முக்தியில விருப்பம் இருக்கறவனுக்கு தத்துவங்களின் விசாரணை இருக்கணும், இல்லையா?
96, 36, 24
தத்துவங்கள்
என அந்தந்த தர்சனங்களை பொருத்து
சொல்லப்படுது. அதாவது
மனுஷன் இத்தனை தத்துவங்களால
செய்யப்பட்டு இருக்கான்.
அது ஒவ்வொண்ணும்
இதை செய்யறது அதை செய்யறது
என்று ஆராய்ச்சியும் விளக்கங்களும்
பெருகிக்கொண்டே போகும்.
இத்தனையும்
பிரபஞ்சத்தில இருக்கற
விஷயங்கள்தானே? அதை
விட்டு ஆத்மாவை பார்க்கத்தானே
நாம் முயற்சி செய்யறோம்?
அதனால இதை
எல்லாம் கத்துக்கொண்டா
அப்புறமா அதை தள்ள வேண்டி
இருக்கும். இதில
பயனே இல்லையே? எதுக்கு
ஒண்னை கத்துக்கணும் அப்புறமா
அதை மறக்கணும்? கத்துக்காமலே
இருந்துடலாம்.
21. முக்தியில் விருப்ப முள்ளவனுக்குத் தத்துவங்களின் விசாரணை அவசியமா?
குப்பையைக் கூட்டித் தள்ள வேண்டிய ஒருவன் அதையாராய்வதா லெப்படிப் பயனில்லையோ, அப்படியே தன்னையறிய வேண்டிய ஒருவன், தன்னை மறைத்துக்கொண்டிருக்கும் தத்துவங்க ளனைத்தையும் சேர்த்துத் தள்ளிவிடாமல் அவை இத்தனை யென்று கணக்கிடுவதாலும், அவற்றின் குணங்களை யாராய்வதாலும் பயனில்லை.
பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப்போலெண்ணிக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment