Wednesday, July 20, 2011
நம்பிக்கை ...
ஒரு நாத்திகன் மலையில் இருந்து கீழே விழுந்தான். வழியில் நீட்டிக்கொண்டு இருந்த ஒரு சிறு மரக்கிளையை பிடித்துக்கொண்டு தொங்கினான். கீழே அதல பாதாளம்!
கிளையும் பாரம் தாங்காமல் மெதுவாக முறியத்தொடங்கியது!
"கடவுளே !" என்று கத்தினான்.
நிசப்தம்! ஒருபதிலும் இல்லை.
"கடவுளே நீ இருக்கேன்னா என்னை காப்பாத்து. இனிமே உன்னை பரிபூரணமா நம்புவேன். மத்தவங்களையும் நம்பச்சொல்லுவேன்!"
மேலும் நிசப்தம். நம்பிக்கை இழக்கும் நேரம் திடீரென்று ஒரு அசரீரி கேட்டது! "இப்படித்தான் எல்லாரும் சொல்லாறாங்க. ஆனா நம்பிக்கை வைக்கிறதில்லை!"
"ஓ, கடவுளே! நான் மத்தவங்க மாதிரி இல்லை. இதோ பார் இப்பவே உன் குரலை கேட்டதாலே உன் மேலே நம்பிக்கை வந்துடுத்து. இப்ப வேண்டியதெல்லாம் நீ என்னை காப்பாத்தறதுதான். அப்புறம் காலா காலத்துக்கும் உன் புகழை பரப்புவேன்!"
"ஹும்! சரி! நான் உன்னை காப்பாத்தறேன். அந்த கிளையை விட்டுடு."
" கிளையை விடவா? என்னை முட்டாள்ன்னு நினைச்சயா நீ?"
Labels:
குட்டிக்கதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எல்லாரும் இப்படித்தான் கடவுளை நம்புகிறோம். :(
Post a Comment