Pages

Tuesday, July 12, 2011

உரத்த சிந்தனை - 3



கொஞ்ச நாளாக மெத்தையில் நடப்பது போல இருக்கிறது. பாதங்களில் உணர்ச்சி கொஞ்சம் குறைந்து இருக்கிறது. அது சர்க்கரை வ்யாதி இருக்கிறவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைதான். சர்க்கரை கட்டுப்பாடில் இருந்தாலும் டயாபெடிஸ் உடம்பு முழுதும் பாதிக்கும் நோயானதால் மற்ற பிரச்சினைகள் மெதுவாக வளர்ந்து கொண்டுதான் இருக்கும். சர்க்கரை கட்டுப்பாடு இதை மெதுவாக்கும். கட்டுப்பாடில்லாமல் இருப்பின் இவை சீக்கிரமே வளரும்.
மெத்தையில் நடபப்து போன்ற உணர்வு நரம்புகள் பாதிப்படைவதால் வருகிறது. இதற்க்கு ந்யூரோபயான் போன்ற பி காம்ப்லெக்ஸ் வைட்டமின் ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். இந்த பி காம்ப்லெக்ஸ் நம் பெருங்குடலில் பாக்டீரியாக்களால் தயாரிக்கப்படுகின்றன. ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. இது வேறு எந்த உணவு வகையிலும் காணப்படாது. இயற்கையாக நமக்கு வேண்டியது கிடைத்து விடுகிறது என்றாலும் நெடு நாட்கள் நோய் வாய்ப்பட்டவர்கள், நெடு நாள் சர்க்கரை வ்யாதி உடையவர்களுக்கு அதிக அளவில் தேவை இருக்கிறது. பி காம்ப்லெக்ஸ் மாத்திரைகள் ஊசி மருந்துகள் கல்லீரல்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. ஸ்ரிக்ட் வெஜிடெரியன் யாருக்கும் சொல்லிவிடாதீர்கள்! மருந்துக்கு தோஷம் இல்லையானாலும் சிலரால் இதை ஜீரணிக்க முடியாது.

இன்று இந்த பி காம்ப்லெக்ஸ் ஊசி போட்டுக்கொள்ள சர்ஜன் நண்பர்கள் உதவியை நாடினேன். ஒருவர் சர்ஜனானாலும் மிக மென்மையான மனம் உடையவர். அவர் எனக்கு ஊசி குத்த மறுத்துவிட்டார்! மற்றவருக்கு 20 வருடங்கள் முன் வரிசையாக 45 ஊசிகள் நான் குத்தி இருக்கிறேன். பழிக்குப்பழி என்று இல்லாவிட்டாலும் அவர் ஊசி குத்த முன் வந்தார். காலை உணவு இடை வேளை போது குத்திக்கொண்டு விடலாம் என்று உத்தேசித்து எல்லாம் தயார் செய்தாகிவிட்டது!
இந்த ஊசியை 'நரம்பிலும்' ஏற்றலாம், சதையிலும் ஏற்றலாம். சதையில் ஏற்றிக்கொள்ள ஒரு பெஞ்சில் படுப்பது வசதியாக இருக்கும். சர்ஜன் மென்மை மனம் 'நரம்பில்' ஏற்றிக்கொள்ளப்போகிறேன் என்று முடிவு செய்து விட்டார். அதனால் நான் அவர் பெஞ்சில் உக்கார்ந்து இருபப்தை பார்த்து "ஐயா, அங்கே போய் அமர்ந்து கொள்ளுங்கள்; இதை காலி செய்யுங்கள்" என்று கேட்டும் அமர்ந்திருந்த பெஞ்சை காலி செய்ய மறுத்துவிட்டார். ‘அங்கே போய் உட்கார்ந்து கொண்டு போட்டுக்கொள்’ என்று ஒரு நாற்காலியை காட்டினார். போகிறது என்ன இப்போ என்று நினைத்துக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து ஊசி கொண்டு போட்டுக்கொண்டேன்!
இப்போது அவருக்கு மன வருத்தம் வந்துவிட்டது. "நரம்பில் போட்டுக் கொள்ளப் போகிறாய் என்றல்லவா நாற்காலியை காட்டினேன்" என்று வருந்தினார்.

சில சமயம் ஏன் என்று கேட்காமல் கீழ்படிய வேண்டும். அதுதான் நம்பிக்கை. இவர் சொல்வதில் விஷயம் இருக்கும் என்று நம்புவது அது. நம்பாமல் இருந்துவிட்டு அப்புறம் வருந்துவதில் அர்த்தம் இல்லை.

ஆன்மீகப் பெரியோர்கள் சொல்வதை நாம் நம்புவதும் இதுவே. ஆனால் இந்த கால இளைஞர்கள் எளிதில் நம்பிக்கை வைப்பதில்லை. ஏன் எதுக்கு என்று கேட்டுக்கொண்டு காலம் கடத்தி கடைசியில் சிலர் ஏன் இப்படி காலம் வீணாக கடத்தினோம் என்று வருந்துகிறார்கள். குழந்தைகளுக்கு ஆன்மீகத்தை புகட்டுவதிலும் இப்படி சிலர் நடந்து கொள்கிறார்கள். "பெரியவன் ஆனதும் தானே முடிவு செய்து கொள்ளட்டும். நானாக திணிக்க மாட்டேன்" என்று 'மாடர்ன் சிந்தனை'யில் நடந்து கொள்கிறார்கள்.

நம்புவோம். நம்பி நடந்து கொள்வோம். பின்னால் ஒரு வேளை நம்பிக்கை பொய்த்தால் பெரியவனாகி கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் விட்டு விடட்டும். பெரிய இழப்பு ஏதும் இல்லை. (நம்பிக்கையில் காலமும் பொருளும் வீணாயிற்று என்று சிலர் வாதாடினால் அதில் கொஞ்சம் லாஜிக் இருக்கிறது. I acknowledge!) நம்பிக்கை உறுதியானால் 'he would have had a flying start'! சிறு வயதில் பழகாமல் காலம் கடந்து நம்பிக்கை வந்தால் இவ்வளவு நாள் வீண் ஆயிற்றே என்று நாம் வருந்த நேரிடலாம். அதை ஈடு செய்வது கடினம்!


3 comments:

இராஜராஜேஸ்வரி said...

சிறு வயதில் பழகாமல் காலம் கடந்து நம்பிக்கை வந்தால் இவ்வளவு நாள் வீண் ஆயிற்றே என்று நாம் வருந்த நேரிடலாம். அதை ஈடு செய்வது கடினம்!//

பயனுள்ள சிந்தனைக்கு நன்றி..

திவாண்ணா said...

தொடர்ந்து படித்து வருகிறீர்கள் நன்றி!

Geetha Sambasivam said...

ஊசி குத்திண்டதுக்கும் இதுக்கும் சம்பந்தம் புரியலைன்னாலும், பொதுவான கருத்து மட்டும் பிரியுது!