ஒரு மூதாட்டி சாகக்கிடந்தாள். செல்வந்த குடும்பம். கணவர் ஊர் தலைவர். திடீரென்று இறந்து போனது போல் உணர்ந்தாள். அவளை எம தூதர்கள் கொண்டுப்போய் எமன் முன்னிலையில் நிறுத்தினர்.
எமன் கேட்டான்: யார் நீ?
நான் …..
உன் பெயரை கேட்கவில்லை. யார் நீ?
நான் ...ஊர் தலைவரின் மனைவி.
நீ யாருடைய மனைவி என்று கேட்கவில்லை. யார் நீ?
நான்கு குழந்தைகளுக்குத் தாய்.
அதை கேட்கவில்லை. யார் நீ?
நான் சிவனுடைய பக்தை.
நீ யாருடைய பக்தை என்று கேட்கவில்லை. யார் நீ?
இதே ரீதியில் உரையாடல் பத்து நிமிடங்கள் தொடர்ந்தது.
அப்போது சித்திர குப்தன் வந்து இவளுடைய நேரம் இன்னும் வரவில்லை. தவறாக அழைத்து வந்துவிட்டார்கள் என்று தெரிவித்தான்.
எமனும் அவளை திருப்பி பூலோகத்துக்கு அனுப்பிவிட்டார். அவளும் பிழைத்துவிட்டாள்.
திரும்பிய போது பல விஷயங்கள் மறந்து போனாலும் யார் நீ என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாததை மறக்கவில்லை.
அதையே திருப்பி திருப்பி யோசித்துக்கொண்டு இருந்தாள்.
திடீரென்று ஒரு நாள் ஞானம் பெற்றாள்!
4 comments:
"யார் நீ?"
நான் யார்? என்ற கேள்வியே ஞானத்தின் திறவுகோல்.
நல்ல கதை... இப்ப நானும் கேக்க ஆரம்பிச்சுட்டேன் "யார் நீ?..." ஹ்ம்ம்...:)
கிழவிக்காவது புரிந்தது.
அது சரி, ப்ராணாயாமம் கேள்வி-பதில் பாதியிலே நிற்கிறதோ?? விகிதாசாரம் குறித்த பதிவு கிடைக்கவில்லை. நாளைக்கு மறுபடி தேடிப் பார்க்கிறேன்.
Post a Comment