Pages

Monday, January 18, 2016

நான் யார்? - 11



அந்த சொரூபம் எப்படி இருக்கும்? அதோட இயல்பு என்ன?
சொரூபம் மட்டுமே இயல்பா இருக்கும். அதுவே ஆத்மாவோட சொரூபம். நாம உலகம் சீவன் கடவுள்ன்னு எல்லாம் சொல்கிறோமே அது எல்லாமே இது மேல தோற்றுவிக்கப்பட்ட கற்பனைகளே.
கடற்கரையில ஒரு சிப்பி இருக்கு. நாம கடற்கரையில் உலாவ போகறப்ப இது நம் கண்ணுல படுது. சூரிய ஒளியில இது பளிச்சுன்னு இருக்கு. நாம அதை ஏதோ வெள்ளியால செஞ்ச பொருள் அங்கே கிடக்குன்னு நினைப்போம். கிட்டே போய் பார்க்கிற வரைக்கும் இது நமக்கு வெள்ளியாத்தான் தோணும். கிட்டே போய் பார்த்தா து வெள்ளி இல்லே, சிப்பின்னு தெரியு.
அது போலத்தான் இதுவும். சீவன் ஈஸ்வரன் உலகம்ன்னு எல்லாம் கற்பனை செஞ்சது எல்லாம் ஒரே பொருளைத்தான். விசாரணை செஞ்ச பிறகே அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை; அது நம்மோட பார்வையை பொருத்தே இருந்ததுன்னு தெரிய வரும்.

16. சொரூபத்தின் இயல்பு என்ன?
யதார்த்தமா யுள்ளது ஆத்மசொரூப மொன்றே. ஜக, ஜீவ, ஈச்வரர்கள் சிப்பியில் வெள்ளிபோல் அதிற்கற்பனைகள்; இவை மூன்றும் ஏக காலத்தில் தோன்றி, ஏக காலத்தில் மறைகின்றனநான் என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத விடமே சொரூபமாகும். அதுவே மௌன மெனப்படும். சொரூபமே ஜகம்; சொரூபமே நான்; சொரூபமே ஈச்வரன்; எல்லாம் சிவ சொரூபமே.

No comments: