Pages

Tuesday, July 5, 2011

ப்ராணாயாமம்.


ப்ராணாயாமம்.
1. சந்தியாவந்தனத்தில் பல இடங்களில் ப்ராணாயாமம் வருதே அதப்பத்தி சொல்லுங்க.
ஆமாம். பல இடங்களிலும் இது வரும்.
குறிப்பா ஒரு சங்கல்பம் செய்யும் முன் வரும்.

2. ஏன் அப்படி?
சங்கல்பம் என்கிறது ஒரு உறுதி மொழி. அது சாதாரணமா சொல்கிற விஷயமில்லை. ஆகவே அதுக்கு தனியா ஒரு சக்தி வேணும், மனக்குவிப்பு வேணும். அதை கொடுக்கிறதே
ப்ராணாயாமம்.

3. சரி அதை எப்படி செய்யணும்?
பலவிதமான ப்ராணாயாமம் இருக்கு. சாதாரணமா மூச்சை இழுத்து, நிறுத்தி, விடுகிறதே ப்ராணாயாமம்.
மூக்கில் வலது இடதுன்னு இரண்டு துவாரங்கள் இருக்கு இல்லையா? வலது பக்கமா காற்றை இழுக்கணும். பின் மூச்சை நிறுத்தணும். இடது பக்கமா விடணும்.

4. சரி மந்திரத்தோட செய்யணுமா இல்லை மந்திரமில்லாமலா?
சந்தியாவந்தனத்தில மந்திரத்தோடதான் செய்யணும்.

5. இல்லாமலும் செய்யலாமா?
செய்யலாம். அதுக்கு நாம் எதிர்பார்க்கிற பலன் இராது. அதற்கு வேறு மாதிரி பலன் இருக்கும். அதனால சந்தியாவந்தனத்தில அப்படி செய்யக்கூடாது. இப்படி செய்யும் போது உடம்பில சக்தி பெருகும். இது அடுத்து செய்யவிருக்கிற கர்மாவுக்கு பலம் சேர்க்கும்.

6. சந்தியாவந்தனத்திலேயே இது ரெண்டு விதமா செய்கிறாப்போல இருக்கே.
ஆமாம். காயத்ரி ஜபத்துக்கு முன்னே செய்வது ரிஷி, சந்தஸ், தேவதை சொல்லி செய்வது. மத்தது அப்படி இல்லை.
மற்ற எல்லாத்தையும் விட ஜபத்துக்கு மனக்குவிப்பும் உடலுக்கு சக்தியும் மிக அவசியம். அதனால் இப்படி.

7. செய்முறையில இந்த ரெண்டுக்கும் வித்தியாசம் உண்டா?
உண்டு.
ஒரு ப்ராணாயாம மந்திரம் சொல்லும்போது மூச்சை இழுத்து, நிறுத்தி, விடலாம்.

அல்லது ஆரம்பம் முதல் காயத்ரியை முடிக்கும் வரை மூச்சை இழுப்பது.
அடுத்து ஓமாபோ முதல் அடுத்த ப்ராணாயாம மந்திரம் முடிய மூச்சை பிடிப்பது.
மூன்றாவதாக மூன்றாம் முறை சொல்லும் ப்ராணாயாம மந்திரத்தின் போது மூச்சை விடுவது.
இப்படி செய்வது நல்லது. மந்திரங்களை ஒரே வேகத்தில் சொல்லுவது இருந்தால் இப்படி செய்வதில் சரியான விகிதாசாரம் அமைந்துவிடும்.

8. அதென்ன விகிதாசாரம்?
ப்ராணாயாமத்தை லேசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது உடம்பில் இருக்கிற நாடிகள் சம்பந்தப்பட்டது. சரியான விகிதாசாரத்தில இல்லாம செய்கிற ப்ராணாயாமம் விரும்பாத விளைவுகளை கொடுத்துவிடலாம். மேலும் விவரங்கள் எக்ஸ்பர்டைஸ் சம்பந்தப்பட்டது என்கிறதால இங்கேயே நிறுத்திக்கலாம். ப்ராணாயாமத்தை தனியாக பயில விரும்புபவர்கள் தகுந்து ஒரு குருவை நாடி பயிலவும்.

5 comments:

vijayaragavan said...

In a vadakalai iyengar matt booklet, i did notice that one should inhale freely, close both the nostrils, recite three dheerga Gayatri-s and finally release through the other nostril by reciting 'abhojyothi rasa amratham bramha boor bhuvasvaroOm'.

Kindly suggest! (in tamil please).
- Vijayaragavan S.

திவாண்ணா said...

மந்திரமே வேறயாச்சே! பூராதி வ்யாஹ்ருதிகள்? அவற்றோட சப்த ரிஷிகளை சொல்லித்தானே நியாசமே? அந்த பக்கத்தை போட்டோ எடுத்து அனுப்ப முடியுமா?

vijayaragavan said...

மந்திரமே வேறயாச்சே! பூராதி வ்யாஹ்ருதிகள்? அவற்றோட சப்த ரிஷிகளை சொல்லித்தானே நியாசமே?அந்த பக்கத்தை போட்டோ எடுத்து அனுப்ப முடியுமா?

கண்டிப்பா அனுப்புறேன்.
பூராதி வ்யாஹ்ருதி இல்லை அது ஜபத் தொடக்கம் இல்லையா?! நீங்க சொன்ன மாதிரி நிறைய புக் ல (அண்ணா புஸ்தகம் உட்பட) பார்த்திருக்கிறேன். எதேர்ச்சையா இந்த புஸ்தகம் கிடைச்சது. அதுல, சொன்ன சில விஷயங்கள் , நினைவுல இருக்கிறது மட்டும்.
1. மந்த்ரம் இல்லாம ப்ராணாயமம் கூடாது.(நீங்க சொன்னது தான்)
2. physical ஆ இல்லைனா கூட மந்த்ரம் அவஸ்யம்.
3. வலது மூக்குத் துளை வழியாக உள்ளே இருக்கும் காற்றை வெளில விடனும்.
4. அது வழியாவே inhaling , should hold the breath , recite 3 times " ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ..." (இதை தான் தீர்க்க காயத்ரி நு சொன்னேன்.)
5. ஜபத்துக்கு - காயத்ரி தியானம் அப்புறம் - ஆவாஹனம் முன்னர் - 10 times பிராணாயாமம் பண்ண வேண்டிய இடத்துல -முதல் physical ப்ரானாயமத்தில் - மூன்று முறை தீர்க்க காயத்ரி- இரண்டாவது முறையில் நான்கு காயத்ரி - கடைசி முறையில் மூன்று தீர்க்க காயத்ரி - மொத்தம் பத்து - இப்படி ஒரு கணக்கு போட்டிருந்தார்கள்.

இப்போ ரெண்டு கேள்வி.
1. இப்போ முக்கியமான இடத்துல மட்டும் பீஜம் , சந்தஸ், ரிஷி எல்லாம் சொல்லுறேன். எப்போ முழுமையா சொல்லலாம்?
2. எப்போ அங்க ந்யாசம் கர ந்யாசம் எல்லாம் சொல்லி ஜபம் பண்ணலாம்? நீங்களே இதை separate ஆ சொல்லி இருக்கீங்க.
எனக்கு இந்த்ராக்ஷி உபதேசம் ஓட கத்துத் தரப்பட்டது. (வேற எண்ணத்துல சொல்லலை , ஏற்கனவே வந்திருகிறது ங்கறதுக்காக
சொன்னேன் - பெருமை பட்டுக்கொள்ளும் அளவு இந்த்ராக்ஷி எல்லாம் சித்தி ஆகலை.) ஆனால் எங்க வடகலை புஸ்தகத்துல இம்முறை தான் போட்டிருந்தது. தொடர்ந்து சந்தி பண்ணிண்டு தான் இருக்கேன், யாராவது இப்படி முறையொட பண்ணுனு ஒரு flag காட்டினா பண்ணலாம்னு ஒரு எண்ணம் கூட.

இன்னும் கேள்விகள் /sharing எல்லாம் இருக்கு. அப்பப்போ தொந்தரவு பண்ணுறேன் :)

திவாண்ணா said...

பூராதி வ்யாஹ்ருதி இல்லை அது ஜபத் தொடக்கம் இல்லையா?!//
அது மந்திர தொடக்கம். நியாசம் பூராதி வ்யாஹ்ருதீனாம் அத்ரி.. என்று ஆரம்பிக்கும்!

1. மந்த்ரம் இல்லாம ப்ராணாயமம் கூடாது.(நீங்க சொன்னது தான்)
2. physical ஆ இல்லைனா கூட மந்த்ரம் அவஸ்யம்.
3. வலது மூக்குத் துளை வழியாக உள்ளே இருக்கும் காற்றை வெளில விடனும்.
4. அது வழியாவே inhaling , should hold the breath , recite 3 times " ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ..." (இதை தான் தீர்க்க காயத்ரி நு சொன்னேன்.)
5. ஜபத்துக்கு - காயத்ரி தியானம் அப்புறம் - ஆவாஹனம் முன்னர் - 10 times பிராணாயாமம் பண்ண வேண்டிய இடத்துல -முதல் physical ப்ரானாயமத்தில் - மூன்று முறை தீர்க்க காயத்ரி- இரண்டாவது முறையில் நான்கு காயத்ரி - கடைசி முறையில் மூன்று தீர்க்க காயத்ரி - மொத்தம் பத்து - இப்படி ஒரு கணக்கு போட்டிருந்தார்கள்.

எல்லாமே சரிதான். ப்ரானாயமத்தை மூச்சு அடக்கி செய்யும்போது முன்று முன்றா முடிந்துவிடும். அதனால் மொத்தம் முன்று முறை போதும்.

இப்போ ரெண்டு கேள்வி.
1. இப்போ முக்கியமான இடத்துல மட்டும் பீஜம் , சந்தஸ், ரிஷி எல்லாம் சொல்லுறேன். எப்போ முழுமையா சொல்லலாம்?//
எப்போ வேணுமானாலும் முழுமையா சொல்லலாம். ஜபத்துக்கு முன் செய்யும் ப்ராணாயாமத்தின் போது நிச்சயம் சொல்லணும்.

2. எப்போ அங்க ந்யாசம் கர ந்யாசம் எல்லாம் சொல்லி ஜபம் பண்ணலாம்? நீங்களே இதை separate ஆ சொல்லி இருக்கீங்க.

காயத்ரி ஜபத்துக்கு முன்னாலே.

// எனக்கு இந்த்ராக்ஷி உபதேசம் ஓட கத்துத் தரப்பட்டது. (வேற எண்ணத்துல சொல்லலை , ஏற்கனவே வந்திருகிறது ங்கறதுக்காக
சொன்னேன் - பெருமை பட்டுக்கொள்ளும் அளவு இந்த்ராக்ஷி எல்லாம் சித்தி ஆகலை.)//

அந்த ஜபம் தனியாக பண்ணுவது, இல்லையா?

ஆனால் எங்க வடகலை புஸ்தகத்துல இம்முறை தான் போட்டிருந்தது. தொடர்ந்து சந்தி பண்ணிண்டு தான் இருக்கேன், யாராவது இப்படி முறையொட பண்ணுனு ஒரு flag காட்டினா பண்ணலாம்னு ஒரு எண்ணம் கூட.//
கூடுதலா என்ன வழிமுறை வேணும்?
தேவையானா சென்னையில வருகிற 23, 24 நடக்கிற சந்தியாவந்தன workshop இல் கலந்துகொள்ளுங்க!

இன்னும் கேள்விகள் /sharing எல்லாம் இருக்கு. அப்பப்போ தொந்தரவு பண்ணுறேன் :)//
வெல்கம்!

Geetha Sambasivam said...

நன்றி.