உண்மையா பக்தி செய்கிறவங்க எப்படி இருப்பாங்கன்னு பாத்திருக்கோம். அதுக்கு இலக்கணமா வாழ்ந்தவர் தியாக பிரமம் என்கிற தியாக ராஜர். அவர் என்ன சொல்கிறார்ன்னு பாக்கலாமா?
ராகம் பியாகடை
தாளம் ஆதி
பல்லவி
பக்துனி சாரித்ரமு வினவே
மனஸா ஸீதா ராம
அனு பல்லவி
ஆஸக்தி கேல தாருகோசுஜீ
வன்முக்துடை யாநந்தமு நொந்து
சரணங்கள்
ஜபதபமுலுதா ஜேசிதி நநராது அதிகாகமரி
கபடாத் முடு மநமை பல்கராது
உபமதநகு லேகயுண்ட வலெ நநி
ஊரயூர திருக கராது
சபல சித்துடை யாலுஸு துலபை
ஸாரெகு ப்ரம காராத நேஹரி - (பக்)
பவ விப வமுநிஜ மநியெம்ச கராது அதிகாகமரி
சிவ மாதவ பேத முசேயக ராது
புவநமந்து தாநே யோக் யுட நநி
பொம்கி பொட்ட ஸாக ராது
பவநாத் மஜத்ருதமௌ ஸீதாபதி
பாத முலுயே மரராதநு ஹரி - (பக்)
ராஜஸ தாமஸ குணமுலு காராது அதிகாகநுசு
வ்யாஜ முநநு ராலேத நகாராது
ராஜயோக மார்கமுநீ சித்தமு
ராஜூ சுட விட வகராது
ராஜசிகா மணியை நத்யாக
ராஜ ஸகுநி மரவராத நேஹரி - (பக்)
ஸீதாராம பக்தனுடைய (வாழ்க்கை குறிப்பு) சரித்திரம் (பக்தனுடைய இயல்பு குணம்) இவற்றை மனமே கேள்.
தன்னால் இயன்ற வரை தருமங்களை செய்து அல்லது தனக்கு கிடைத்ததை கொண்டு திருப்தி அடைந்து ஒரு ஜீவன் முக்தனுடைய நிறைவுள்ள ஆனந்தத்தை அடைகிறான்.
ஜபம் தபம் இவற்றை தாம் முறையே செய்தும் அவைகளை மற்றவர் அறிய வெளியே சொல்ல மாட்டான். மனதில் கபடம் ஏதும் இல்லாமல் இருப்பான். தனக்கு நிகர் யாருமில்லை என ஊர் ஊராக சொல்லித்திரிய மாட்டான். அற்ப ஆசை கொண்ட மனதுடன் வீடு பொருள் இவற்றில் பற்று வைக்க மாட்டான். இவ்வுலகில் அடைபவைகளை உண்மை என்று நம்பி இருக்க மாட்டான். அதுவுமில்லாமல்
சிவன் விஷ்ணு என்று பேதம் செய்ய மாட்டான். இந்த புவனத்தில் நான் ஒருவனே யோக்யன் என்று பெருமை பேசி காலம் கழிக்க மாட்டான். ஆஞ்சநேயன் பற்றும் திருவடிகளை உடைய சீதாபதியின் பாதாரவிந்தங்களில் பக்தி மறக்க மாட்டான். ராஜஸ தாமஸ குணங்களை அடையாது எல்லாம் கர்ம வசப்படியே வரும் என்று ராஜ யோக மார்கத்தை சித்தத்தில் நிலை பெற வைத்து ராஜ சிகாமணியான திருவாரூர் தியாகேசப்பெருமான் தோழராய் விளங்கும் ராமனை மறவாமல் இருப்பான்.
கொஞ்சம் கேக்கலாமா?
|
சமீபத்தில் ஸ்ரீ ஜீவாவிடம் ஆன்மீக பாடல்கள் பற்றி கேட்டு இருந்தேன். விரும்பியதை கொடுப்பவன் அல்லவா எம் பெருமான்? சமீபத்தில் கிடைத்த ஒரு புத்தக தொகுப்பை எடுத்தேன். முழுக்க முழுக்க தியாகராஜர் பாடல்கள்! இந்த பதிவில் எழுதி இருப்பது அதிலிருந்து எடுத்ததே. தொகுப்பு "வைதிக தர்ம வர்தினி" என்ற புத்தகத்தில் இருந்து தியாகோபனிஷத் என்ற பகுதி।எழுதியவர் டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள்.
நீங்கள் கேட்கும் பாடலுக்கு தொடுப்பு கொடுத்தது ஸ்ரீ ஜீவா அவர்கள். இந்த பதிவு அவருக்கு சமர்ப்பணம்!
5 comments:
ஆகா, அருமையான பொருள் கொண்ட கீர்த்தனை.
பக்தியில் உய்ய, தியாகராஜரின் கீர்த்தனைகள் தவிர வேறொன்றும் படிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன் - அந்த அளவுக்கு மிகத்துல்லியமான பாதையை காட்டுகிறார்!
//தொகுப்பு "வைதிக தர்ம வர்தினி" என்ற புத்தகத்தில் இருந்து தியாகோபனிஷத் என்ற பகுதி।எழுதியவர் டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள்.//
ஆகா, டி.எஸ்.பாலா அவர்களுடையதா, அவரது சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன், கேட்டுக் கொண்டிருக்கிறேன்!
பி.கு: சமர்பணம் என்கிற பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாமே. வாய்ப்பளித்தமைக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.
பக்திக்கொரு தியாக ப்ரம்மம் என்றே சொல்லக் கேட்டிருக்கேன். பாட்டுக்கும் பொருளுக்கும் நன்றிகள்.
ஜீவாவுக்கும் என் நன்றிகள்...
ஜீவா, நன்றி.
இன்றைக்கு கிடைக்குமோ என்று நினைத்துக்கொண்டே உங்களை தொடர்பு கொண்டேன். சட்டென்றே சுட்டிகள் கிடைத்தன.
இந்த தொகுப்பை ஸ்கேன் செய்து pdf ஆக்க உத்தேசித்து இருக்கிறேன். அனுப்புகிறேன்.
மௌலி அந்த புத்தகத்தை படிக்க படிக்க ... வார்த்தைகளால் விவரிக்க முடியாது!முன்னமேயே கிடைக்காமல் போனதே என்று தோன்றுகிறது.
வருகைப்பதிவு.
Post a Comment