இந்த
வைராக்கியம், வைராக்கியம்ன்னு
சொல்றாங்களே அது என்ன?
பற்றின்மையே
வைராக்கியம். எப்படியோ
பழக்கத்துல இது உறுதித்தன்மை-
டிடர்மினேஷன்
- என்கிற
பொருள்ள மட்டுமே வழங்கப்பட
ஆரம்பிச்சுடுத்து.
கிளம்புகிற
நினைவுகளில ஒரு பற்றையும்
வைக்காம கிளம்பற இடத்திலேயே
நசுக்கிப்போடணும். இதுவே
வைராக்கியம்.
சாதாரணமா
உடம்பு மிதக்கும். அது
தண்ணிக்குள்ள போகணும்ன்னா
வேற ஒரு உதவி தேவைப்படும்.
அதுக்காக
கனமான கல்லை கால்ல கட்டிகிட்டு
முத்து குளிக்க குதிப்பாங்க.
முத்தை கண்டு
எடுக்கிறதே லட்சியம்.
அத கண்டுபிடிச்சு
சேர்த்தவுடன் கல்லை கழட்டி
விட்டுட்டா சுலபமா மேலே
வந்துடலாம்.
அது
போல ஆத்மாவை தரிசிக்கணும்
என்கிற ஒரே ஒரு பற்றை மட்டும்
வெச்சுக்கொண்டு உள்ளே ஆழ்ந்து
முழுகி லட்சியத்தை அடந்தவுடன்
அந்த பற்றும் நீங்கி ஆத்மாவிலேயே
நிலையாக நிக்கலாம்.
19. வைராக்கியமாவது எது?
எவ்வெந் நினைவுகள் உற்பத்தியாகின் றனவோ அவற்றை யெல்லாம் ஒன்றுகூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியமாம். முத்துக் குளிப்போர் தம்மிடையிற் கல்லைக் கட்டிக் கொண்டு மூழ்கிக் கடலடியிற் கிடைக்கும் முத்தை எப்படிஎடுக்கிறார்களோ, அப்படியே ஒவ்வொருவனும் வைராக்கியத்துடன் தன்னுள் ளாழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தையடையலாம்.
No comments:
Post a Comment