Pages

Friday, May 2, 2008

நேர்மை, அன்பு



நேர்மை

பலவார்த்தைகளை ஏறக்குறைய ஒரே மாதிரி பொருள் செய்துக்கிறோம் நாம். சத்தியம் நேர்மை ஒரே மாதிரி இருக்கில்லே?

நன்னடத்தைதான் நேர்மை. எல்லா சூழ்நிலைலேயும் நேர்மையை கடைபிடிக்கனும்.
பல பேர் சாதாரணமா இருக்கிறப்ப நேர்மையா இருப்போம். அதுவே ஒரு இக்கட்டுன்னா நேர்மையா இருப்போமாங்கிறது சந்தேகமே.
இருந்தாலும் இதை ஒரு அடிப்படை அறமா சொல்கிறாங்க.

இறைவனை நம்பறதுல பகட்டில்லாத நேர்மை; அவன் பேரை சொல்கிறதுல நேர்மை; மகான்களுக்கு செய்கிற தொண்டில நேர்மை. இப்படின்னு ஒத்தரோட உலகியல் வாழ்வு இறையியல் வாழ்வு இரண்டிலேயும் நேர்மையை கடைபிடிச்சா சாதனைல உயரலாம்.
இதுவெல்லாம் சுலபமில்லைதான். ஆனால் இறை நம்பிக்கையால இதை சாதிக்கணும்.

அடுத்து அன்பு.

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்
என்பு தோல் போர்த்த உடம்பு

அன்பில்லாத ஆள் சும்மா தோல்போத்திய எலும்பு கூடுதானேங்கிறார் வள்ளுவர்
சங்கரரும்
மனுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹா புருஷசம்ஸ்ரயம்
துர்லபம் தேவானுக்ரஹ ஹேதுகம்

அப்படின்னு விவேக சூடாமணில சொல்கிறார். இதுல மனுஷ்யத்வம் என்கிறது அன்பின் அடிப்படையில்தான்.

இந்த அன்பு வெறும் கவர்ச்சி/ மோகம் /பற்றால வரதில்லை. தன்னலமில்லாத தியாகம் தூய்மையான வாழ்வு இதன் அடிப்படைல வரதுதான் அன்பு.

சுய நல அடிப்படையா இருந்தா அதுக்கு இவ்வளோதான்னு ஒரு வரம்பும் துயரமும் கலந்தே இருக்கும்.

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிர்க்கும் தம்முயிர் போல் எண்ணியுள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாரவர் உளந்தான்
சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடமென நான் தேர்ந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்ததாலோ

வள்ளலார்தான் சொல்கிறார்.


வித்தையும் வினயமும் இருக்கற பிராம்ஹணன், பசு, யானை, நாய், நாயைச் சாப்பிடற புலையன் இவை எல்லாத்தையும் ஞானிகள் சமமான பார்வையிலேயே பார்க்கிறாங்கன்னு கிருஷ்ணன் சொல்கிறான். கீதை 5-18

இந்த மாதிரியாக ஞானம் அன்போட முதிர்ச்சில வரும். இந்த மாதிரியான ஞானிகளுக்கு செய்கிற தொண்டையே ரொம்ப உயர்ந்ததா சொல்கிறாங்க.

சாதகன் தூய அன்பை வளத்துகிறதால, "தான்" என்கிற சின்ன வட்டத்துலே இருந்து விடுவிச்சுக்கிட்டு மற்றவங்களுக்கு ன்னு வட்டம் விரிஞ்சு பிறகு இறைவன் படைச்ச உயிர்கள் எல்லாத்து மேலயும் அன்பு காட்டுகிறதா ஆகி விடுவான். இது இறை தரிசனம் பெற பெரிய துணையா ஆகும்.

யாரால தன்னலமில்லாத தூய அன்பை உணர முடியலையோ அவரால இறைவனை உணர முடியாது.


7 comments:

Geetha Sambasivam said...

//யாரால தன்னலமில்லாத தூய அன்பை உணர முடியலையோ அவரால இறைவனை உணர முடியாது.//


அருமையான மேற்கோள்! நன்னி!

மீ த ஃப்ர்ஷ்டு???? யாரையும் காணோம்???????

திவாண்ணா said...

வாங்க அக்கா.
இன்னிக்கு சனிக்கிழமை. ஆபீஸ் கிடையாதில்ல? இப்படி ஒரு கேள்வி கேக்கிறீங்களே?
:-))

சில பார்மேட் திருத்தங்கள் செய்து இருக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

நான் நேற்று போட்ட கமெண்ட் எங்கே?, எங்கே?

திவாண்ணா said...

@ மௌலி.
பென்டிங்க் ஏதும் இல்லையே மௌலி?
இப்பல்லாம் gமெய்ல் ஐ நம்பாம நேரா ப்ளாக் டாஷ் போர்ட்லேயே பாக்கிறேன்.
திருப்பி போடலாமா?

ambi said...

ம்ம், நேர்மைக்கு இப்படி கூட பொருள் கொள்ளலாமா?

//இன்னிக்கு சனிக்கிழமை. ஆபீஸ் கிடையாதில்ல? //

நான் இந்த வரிகளை படிக்கவேயில்லை. :P

A small suggestion, பதிவின் முதலிலும், இறுதியிலும் வரும் சிரிப்பான்கள் அவசியமா? தங்கள் பதிவு(entire page) லோடு(load) ஆவதற்க்கு நேரம் பிடிக்கிறது.

திவாண்ணா said...

//நான் இந்த வரிகளை படிக்கவேயில்லை. :P//

அதானே!
சிலருக்கு செலக்டிவ் ஹியரிங் மாதிரி உங்களுக்கு செலக்டிவ் விஷன் போல இருக்கு!

ரெண்டே ரெண்டு படம்தானே போடறேன்? ரெண்டுமே ரொம்ப சின்ன சைஸ். பிரச்சினை இருந்தா படங்களை தவிர்க்கும் செட்டிங் பண்ணிடலாமே. உபயோகிப்பது பயர்பாக்ஸ் ஆ இருந்தா இமேஜ் லைக் ஒபெரா ன்னு ஒரு நீட்சி இருக்கு.

திவாண்ணா said...

@மௌலி
நீங்க முந்தா நேற்று போட்டதா சொன்ன
கமெண்ட் எங்கே?, எங்கே?
:-)