பக்தர்கள் இறைவனை பாக்கிறதுல தன் காதலன் / காதலியா பாக்கிறதும் உண்டு. மாணிக்கவாசகர் அப்படி நாயிகா பாவத்தில நிறைய பாடினாராம். ஆழ்வார்களும் அப்படி பாடியிருக்காங்க.
பாரதியார் கவிஞரானாலும் அவ்வப்போது ஞான / இறை அனுபவம் பெற்றவர்.
அவர் இறைத்தன்மையை சக்தியாகவும் கண்ணனாகவும் பார்த்தார். கண்ணனை தாயாகவும் குழந்தையாகவும் தகப்பனாகவும் ஆசானாகவும் சேவகனாகவும் பார்த்தவர்.
அப்படிப்பாத்து ஒவ்வொரு பாட்டு எழுதினவர் "கண்ணன் என் காதலன்" னு ஆரம்பிச்சு பாட்டா எழுதி தள்ளிட்டார் போலிருக்கு!
முதல்லே என்னன்னே புரியாம வெளியிலே வெச்ச விளக்கு அலையறதை போல அல்லல் படுறார்.
தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப்போல்
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சம் துடித்ததடீ
கூண்டுக்கிளியினை போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்
வேண்டும் பொருளை எல்லாம்-
மனது வெறுத்து விட்டதடீ.........
திடீர்ன்னு ஒரு நாள் கொஞ்சம் புரிகிறது.
கனவு கண்டதிலே - ஒரு நாள்
கண்ணுக்கு தோன்றாமல்
இனம் விளங்கவில்லை - எவனோ
என்னகம் தொட்டுவிட்டான்....
யார்ரான்னு யோசிக்கிறார்.
எண்ணி எண்ணி பார்த்தேன்: - அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ!
அப்புறம் கண்ணனாலதான் எல்லாம்ன்னு தெரிகிறது. உறக்கத்திலும் விழிப்பிலும் அவனே இருக்கிறான்.
.....நானும் பல தினங்கள் பொறுத்திருந்தேன் - இது
நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டதே
கூன னொருவன் வந்திந் நாணி பின்னலைக்
கொண்டை மலர் சிதற நின்றிழுத்தும்....
பயல் படுத்துகிறான். அவன் கதைகளெல்லாம் கேட்க கேட்க தூக்கம் இல்லாம போகுது!
கண்ணன் எங்கே எங்கேன்னு தேடுகிறார். காட்டிலேயெல்லாம்!
.
.....திக்குத்தெரியாத காட்டில்- உனைத்
தேடித் தேடி இளைத்தேனே!...
காட்டிலே வேடன் ஒத்தன் பாத்து ஆசை வைக்கிறான். பாரதி மறுக்கிறார்.
"அண்ணா உனதடியில் வீழ்வேன் - எனை
அஞ்சக்கொடுமை சொல்ல வேண்டா - பிறன்
கண்ணலஞ் செய்துவிட்ட பெண்ணே - எந்தன்
கண்ணற் பார்த்திடவுந் தகுமோ?”
வேடன் வற்புறுத்துகிறான். "கண்ணா!” என்று அலறி மயங்கி விழுகிறார். நினைவு வரும் போது யாரையும் காணோம்!
அப்புறம்
கண்ணன் மனநிலையைத் - தங்கமே தங்கம்ன்னு தூது விடுகிறார்.
கண்டு வர வேணுமடி தங்கமே தங்கம்
“நேர முழுவதிலுமப் பாவி தன்னையே - உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒரு சொலின்று கேட்டு வந்திட்டால் - பின்பு
தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்"
என்று வெறுத்துப்போகிறார்.
இப்படி உருகற ஆசாமிக்கு காதலன் உருவம் கூட மறக்குமா என்ன? அப்படியும் ஆயிடுது!
பிறிவாற்றாமையில் புலம்புகிறார்:
"கண்கள் புரிந்துவிட்ட பாவம் -உயிர்க்
கண்ணனுரு மறக்கலாச்சு!
பெண்களினிடத்திலிது போலே - ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?”
இப்படி ஒரு பக்தன் காதலனாக பகவானை நினைத்து பக்தி செலுத்தறதை சுப்ரமணிய பாரதியார் நல்லாவே காட்சிக்கு கொண்டு வரார். முழு பாடல்களையும் படிச்சுப்பாருங்க!
2 comments:
இப்ப எதுக்கு என்னை ஒரு கொசுவத்தி ஏத்த வச்சீங்க?
'பாலத்து ஜோசியனும் கிரகம் படுத்தும் என்றுவிட்டான்.'
மூணாப்புப் படிக்கையில் நான் இதுக்குச் செஞ்ச கொரியோகிராஃபியில்.....
.....கிரகம் படுத்து .....மென்றுவிட்டான்
:-)))))
// மூணாப்புப் படிக்கையில் நான் இதுக்குச் செஞ்ச கொரியோகிராஃபியில்.....
.....கிரகம் படுத்து .....மென்றுவிட்டான்//
:-))))))))
கொசு அதிகமா இருந்தா வத்தி ஏத்த வேண்டியதுதானே அக்கா?
(ஜோக் புரியாதவங்க கொஞ்சம் முதல் பாட்டோட நாலாவது பத்திய படிங்க!)
Post a Comment