எதுக்கு
இவ்வளோ கஷ்டப்படணும்?
கடவுளையோ
குருவையோ பலமா பிடிச்சுக்கொண்டு
வேண்டிக்கொண்டா அவங்க நம்மளை
ஜீவன் முக்தனாக்க மாட்டாங்களா?
மாட்டாங்க.
இதோ பாருப்பா
இதான் வழின்னு காட்டுவங்களே
தவிர அவங்களா நம்மை ஜீவன்
முக்தனாக்க மாட்டாங்க.
குரு
வேற கடவுள் வேறன்னு ரெண்டா
இல்ல. இருவரும்
ஒருவரே. புலி
வாயில் அகப்பட்ட இரை எப்படி
தப்பும்? வாய்ப்பே
இல்லை. இது
போல குருவோட அருள் கிடைச்சாச்சுன்னா
அவர் கைவிடப்பட மாட்டார்.
ஆனாலும்
அவர் காட்டற வழியில நாம்தான்
நடக்கணும். அந்த
பாதையில் கல்லு இருகோ முள்ளு
இருக்கோ எல்லாத்தையும்
நாம்தான் எதிர்கொள்ளணும்.
நான் யார்ன்னு
நம்மை நாமே அறியாம இன்னொருத்தர்
மூலமா எப்படி அறிய முடியும்?
பாதையை
தெரிஞ்ச பிறகு நாமேதான் அது
வழியா போய் நம்மை நாமே
அறிஞ்சுக்கணும். நம்மோட
கண்ணை நாமேதான் திறக்கணும்.
ஞான ஒளியில
நாம் நம்மையே அறியலாம்.
அதுக்கு
நம்மோட புலன்களே வேண்டாம்;
மனசே
வேண்டாம்ன்னா, கண்ணாடி
ஒண்ணு வேணுமான்னா?
20. கடவுளாலும் குருவாலும் ஒரு ஜீவனை முக்தனாக்க முடியாதா?
கடவுளும் குருவும் முக்தியை யடைவதற்கு வழியைக் காட்டுவார்களே யல்லாமல், தாமாகவே ஜீவர்களை முக்தியிற் சேர்க்கார். கடவுளும் குருவும் உண்மையில் வேறல்லர். புலி வாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ, அவ்வாறே குருவின் அருட் பார்வையிற் பட்டவர்கள் அவரால் ரக்ஷிக்கப்படுவரே யன்றி ஒருக்காலும் கைவிடப்படார்; எனினும், ஒவ்வொருவரும் தம்முடைய முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முத்தியடைய வேண்டும். தன்னைத் தன்னுடைய ஞானக் கண்ணால், தானே யறியவேண்டுமே யல்லாமல், பிறராலெப்படியறியலாம்? ராமனென்பவன் தன்னை ராமனென்றறிவதற்குக்கண்ணாடி வேண்டுமோ?
No comments:
Post a Comment