Pages

Friday, April 28, 2017

கிறுக்கல்கள் - 208





சாதாரணமாக மக்கள் அன்பு என்று சொல்வதைப்பற்றி மாஸ்டருக்கு எந்த மயக்கமும் இருந்ததில்லை. சிறு வயதில் ஒரு அரசியல் தலைவரும் அவரது நண்பரும் பேசிக்கொண்டு இருந்ததை நினைவு கூர்ந்தார்.
நம்ம கட்சி தலைவர் பதவிக்கு உனக்கு எதிரா போட்டி போடப்போறாராமே. உனக்கு தெரியுமா?”
அவனா! பொறுக்கி! அரசியல் தொடர்பாலத்தான் இன்னும் ஜெயிலுக்கு போகாம இருக்கான். அது எல்லாருக்குமே தெரியும்.”
நம்ம செயலாளர் கூட போட்டிப்போடப்போறாராமே!”
என்ன! அவனோட ஊழல் எல்லாம் வெளியே வந்துடும்ன்னு கொஞ்சம் கூட பயமில்லையா அவனுக்கு?”
ஹிஹிஹி! நா இதெல்லாம் சும்மாத்தான் சொன்னேன். நிஜமா அவங்களை இப்போத்தான் பாத்துட்டு வரேன். ரெண்டு பேரும் உன்னத்தான் சப்போர்ட் பண்ணறாங்க!”
அப்பாடா! பாத்தியா என்ன காரியம் செஞ்சுட்டே? ரெண்டு உத்தமர்களைப்பத்தி மோசமா சொல்ல வெச்சுட்டுயே!” 

Thursday, April 27, 2017

கிறுக்கல்கள் - 207





கொடுமைகளுக்கு மூலமெது?
அஞ்ஞானம்.
அது எப்படி நீங்கும்?
ஞானத்தால. முயற்சியால இல்லை. புரிஞ்சுக்கறதால. செயலால இல்லை.


பின்னால் மாஸ்டர் சொன்னார்: ஞானத்துக்கு அடையாளம் சாந்தம். உன் அச்சங்கள் உருவாக்கின மாயைதான் உன்னை துரத்துதுன்னு உனக்கு புரியும் போது ஓடறதை நிறுத்திவிடுவாய்!

Wednesday, April 26, 2017

கிறுக்கல்கள் - 206





நான் ஏன் கெட்டதை எல்லாம் செய்யறேன்?
ஏன்னா நீ மயக்கத்தில இருக்கே.
எதால? என்ன மயக்கம்?
நான்’ ன்னு மாயமா எதை நினைச்சுக்கறயோ அதால.
! பின்னே எப்ப கெட்டது எல்லாம் நிக்கும்?
நான்னு நீ நினைச்சுக்கறது மாயமானது; அது இல்லவே இல்லை; எதையும் அதுக்காக பாதுகாக்க வேண்டாம்ன்னு புரிஞ்சுக்கறதால

Tuesday, April 25, 2017

கிறுக்கல்கள் - 205





என்னை எப்படி மாத்திக்கறது?
நீ நீதான். எப்படி உன் கால்களிலிருந்து உன் உடம்பு பிரிச்சு போக முடியாதோ அப்படி நீ உன்னை மாத்திக்க முடியாது!
! அப்ப செய்ய ஒண்ணுமே இல்லையா?
இருக்கே! நீ யாரென்கறதை சரியா புரிஞ்சுண்டு அதை ஒத்துக்கலாம்.
அதை ஒத்துண்டா நான் எப்படி மாறுவேன்?

ஒத்துக்கலைன்னா மட்டும் எப்படி மாறுவே? உனக்கு ஒத்துக்காததை நீ மாத்தலை; அமுக்கி வைக்கிறே.

Monday, April 24, 2017

கிறுக்கல்கள் - 204





காதலின் மேன்மை பத்தி புளகாங்கிதத்தோட பேசிய பெண்மணிக்கு மாஸ்டர் முல்லா நசருதீன் தன் சாகக்கிடக்கும் மனைவியை ஆறுதல் படுத்த முயற்சித்த கதை சொன்னார்.

"இந்த இரவுதான் என்னோட கடைசி இரவு. நாளை சூரியன் உதிக்கறதை நான் பார்க்க மாட்டேன். நசருதீன், நான் செத்துப்போறதை நீ எப்படி எடுத்துப்பே?”
நான் பைத்தியமாயிடுவேன்!”
பொய்யி! நீ ஒரு சாமர்த்தியசாலி. என்னை சமாதானப்படுத்த இப்படி சொல்றே! உன்னை எனக்குத்தெரியும். ஒரு மாசத்துக்குள்ள மறு கல்யாணம் செஞ்சுப்ப!”
என்ன சொல்றே? நான் பைத்தியமாயிடுவேன்தான். ஆனா அந்த அளவுக்கு இல்லே!” 

Friday, April 21, 2017

கிறுக்கல்கள் - 203





மாஸ்டர் தன் சீடர்களை கொஞ்ச காலம் மட்டுமே தன்னுடன் தங்க அனுமதிப்பார்.
அதற்குப்பின் அவர்களை வெளியே துரத்திவிடுவார். அவர்கள் அவ்வப்போது வந்து பார்ப்பதுடன் சரி. தானேதான் சாதனை பழக வேண்டும்.

புதிதாக வந்த ஒரு சீடர் இது ஏன் என்று கேட்டார்.

மாஸ்டர் சொன்னார்: ”குரு என்பவர் உன்னையும் உண்மையையும் பிரதிபலிக்கும் கண்ணாடி மட்டுமே. உண்மையையை பார்த்தபின் கண்ணாடியை தூக்கி எறிந்துவிட வேண்டும், இல்லையானால் பக்தியால் கண்ணாடி திரையாக ஆகிவிடும்.”

Thursday, April 20, 2017

கிறுக்கல்கள் - 202





பெரும் பணக்கார நாடுகள் பற்றி சொல்ல இந்த கதை வந்தது:

ஓரிரவு மனைவி கணவனை எழுப்பி சொன்னாள்: “போய் ஜன்ன கதவை எல்லாம் சாத்துங்க. வெளியே உறைய வைக்கும் குளிர்.”

எரிச்சலுடன் கணவன் சொன்னான் “முண்டமே! ஜன்ன கதவை எல்லாம் சாத்திட்டா வெளியே குளிர் குறைஞ்சுடுமா என்ன?” 

Wednesday, April 19, 2017

கிறுக்கல்கள் - 201





தெய்வீகத்தை அடைய நான் என்ன செய்ய வேண்டும்?

தெய்வீகம் என்பது எதையும் செய்து அடைவது இல்லை; அது சரியாக காண்பதால் உணர்வது!

அப்ப செய்கைக்கு என்ன வேலை?

உணர்ந்ததை சொல்ல முயற்சிக்க! அதை அடைய இல்லை

Tuesday, April 18, 2017

கிறுக்கல்கள் - 200




மடாலயத்தில் இருந்த அயல்நாட்டு ரோஜா செடியில் பூக்கும் அருமையான மலர்களை காண கவர்னர் விஜயம் செய்தார். அவர் வந்த போது செடியில் ஒரே ஒரு மலர் மட்டுமே இருந்தது!

விசாரித்ததில் மாஸ்டர் அந்த ஒரு மலரைத்தவிர மற்றவற்றை கொய்து விடச் சொல்லி இருந்தது தெரிய வந்தது. ஏன் என்று வினவினார்.

மாஸ்டர் சொன்னார்; “ அப்போதுதான் அந்த ஒரு மலரையாவது பார்ப்பீர்கள் என்று! அவை எல்லாமே இருந்திருந்தால் ஒன்றையும் பார்த்து இருக்க மாட்டீர்கள்!”

ஒரு சிறு இடை வெளிக்குப்பின் கேட்டார் “நண்பரே! உங்களுக்கு பன்மை என்பது மிகவும் பழகிவிட்டது. உண்மையில் தனி மனிதன் ஒருவனை எப்போது பார்த்தீர்கள், சொல்லுங்கள்!” 

Monday, April 17, 2017

கிறுக்கல்கள் - 199




மாஸ்டரின் சீடர்கள் அவருடைய கல்லறையில் வைக்க தயார் செய்திருந்த கல்வெட்டுக்கான வாசகத்தை காட்டினார்கள்.

அவரருகில் இருந்த போது அச்சமில்லாமல் இருப்பது சுலபமாயிற்று.”


மாஸ்டர் சொன்னார்: “நீங்கள் அச்சமில்லாமல் இருக்க நான் பக்கத்தில இருக்க வேண்டி இருந்துதுன்னா உங்கள் பயந்தாங்கொள்ளித்தனத்தை நான் மறைக்க மட்டுமே மறைத்தேன்; அதை சரி செய்யவில்லை என்றாயிற்று!”

Friday, April 14, 2017

ஹேமலம்பி வருட வாழ்த்துகள்!




மங்களரகமான ஹேமலம்பி வருடம் வசந்த ருதுவுடன், உத்தராயணப் புண்ணியகாலம் நிறைந்த வியாழன் நள்ளிரவு (விடிந்தால் வெள்ளிக்கிழமை 12மணி 43 நிமிடத்திற்கு 13/14.4.2017 கிருஷ்ண பட்சத்தில் திருதியை திதி, விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதம், துலாம் ராசியில், மகர லக்னத்திலும், நவாம்சத்தில் கும்ப லக்னம், மிதுன ராசியிலும், சித்தி நாமயோகம், பத்தரை நாம கரணத்திலும், புதன் ஹோரையிலும், நேத்திரம் ஜீவன் நிறைந்த பஞ்ச பட்சிகளில் காகம் வலுவிழந்த காலத்திலும், குரு மகாதசையில், சுக்கிர புத்தி, சுக்கிரன் அந்தரத்திலும் வெற்றிகரமான ஏவிளம்பி வருடம் பிறந்துவிட்டது.

ஏவிளம்பி வருட வெண்பா
ஏவிளம்பி மாரியற்பமெங்கும் விலைகுறைவாம்பூவல்விளை வரிதாம் போர் மிகுதி சாவுதிகம்ஆகுமமே வேந்தரணியாயமே புரிவார்வேகுமே மேதினி தீ மேல்.

என்பது இடைக்காடர் சித்தர் மகானின் பாடல்
ஏவிளம்பி மாரி ற்பம் எங்கும் விலை குறைவாம்
பூவல் விளைவு ரிதாம் போர் மிகுதி சாவு திகம்
ஆகும் மேவேந்தர் அநியாயமே புரிவார்
வேகுமே மேதினி தீ மேல்.
 
இதன்படி இந்த வருடத்தில் மழை குறையும், ஆனால் விலைவாசியும் குறையும், உணவு உற்பத்தியாகிய விளைச்சலும் குறையும், விபத்துகளாலும், போராலும் உயிரிழப்புகள் அதிகமாகும். நாடாளுபவர்கள் மனதிலே போர்க்குணம் அதிகமாகும். போர் மூளும், உலகெங்கும் தீ விபத்துகளும் அதிகமாகும் என்கிறார்.

இது இந்த வருஷத்துக்கன பஞ்சாங்க வெண்பா.

எல்லாமே நெகடிவா இருக்கு.
மழை போன வருஷத்தைவிட குறைவா இருக்கும்ன்னா…. என்னாகும்ன்னு யோசிக்கவே பயமா இருக்கு! மழை குறைந்து விளைச்சலும் குறைந்து போனாலும் விலைவாசி குறையும் என்கிறது மத்த ஃபாக்டர்ஸ்படி இருக்கலாம். அது கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல்.
போர் குணம் ஏற்கெனவே அதிகமாத்தான் இருக்கு. ட்ரம்ப்பே சாட்சி!

ஏதானாலும் டிவைன் இண்டர்வென்ஷன்னு ஒண்ணு இருக்கு. ஜோதிடப்படியோ மத்த ப்ரெட்க்ஷன்ஸ் படியோத்தான் நடக்கும்ன்னு இல்லை. இந்த இண்டர்வென்ஷன் வரட்டும்ன்னு சங்கட ஹர சதுர்த்தியும், புனித வெள்ளியும் வரும் இந்த நாளில வேண்டிப்போம்!
***
சம்ஸ்க்ருத சங்கல்பம் சொல்வதில் கொஞ்சம் கவனம் தேவைன்னு சம்ஸ்க்ருத புலவரும் என் மகனுமான ஸ்ரீ ரமண சர்மா சொல்கிறார்.

வருடத்தின் பெயரை ஸங்கல்பாதிகளில் “ஹேமலம்ப” அல்லது “ஹேமலம்பி” என்று சொல்லலாம். அன்றியும் “ஹேவிளம்ப” “ஹேவிளம்பி” என்பது ஸம்ஸ்க்ருத இலக்கணப்படி சரியான சொல் அல்ல. அதாவது “ஹே” என்பதற்கு அடுத்தது “ம” வரவேண்டுமே தவிர “வி” அல்ல. புஷ்யம்/“பூசம்” பக்கத்தில் உள்ள புனர்வஸுவை “புனர்பூசம்” என்று சொல்வது போல் “விளம்பி”க்கு பக்கத்தில் உள்ளதை சாமானியர்கள் “ஹேவிளம்பி” என்கிறார்கள். இது அறியாமல் ஏற்பட்ட பிழையாகும். ஆகவே தவிர்க்கத்தக்கது.”

கிறுக்கல்கள் - 198




பணக்காரர்களால் ஏன் இறைவனின் சாம்ராஜ்யத்தை அணுக முடியவில்லை என்று கேட்டார் ஒருவர்.
மாஸ்டர் பெரும் பணக்காரர் பற்றி கதை சொன்னார்.
ஹோட்டல் ஒன்றுக்கு பெரிய படகு கார் ஒன்று வந்து சேர்ந்தது. அதிலிருந்து ஒருவரை இறக்கு தள்ளு வண்டியில் உள்ளே கொண்டு போனார்கள். கூட வந்த பெண்மணியை பக்கத்தில் இருந்தவர் கேட்டார்: “ அவருக்கு என்ன உடம்புக்கு?”

அந்த பெண்மணி சொன்னார் “ அவர் என் கணவர். உடம்புக்கு ஒன்றுமில்லை. மிகப்பெரும் பணக்காரர் ஆகையால் நடக்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை!”

Thursday, April 13, 2017

கிறுக்கல்கள் - 197




இறையியலாலர்கள் தம் நம்பிக்கை அமைப்பின் மீது வைக்கும் விஶ்வாசத்தால் சத்தியத்தைக்கூட காண தயாராக இல்லை!” என்பார் மாஸ்டர்.
இறை தூதரே நேரில் வந்தால் கூட நிராகரித்து விடுவார்கள்!
தத்வஞானிகள் கொஞ்சம் பரவாயில்லை. நம்பிக்கைகள் மீது அதிகம் சார்ந்து இல்லாததால் தேடலில் இன்னும் கொஞ்சம் திறந்த மனதோடு இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. தத்துவத்துக்கு வார்த்தைகளும் கருதுகோள்களும் வேண்டி இருக்கிறது. நினைப்புகளோ கருத்துக்களோ இல்லாத மனதுக்கே சத்தியம் அகப்படுகிறது! அதனால் தத்துவத்தால் இது இல்லை என்று மட்டுமே சொல்ல முடிகிறது.

தத்துவம் ஞானம் என்னும் மருந்தால் நீக்கப்படும் வியாதி! அதன் பின் குட்டிக்கதைகளும் மௌனமுமே அங்கிருக்கும்!”

Wednesday, April 12, 2017

கிறுக்கல்கள் - 196





சீடர் ஒருவர் தான் தியாலஜி டாக்டர் ஆகிவிட்டதாக மாஸ்டரிடம் தெரிவித்தார். விளையாட்டாக எதையும் செய்யும் மாஸ்டர் அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்; “தியாலஜி டாக்டரா? அது என்ன வியாதி?”

Tuesday, April 11, 2017

கிறுக்கல்கள் - 195





உங்களுக்கு எந்த மாதிரி இறுதி சடங்கு செய்யணும் என்று ஒரு முறை கேட்டார்கள்

மாஸ்டர் சொன்னார் “உடலை கொண்டு போய் யாருமில்லாத இடத்தில போட்டுடுங்க. குழி எல்லாம் தோண்ட வேணாம். மண்ணும் வானமும் என் சவப்பெட்டியா இருக்கட்டும். சந்திரனும் நட்சத்திரங்களும் எனக்கு விளக்குகளா இருக்கட்டும். இயற்கை முழுதும் எனக்கு அளித்த மலர்களா இருக்கட்டும்.”

ம்ம்ம்ம் எரிச்சுடலாம்ன்னு நினைச்சோம்!”


எதுக்கு சிரமம்? அப்புறம் எறும்புகளுக்கும் கழுகுகளுக்கும் விருந்தை ஏன் தடை செய்யறீங்க?”

Monday, April 10, 2017

அந்தணர் ஆசாரம் - 14




ஸ்நாநம், ஸந்த்யானுஷ்டானம் முடித்து காம்ய ஜபங்கள் செய்யலாம். அதாவது சில பாப நிவ்ருத்திக்கான மந்திர ஜபங்கள்.
சுத்திக்கான மந்திரங்களால் ப்ரோக்ஷணம் செய்து கொண்டு ஸ்ரீருத்திரத்தை 11 முறை ஜபிப்பவன் எல்லாம் பாபங்களில் இருந்தும் விடுபடுவதாக போதாயனர் சொல்கிறார். அப்படி செய்பவன் மஹா பாதகம் முதலான அனைத்து பாபங்களில் இருந்து விடுபடுவது தீர்மானமானது என்கிறார் அத்ரி.
கூடுதலாக ஸாவித்ரியையும் புருஷ ஸூக்தத்தையும் ஜபிக்கலாம். இவற்றுக்கு சமமான மந்திரங்கள் இல்லை என்கிறார் விஷ்ணு. ஐந்தாறு மாதங்கள் ஆஹார நியமத்துடன் புருஷஸூக்த ஜபம் செய்பவன் சகல பாபங்களில் இருந்தும் விடுபடுவதாக ஸம்வர்த்தர் சொல்கிறார்.
வேத அதிகாரமில்லாதவர்களுக்கும் பயிற்சி இல்லாதவர்களுக்கும் வழிகள் சொல்லப்படுகின்றன.
ஹரியின் நாமம் சிறந்தது. அவற்றை த்யானம் செய்வது, பாடுவது, கீர்த்தனம் செய்வது ஆகியவற்றை எப்போதும் செய்ய வேண்டும். இதனால் மனதுக்கு சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படும் என்கிறார் ஜாபாலி. விஷ்ணு நாமங்களை உச்சரிப்பவன் புத்திமான்; அவன் சகல பாபங்களைப் போக்கிக்கொண்டு பரிசுத்தனாகிறான் என்கிறார் வஸிஷ்டர். மேலும் நித்ய கர்மாக்களை செய்த பின் மற்ற காலங்களில் க்ருஷ்ண, ராம என்று எப்போதும் ஜபிக்கிறவன் ராஜஸூய யாக பலனை பெறுகிறான் என்கிறார். ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம என்று 13 அக்ஷரங்கள் உள்ள மந்திரத்தை 21 முறை ஜபிக்க அது கோடிக்கணக்கான ப்ரஹ்மஹத்யா தோஷத்தை நசிக்கச்செய்கிறது என்றும் சொல்கிறார்.
மனிதனுக்கு பயத்தை கொடுக்கக்கூடிய ஆபத்துகள் கோடிக்கணக்கில் வந்தாலும் ராம ராம என உச்சரிக்க வந்த ஆபத்துகள் விலகிவிடும் என்கிறார் ப்ருகு.

ஶி, ங்கர, ருத்ர, , நீலகண்ட, த்ரிலோசன என்னும் 6 நாமாக்களை எப்போதும் கீர்த்தனம் செய்கிறவர்களை கலி புருஷன் கெடுக்க மாட்டான் என்றும் ப்ருகு சொல்கிறார். யார் மஹாதேவ, விரூபாக்ஷ, கங்காதர, ம்ருட, அவ்யய என்று கீர்த்தனம் செய்கிறார்களோ அவர்கள் க்ருதார்த்தர்கள் (செய்ய வேண்டியவற்றை செய்து முடித்தவர்கள்) என்றும் சொல்கிறார்.

Friday, April 7, 2017

கிறுக்கல்கள் - 194




 “என் துன்பம் தாங்க முடியலை”
அதான் தாங்கிண்டு இருக்கியே? எப்பவுமே நிகழ்காலம் தாங்க முடியாததுன்னு ஒண்ணு இல்லை. அடுத்த அஞ்சு நிமிஷங்களிலோ அல்லது நாட்களிலோ என்ன நடக்குமோ என்கிற உன் கற்பனைதான் தாங்க முடியாததா தோண வைக்குது! அதான் பிரச்சினை. எதிர்காலத்தில வாழறதை நிறுத்து!”

Thursday, April 6, 2017

கிறுக்கல்கள் - 193




வியாபாரி ஒருவரின் வாழ்க்கை துன்பங்கள் மிகுந்ததாயிற்று. அதனால் வியாபாரத்திலும் பணம் பண்ணுவதிலும் மட்டுமே கவனத்தை செலுத்தினார்.
அவரை சந்தித்த போது மாஸ்டர் சொன்னார்: ”ஒரு காலத்தில் தன் கால் தடங்களை பார்த்து பயந்த ஒருவன் இருந்தான். அதனால் நடப்பதை விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தான். ஓட்டம் கால்தடங்களை இன்னும் ஆழமாக ஆக்கிற்று. அதற்கு பதில் நின்றிருக்கலாம் இல்லை?”

Wednesday, April 5, 2017

கிறுக்கல்கள் - 192




ஏன் நிறைய பேர் ஞானிகள் ஆவதில்லை என்று ஒருவர் கேட்டார்.
அவர்கள் லாபத்தை நஷ்டமாக பார்க்கிறார்கள். அதனால்” என்றார் மாஸ்டர்.

கேள்வி கேட்டவருக்கு புரியவில்லை.

மாஸ்டர் வியாபாரத்தில் இறங்கிய தன் நண்பர் பற்றி சொன்னார். சிறியதாக துவங்கிய வியாபாரம் நல்ல சூடு பிடித்தது. பொருட்களை வாங்க மக்கள் வந்து கொண்டே இருந்தனர். மாஸ்டர் நண்பருக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.

நண்பர் சொன்னார்: “யதார்த்தத்தை பார்க்கலாம். வாசல் கதவுகளை பாருங்க! இத்தனை பேர் வந்துகிட்டே இருந்தா சீக்கிரமே கதவுகளுக்கு கீல் மாத்த வேண்டி இருக்கும்!” 

Tuesday, April 4, 2017

கிறுக்கல்கள் - 191





'போட்டி என்பது கொடியது; தீமையானது' என்றார் மாஸ்டர்.

"ஏன்? போட்டி நம்மில் இருந்து அதிக பட்ச திறமையை வெளிக்கொண்டு வருவதில்லையா?"
"அது வெளிக்கொண்டு வருவதெல்லாம் நமது மோசமான பக்கத்தைத்தான்! ஏனென்றால் அது வெறுப்பை வெளிக்கொண்டு வருகிறது!"
"யாரிடம் வெறுப்பை?"
"முதலில் உன்னிடமே! உனது செயலை உன் போட்டியாளர் நிர்ணயிக்கிறார் இல்லையா? உன் தேவையோ உன் ஆற்றலோ உன் முனைப்போ இல்லை. இரண்டாவது மற்றவர்களிடம். ஏனென்றால் அவர்களை விஞ்ச நீ நினைக்கிறாய். அதற்கு இடமில்லையானால் வெறுப்பு ஏற்படுகிறது."
"ஆனால் நீங்கள் சொல்வது மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் சாவு மணி அடித்துவிடும்!"

"வளர்ச்சி இருக்க வேண்டியது அன்பால் மட்டுமே. தேவையான மாற்றம் நம் இதயத்தில் மட்டுமே! "

Monday, April 3, 2017

கிறுக்கல்கள் - 190




சீடர்களுக்கு ஒரு சோதனை வைத்தார் மாஸ்டர். ஒவ்வொருவரிடமும் ஒரு பேப்பரை கொடுத்து தன் கேள்விக்கு உண்மையான பதில் எழுதச்சொன்னார்.
கேள்வி? இந்த ஹாலின் நீள அகலங்கள் என்ன?
ஏறத்தாழ எல்லாரும் 50 அடி போல ஒரு எண்ணிக்கையை குறிப்பிட்டார்கள். சிலர் தோராயமாக என்னும் வார்த்தையை சேர்த்துக்கொண்டார்கள்.
எல்லா விடைகளையும் பார்த்துவிட்டு மாஸ்டர் சொன்னார் “உண்மையான விடையை யாருமே எழுதவில்லை!”
உண்மையான விடை என்ன என்று யாரோ கேட்டார்கள்.

மாஸ்டர் சொன்னார்: “உண்மையான விடை ‘எனக்குத்தெரியாது’ என்பதே!”