Pages

Monday, April 10, 2017

அந்தணர் ஆசாரம் - 14




ஸ்நாநம், ஸந்த்யானுஷ்டானம் முடித்து காம்ய ஜபங்கள் செய்யலாம். அதாவது சில பாப நிவ்ருத்திக்கான மந்திர ஜபங்கள்.
சுத்திக்கான மந்திரங்களால் ப்ரோக்ஷணம் செய்து கொண்டு ஸ்ரீருத்திரத்தை 11 முறை ஜபிப்பவன் எல்லாம் பாபங்களில் இருந்தும் விடுபடுவதாக போதாயனர் சொல்கிறார். அப்படி செய்பவன் மஹா பாதகம் முதலான அனைத்து பாபங்களில் இருந்து விடுபடுவது தீர்மானமானது என்கிறார் அத்ரி.
கூடுதலாக ஸாவித்ரியையும் புருஷ ஸூக்தத்தையும் ஜபிக்கலாம். இவற்றுக்கு சமமான மந்திரங்கள் இல்லை என்கிறார் விஷ்ணு. ஐந்தாறு மாதங்கள் ஆஹார நியமத்துடன் புருஷஸூக்த ஜபம் செய்பவன் சகல பாபங்களில் இருந்தும் விடுபடுவதாக ஸம்வர்த்தர் சொல்கிறார்.
வேத அதிகாரமில்லாதவர்களுக்கும் பயிற்சி இல்லாதவர்களுக்கும் வழிகள் சொல்லப்படுகின்றன.
ஹரியின் நாமம் சிறந்தது. அவற்றை த்யானம் செய்வது, பாடுவது, கீர்த்தனம் செய்வது ஆகியவற்றை எப்போதும் செய்ய வேண்டும். இதனால் மனதுக்கு சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படும் என்கிறார் ஜாபாலி. விஷ்ணு நாமங்களை உச்சரிப்பவன் புத்திமான்; அவன் சகல பாபங்களைப் போக்கிக்கொண்டு பரிசுத்தனாகிறான் என்கிறார் வஸிஷ்டர். மேலும் நித்ய கர்மாக்களை செய்த பின் மற்ற காலங்களில் க்ருஷ்ண, ராம என்று எப்போதும் ஜபிக்கிறவன் ராஜஸூய யாக பலனை பெறுகிறான் என்கிறார். ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம என்று 13 அக்ஷரங்கள் உள்ள மந்திரத்தை 21 முறை ஜபிக்க அது கோடிக்கணக்கான ப்ரஹ்மஹத்யா தோஷத்தை நசிக்கச்செய்கிறது என்றும் சொல்கிறார்.
மனிதனுக்கு பயத்தை கொடுக்கக்கூடிய ஆபத்துகள் கோடிக்கணக்கில் வந்தாலும் ராம ராம என உச்சரிக்க வந்த ஆபத்துகள் விலகிவிடும் என்கிறார் ப்ருகு.

ஶி, ங்கர, ருத்ர, , நீலகண்ட, த்ரிலோசன என்னும் 6 நாமாக்களை எப்போதும் கீர்த்தனம் செய்கிறவர்களை கலி புருஷன் கெடுக்க மாட்டான் என்றும் ப்ருகு சொல்கிறார். யார் மஹாதேவ, விரூபாக்ஷ, கங்காதர, ம்ருட, அவ்யய என்று கீர்த்தனம் செய்கிறார்களோ அவர்கள் க்ருதார்த்தர்கள் (செய்ய வேண்டியவற்றை செய்து முடித்தவர்கள்) என்றும் சொல்கிறார்.

No comments: