Pages

Sunday, May 11, 2008

கேள்வி




ம்ம்ம்ம் கடந்த பதிவுகள் கடைசிலே கொஞ்சம் கனமா போச்சோ என்னவோ!

ஆமாமா! நீங்க பாட்டுக்கு இப்படி இப்படி இருக்கணும்னு பட்டியல் முழ நீளம் போட்டுக்கிட்டே போனா எப்படி? எதை கடை பிடிக்கணும்னு கொஞ்சம் சிம்ப்ளா சொல்லுங்க!

சரி ஆகட்டும். சிம்பிளாவே போகலாம்.
முதல்ல வரது பகவானோட கதைகளை கேக்கிறது.
முதல்ல இறைவனோட பெருமைகளை தெரிஞ்சுக்கணும். அப்புறம் அப்படி தெரிஞ்சுக்கிறதோட பயனை பத்தி தெரிஞ்சு, இறைவனை பத்தி மேலும் தெரிஞ்சு கொண்டு, யார் எப்படி பயன் பெற்றாங்களோ அவங்க வழியை தெரிஞ்சுக்கணும். நாமும் அவங்களோட உயர்ந்த நிலையை அடைய சாதனை செய்யனும். இதுக்கெல்லாம் முதல் படி பகவானை பத்தி தெரிஞ்சுகிறதுதானே? இதுதான் முத படி. கேள்வி. சிரவணம் என்கிறாங்க. கேக்க கேக்க அவனை பாக்கத்தோணும். மனசு ஒருமை படும். மத்த விஷயங்கள் மேல பற்று விலகும். இது அடுத்த படிகள்ல போக உதவும்.

அட, அட, இப்படி ஏதாவது சுலபமா சொல்லறதை விட்டுட்டு.. ம்ம்ம் மேலே சொல்லுங்க. கதை கேட்டாலே பக்தில முன்னேறி மோக்ஷம் கிடச்சுடும் இல்ல?

நக்கலா? அப்படி கதை கேட்டுதான் ஒத்தர் மோக்ஷத்துக்கு போனாரு!

அட நெசமாவா? அப்ப கதை சொல்லுங்க.

இதோ பிடிங்க!
பரிக்ஷித்து மகா ராஜா ஒரு நாள் பரிவாரங்களோட வேட்டையாடிகிட்டு இருந்தார். வேட்டை மும்முரத்துல எல்லாரும் பிரிஞ்சுட்டாங்க. பரிக்ஷித்துக்கு தாகம் எடுத்தது. தண்ணீர் தேடி போனார். அங்க சமீரகர் என்கிற முனிவர் தவம் செஞ்சுகிட்டு இருந்தார். அவரை தண்ணி கேட்டார். அவரோ தவம் கலையாம இருந்ததால பதில் சொல்லலை. கோபப்பட்டு பரீக்ஷித்து அங்கே பக்கத்தில கிடந்த ஒரு செத்த பாம்பை தூக்கி அவர் கழுத்துல மாலை மாதிரி போட்டுட்டு போயிட்டான்.
பிறகு சமீரகரோட பிள்ளை அங்க வந்தான். வயசு சின்னதானாலும் தபசு பெரிசு. அப்பா கழுத்தில செத்த பாம்பை பாத்தான். நடந்த விஷயம் ஞான திருஷ்டில தெரிஞ்சது. படு கோபம் வந்தது. "இவனென்லாம் ஒரு ராஜாவா? என் அப்பா கழுத்தில பாம்பை மாலையா போட்டவன் ஒரு வாரத்தில தக்ஷகன் பாம்பு கடிச்சு சாகட்டும்" ன்னு சாபம் கொடுத்துட்டான்.
சமீரகர் தவம் கலைஞ்சு எழுந்தப்ப தன் பையன் அழுதுக்கிட்டு இருக்கிறதை பாத்தார். ஏண்டா அழறேன்னு கேட்டார். பையனும் நடந்ததை சொன்னான். "என்ன காரியம்டா செஞ்சே? நானோ முனிவன். எனக்கு பாம்பை போட்டா என்ன மாலையை போட்டா என்ன? ரெண்டும் ஒண்ணுதான். இதுக்குப்போய் ராஜாவை சபிச்சுட்டயே! அவனால எத்தனை ஜனங்க சந்தோஷமா இருக்காங்க?” இப்படி கடிந்துகிட்டு ராஜா கிட்டே போய் விஷயத்தை சொல்லி இன்னும் ஏழு நாள்தான் உயிர் வாழ்வார் அப்பிடின்னும் சொல்லிட்டு வான்னார்.

இதை கேள்வி பட்ட ராஜா வருத்தப்பட்டான். இன்னும் ஒரு வாரம்தான் இருக்கா? அதுக்குள்ள நாம் எப்படி உருப்படலாம் னு யோசிச்சான். சரி வடக்கிருந்து உயிர் தியாகம் பண்ணலாம்னு கங்கை கரைக்கு போனான். பல ரிஷிகளும் வந்து சேந்தாங்க. அவங்களை வணங்கி தேற வழிய சொல்லுங்கன்னு கேட்டான். அவங்க சுகர் கொஞ்ச நேரத்துல இங்க வருவார். உனக்கு மோக்ஷம் கிடைக்க வழி அவரால தெரியும் னு சொல்லி ஆசிர்வாதம் செஞ்சுட்டு போயிட்டாங்க. அங்கே சுக பிரம்ம ரிஷியும் வந்து சேர்ந்தார். அவரை வணங்கி யோசனை கேக்க அவர் ஒரு வாரத்தில மோக்ஷம் கிடைக்கும் வழி பகவானை பத்தி கதை கேட்கிறதுதான் அப்படின்னு சொல்லி பாகவதத்தை சொல்ல ஆரம்பிச்சார்.ஒன்பதாவது அத்தியாய கடைசில சுகர் கிருஷ்ணனோட பெருமைகளை சுருக்கமா சொன்னார். பரிக்ஷித்து "எனக்கு ரொம்பவே அதிருப்தியா இருக்கே. ஹரிசந்திரன், துஷ்யந்தன், சூரிய குல மன்னர்கள், சந்திர குல மன்னர்கள் கதை எல்லாம் கேட்டப்ப எப்ப கிருஷ்ணன் கதை வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன். என் உறவினர்கள் எல்லாரும் கிருஷ்ணன் பத்தி எவ்வளவு உயர்வா சொல்லி இருக்காங்க. அவன் கதையை கேக்கதான் நான் உயிர் பிழச்சு இருக்கேன் போல தோணுது. அதனால அவன் கதையை விரிவா சொல்லுங்க" ன்னு கேட்டான். ரொம்பவே சந்தோஷப்பட்ட சுகர் கிருஷ்ணன் கதையை விஸ்தாரமா சொல்ல (10 வது அத்தியாயம்) சிரத்தையோட கேட்ட பரிக்ஷித்து மோக்ஷம் அடைஞ்சான்.

5 comments:

Geetha Sambasivam said...

இதைப் பார்த்துட்டுத் தான் அங்கே போனேன், இதுக்குத் தனியா பின்னூட்டம் வேணும்னு நேரடியாவே சொல்லி விடலாம், கேள்விகள்னு பார்த்துட்டுத் தானே ரிவிஷனே பண்ண முடியும்??????

திவாண்ணா said...

//கேள்விகள்னு பார்த்துட்டுத் தானே ரிவிஷனே பண்ண முடியும்??????//

:-))))))))))))
அது சரி!
கேள்வி பதிவு முன்னாலேயே எழுதி சேமிச்சது. பப்ளிஷ் ன்னு சொன்னதும் பழைய தேதியே போட்டு பப்ளிஷ் ஆகிவிட்டது போல இருக்கிறது.

திவாண்ணா said...

அம்பி எழுதியது:

முந்தின பதிவும் பாத்தேன். நான் கேள்விபட்ட பரிஷித்து கதை:
பாம்பால் உயிர் பிரியும் என அறிந்த மன்னன்,....
~~~~~~~~~~~~~
அம்பி நானும் சின்ன வயசில் அப்படி கதை கேட்டு இருக்கேன். ஆனால் இந்த கதை பாகவதத்திலே வருகிறதால authenticated.

மெளலி (மதுரையம்பதி) said...

ச்ரவணம், கீர்த்தனம் மானசம் இப்படியாக வைத்து ஒரு ஸ்லோகமே படித்த நினைவு...ஆனால் ஸ்லோகம் மறந்துடுத்து... :(

திவாண்ணா said...

@மௌலி
வேற யாரு? நம்ம பிரகலாதன்தான் (அம்பி இல்லை!) லிஸ்ட் போட்டு இருக்கார். அப்புறமா வெளியிடறேன்.