Pages

Friday, July 15, 2011

மகாத்மா காந்தி



மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த போது பைபிளால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக மலைப்பிரசங்கம் அவருக்கு மிகவும் பிடித்து இருந்தது. இந்தியாவின் ஜாதி பிரச்சினைகளுக்கு கிறிஸ்துவம் தீர்வாக இருக்கும் என்று நினைத்தார். கிறிஸ்துவர் ஆகிவிடலாமா என்று தீவிரமாக யோசித்து ஒரு நாள் சர்ச்சுக்கு மாஸ் நேரத்துக்குப்போனார். அதில் பங்கேற்று விட்டு தான் கிறிஸ்துவனாக மாற நடவடிக்கை எடுக்குமாறு கேட்க உத்தேசம்.
சர்ச் வாசலிலேயே நிறுத்தப்பட்டார். மாஸ் இல் பங்கேற்க விரும்பினால் கருப்பர்களுக்கான சர்ச்சுக்கு போகலாம் என்று மென்மையாக அறிவுறுத்தப்பட்டார். அப்போது திரும்பியவர் பின்னர் சர்ச் ஐ திரும்பிக்கூட பார்க்கவில்லை.


3 comments:

இராஜராஜேஸ்வரி said...

அம்பேத்கர் கூட புத்தமத்திற்கு மாறினும் தீண்டாமையிலிருந்து தப்பவில்லை.

திவாண்ணா said...

ஆமாம் அம்மா! இக்கைரைக்கு அக்கரை பச்சை!

Geetha Sambasivam said...

ஹூம்!!! காந்தி கிறிஸ்தவராய் மாறி இருக்கலாமோ?? மாறி இருந்தால் காங்கிரஸ் என்றொரு கட்சியே தோன்றி இருக்காது. இந்தியாவும் இவ்வளவு சீரழிந்திருக்காதோ!


(வெளியிடுவது உங்கள் இஷ்டம்!) :D