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்...
நல்ல சிந்தனைகளைத் தூண்டும் பதிவுக்கு நன்றி.
Post a Comment