Pages

Monday, May 12, 2008

ரிவிஷன்



-பக்தி யோகத்துல இறங்கறவங்க எப்படி இருக்கனும்?
என்கிற தலைப்பில முன்னேயே பட்டியல் போட்டு இருந்தோம். அனேகமா அது எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா பாத்துட்டோம். முன்னே பின்னே இருக்கு. இது அத எல்லாம் கொஞ்சம் நேர் செய்ய.

1. பயிற்சி: அசையாத மனசோட எப்போதும் தொடர்ச்சியாக கடவுளை நினைச்சுக்கிட்டே இருப்பது. அதெப்படி எப்பவுமே நினைக்க முடியும்ன்னா, முடியும். வழியை அப்புறமா பாக்கலாம். இங்கே இருக்கு.

2. விவேகம்: சரி தவறு என்கிற பாகுபாடு தெரியணும். அதில் சரியானதையே எப்பவும் தேர்ந்தெடுக்க முடியனும். இங்கே இங்கே இங்கே இருக்கு

3. விமோகம்: மோகம் நமக்கு தெரிஞ்சதுதானே. அது உலக விஷயங்கள்ல. மோகம் இல்லாம இருப்பதே விமோகம். அதாவது பற்றுக்களில் இருந்து விடுபடுதல். இங்கே இருக்கு

4. சத்தியம்: வாய்மை. ஆன்மீகத்தில எந்த வழியா போனாலும் கடை பிடிக்க வேண்டியது. உண்மையே நினைத்து உண்மையே பேசி மனச்சாட்சி சொல்கிறதை கேட்டு நடப்பது.

5. அர்ஜவம்: நேர்மை இங்கே இருக்கு

6. கிரியை: எல்லா சீவ ராசிகளுக்கு நல்லதே செய்வது. ஏன்னா எல்லா சீவராசிகளிடமும் கடவுள் இருக்கிறார் இல்லையா? இங்கே இருக்கு

7. கல்யாணம்: திருமணம் இல்லைங்க! இதுவும் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்து வேற விதமா பயன்படுகிற பல வார்த்தைங்கள்ல ஒன்னு! கல்யாணம் என்கிறது மற்றவர்களிடம் அன்பு பாராட்டி அவர்கள் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது. கடவுளிடம் வேண்டிக்கிறப்ப எல்லாரும் நல்லா இருக்கணும், உலகம் அமைதியா நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிறது.

8. தயை: கருணை. அன்பே சிவம். கடவுள் அன்பு, மன்னிக்கும் தன்மை, பரிவு கொண்டவன். அவனை புரிந்து கொள்ள , அடைய முயற்சி பண்ணுகிற நாமும் அவனை மாதிரி இருக்க பழக வேண்டும். இங்கே இருக்கு

9. அஹிம்சை: மனதாலும் செயலாலும் மற்ற சீவ ராசிகளுக்கு துன்பம் விளைவிக்காம இருப்பது. இங்கே இருக்கு

10. தானம்: கஷ்டப்படுகிற ஏழை எளிய மக்களுக்கு முடிந்தவரை, சுத்தமான உள்ளத்தோட வாரி கொடுக்கிறது. இங்கே இருக்கு

11. அனவஸ்தை: அவஸ்தை தெரியுமில்லையா? கஷ்டப்படுகிறது. அனவஸ்தை எப்பவுமே சிரிச்சுகிட்டு நம்பிக்கையோட இருப்பது. இங்கே இருக்கு

இந்த பதினொரு விஷயமும் பக்தி வழில சீரியஸா ஈடுபடறவங்களுக்கு இருக்க வேண்டிய விஷயங்கள். நமக்கு இதெல்லாம் இல்லைன்னா வளர்த்துக்க வேண்டியது.


5 comments:

Geetha Sambasivam said...

முன்னாலே சொல்லி இருந்தால் இன்னும் படிச்சிட்டு வந்திருப்பேன், திடீர்னு ரிவிஷன் டெஸ்ட் வச்சா எப்படி????? :P

திவாண்ணா said...

அது சரி! டெஸ்ட் எங்கே இருக்கு?
சும்மா நினைவூட்ட.
ஆமாம் இன்னிக்கி 2 போஸ்ட் என்கிறதை பாத்தீங்களா? இல்லாட்டா இதுலேயும் மொக்கையான்னு யாரானும் சொல்லிடுவாங்களோன்னு...
;-)

ambi said...

ரிவிஷனா? சரி நல்லது தான். :)

முந்தின பதிவும் பாத்தேன். நான் கேள்விபட்ட பரிஷித்து கதை:

பாம்பால் உயிர் பிரியும் என அறிந்த மன்னன், பெரிய கோட்டையில் பலத்த 24 மணி நேர காவலுடன் இருந்தான்.

சரியாக ஏழாம் நாள் அன்று, ராஜா பழம் நறுக்க பழத்தினுள்ளே இருந்த பூ நாகமானது மன்னை கடித்ததாம்.

விதியின் வலிமையை பத்தி ஜோதிஷத்தில் சொல்லும் போது இந்த கதையை சொல்வார்கள்.

ஒரு வேளை பரிஷித்து மன்னன் பழம் சாப்பிட்டு கொண்டே பாகவதம் கேட்டு இருக்கலாம். :p

மெளலி (மதுரையம்பதி) said...

இப்படி எல்லா பதிவுகளையும் இணைத்துச் சொன்னது நல்லாயிருக்கு. கொஞ்சநாள் கழித்து திருப்பிப் பார்க்க வசதிதான்.

jeevagv said...

ரிவிஷனுக்கு நன்றி.