Pages

Friday, April 14, 2017

ஹேமலம்பி வருட வாழ்த்துகள்!




மங்களரகமான ஹேமலம்பி வருடம் வசந்த ருதுவுடன், உத்தராயணப் புண்ணியகாலம் நிறைந்த வியாழன் நள்ளிரவு (விடிந்தால் வெள்ளிக்கிழமை 12மணி 43 நிமிடத்திற்கு 13/14.4.2017 கிருஷ்ண பட்சத்தில் திருதியை திதி, விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதம், துலாம் ராசியில், மகர லக்னத்திலும், நவாம்சத்தில் கும்ப லக்னம், மிதுன ராசியிலும், சித்தி நாமயோகம், பத்தரை நாம கரணத்திலும், புதன் ஹோரையிலும், நேத்திரம் ஜீவன் நிறைந்த பஞ்ச பட்சிகளில் காகம் வலுவிழந்த காலத்திலும், குரு மகாதசையில், சுக்கிர புத்தி, சுக்கிரன் அந்தரத்திலும் வெற்றிகரமான ஏவிளம்பி வருடம் பிறந்துவிட்டது.

ஏவிளம்பி வருட வெண்பா
ஏவிளம்பி மாரியற்பமெங்கும் விலைகுறைவாம்பூவல்விளை வரிதாம் போர் மிகுதி சாவுதிகம்ஆகுமமே வேந்தரணியாயமே புரிவார்வேகுமே மேதினி தீ மேல்.

என்பது இடைக்காடர் சித்தர் மகானின் பாடல்
ஏவிளம்பி மாரி ற்பம் எங்கும் விலை குறைவாம்
பூவல் விளைவு ரிதாம் போர் மிகுதி சாவு திகம்
ஆகும் மேவேந்தர் அநியாயமே புரிவார்
வேகுமே மேதினி தீ மேல்.
 
இதன்படி இந்த வருடத்தில் மழை குறையும், ஆனால் விலைவாசியும் குறையும், உணவு உற்பத்தியாகிய விளைச்சலும் குறையும், விபத்துகளாலும், போராலும் உயிரிழப்புகள் அதிகமாகும். நாடாளுபவர்கள் மனதிலே போர்க்குணம் அதிகமாகும். போர் மூளும், உலகெங்கும் தீ விபத்துகளும் அதிகமாகும் என்கிறார்.

இது இந்த வருஷத்துக்கன பஞ்சாங்க வெண்பா.

எல்லாமே நெகடிவா இருக்கு.
மழை போன வருஷத்தைவிட குறைவா இருக்கும்ன்னா…. என்னாகும்ன்னு யோசிக்கவே பயமா இருக்கு! மழை குறைந்து விளைச்சலும் குறைந்து போனாலும் விலைவாசி குறையும் என்கிறது மத்த ஃபாக்டர்ஸ்படி இருக்கலாம். அது கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல்.
போர் குணம் ஏற்கெனவே அதிகமாத்தான் இருக்கு. ட்ரம்ப்பே சாட்சி!

ஏதானாலும் டிவைன் இண்டர்வென்ஷன்னு ஒண்ணு இருக்கு. ஜோதிடப்படியோ மத்த ப்ரெட்க்ஷன்ஸ் படியோத்தான் நடக்கும்ன்னு இல்லை. இந்த இண்டர்வென்ஷன் வரட்டும்ன்னு சங்கட ஹர சதுர்த்தியும், புனித வெள்ளியும் வரும் இந்த நாளில வேண்டிப்போம்!
***
சம்ஸ்க்ருத சங்கல்பம் சொல்வதில் கொஞ்சம் கவனம் தேவைன்னு சம்ஸ்க்ருத புலவரும் என் மகனுமான ஸ்ரீ ரமண சர்மா சொல்கிறார்.

வருடத்தின் பெயரை ஸங்கல்பாதிகளில் “ஹேமலம்ப” அல்லது “ஹேமலம்பி” என்று சொல்லலாம். அன்றியும் “ஹேவிளம்ப” “ஹேவிளம்பி” என்பது ஸம்ஸ்க்ருத இலக்கணப்படி சரியான சொல் அல்ல. அதாவது “ஹே” என்பதற்கு அடுத்தது “ம” வரவேண்டுமே தவிர “வி” அல்ல. புஷ்யம்/“பூசம்” பக்கத்தில் உள்ள புனர்வஸுவை “புனர்பூசம்” என்று சொல்வது போல் “விளம்பி”க்கு பக்கத்தில் உள்ளதை சாமானியர்கள் “ஹேவிளம்பி” என்கிறார்கள். இது அறியாமல் ஏற்பட்ட பிழையாகும். ஆகவே தவிர்க்கத்தக்கது.”

No comments: