Tuesday, May 27, 2008
தாஸ்யம்
விறண்மிண்டர் ன்னு ஒரு தொண்டர். மலை நாட்டு வேளாள குடியில் பிறந்தவர். சிறு வயதிலேந்து சிவ பக்தர். எப்பவும் இறைவன் திரு நாமங்களை சொல்லிகிட்டு இருப்பார். இவருக்கு சிவனடியர்கள்கிட்டே ரொம்ப பக்தி. அவங்களை உபசரித்து தொழுவார். சிவனாருக்கு தன்னை வழி படறவங்களை விட தம் அடியார்களை வழி படறவங்க மேல அதிக பிரியம் வச்சு இருக்கார்ன்னு விறண்மிண்டருக்கு தெரியும். அதனால அடியார்களை பாத்தா அவர்களுக்கு வணக்கம் செலுத்திட்டுதான் அப்புறமா ஆண்டவனை வழி பட போவார்.
இவர் ஸ்தல யாத்திரையா போகிற போதுதான் ஆரூர் போனார். அடியார்களை வணங்கிட்டு உள்ளே போய் இறைவனை வணங்கினார். அப்புறமா வெளியே மத்தவங்ககிட்ட பேசிகிட்டு இருக்கிறப்ப சுந்தரர் அங்கே வந்தார். அவரை பாத்த எல்லா சிவனடியார்களும் அவரை வணங்க எழுந்தாங்க . விறண்மிண்டருக்கு ஆச்சரியம். யாரப்பா இது. எல்லாரும் எழுந்து வணங்கறாங்க ன்னு கேட்டார். சுந்தரரை பத்தி அவங்களும் சொன்னாங்க.
மக்கள் சுந்தரரை வணங்க, சிவ சிந்தனையிலேயே இருந்த சுந்தரர் யாரையும் கவனிக்கவே இல்லை. நேரா கோவிலுக்கு உள்ளே போயிட்டார்.
இத பாத்துகிட்டு இருந்தார் விறண்மிண்டர். சிவனடியார்களை கண்டு மரியாதை செய்யாம உள்ள போறதான்னு வருத்தமாயிடிச்சு. சுந்தரர் காதில விழற மாதிரி உரக்க "சிவனடியார்களை பாக்காம போகிற சுந்தரர் நமக்கு தேவையில்லை" ன்னு சொன்னார். எல்லாரும் அதிர்ச்சியாயிடாங்க. பின்னாலேயே "அப்படிப்பட்ட இவருக்கு சிவபிரான் அருள் பாலிப்பார்னா, அந்த சிவனும் நமக்கு தேவையில்லை" அப்படின்னார்.
உள்ளே போயிட்ட சுந்தரர் பதை பதைத்து போயிட்டார். சிவ பெருமான் கிட்ட உருகி வேண்டிக்கிட்டார். ”என்னை தடுத்து ஆட் கொண்ட பெருமானே உனக்கு தெரியாதா? புறத்தில் வணக்கம் செய்யலை. மனசால வணக்கம் பண்ணேன். அது மத்தவங்களுக்கு தெரியாதே. இப்படி ஒரு பழி சொல் எனக்கு வந்து விட்டதே" ன்னு வருந்தினார். சிவன் " கவலைபடாதேப்பா. என்னை இவ்வளோ பாட்டு பாடினியே, அடியார்களை பாடி அவங்க பெருமை எல்லாம் உலகம் அறிய பண்ணு" அப்படின்னார். அவங்க திருத்தொண்டைப்பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாதேன்னார் சுந்தரர். "நான் அடி எடுத்து கொடுக்கிறேன். பாடு. மீதி எல்லாம் தானே வரும்" ன்னார் சிவ பெருமான்.
உள்ளே போயிட்ட சுந்தரர் இறைவனை வணங்கிட்டு நேரா கிட்ட வந்து மன்னிப்பு கேட்டுக்கிட்டார். சிவனடியார் யாரையும் அவமதிக்கிற எண்ணம் தனக்கு இல்லைனார். அதை நிரூபிக்க "தில்லை வாழ் அந்தணர் அடியார்க்கும் அடியேன்" னு ஆரம்பிச்சு பாட்டு பாட ஆரம்பிச்சார். எல்லா அடியார்களின் பெருமைகளையும் கூறி "அவர்களுக்கு அடியேன்" அப்படின்னு பாடி முடிச்சார். (திருத்தொண்டர் தொகை என்கிற இததான் அடிப்படையா வச்சு பின்னால சேக்கிழார் பெரிய புராணம் பாடினார். )
கூடி இருந்தவங்க எல்லாருமே பாடலை கேட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. இப்பதான் சுந்தரர் அடியார்கள் மேலே எத்தனை மதிப்பு வெச்சு இருக்கார்ன்னு தெரியுது ன்னு கொண்டாடினாங்க. அப்படி ஒரு அருமையான பாடல் தோன்ற காரணமான விறண்மிண்டரையும் எல்லாரும் பாராட்டினாங்க. விறண்மிண்டரும் ஆனந்தப்பட்டு போனார். இப்படி அடியார்களுக்கு தாஸ பாவத்தை காட்டின விறண்மிண்டரை சிவபெருமான் சிவ கணங்களுக்கு தலைவரா ஆக்கிட்டார்.
Labels:
முதல் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
இந்த பதிவில் வரும் நிகழ்ச்சி பெரிய புராணத்தில் இந்த பாடல்களில் உள்ளது:
498 சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறை சூடிப்
பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால்
கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார் 2.6.8
499 ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின்
சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள்
ஓலம் இடவும் உணர்வு அரியார் உடனாம் உளது என்றால்
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தாரார் 2.6.9
சேக்கிழார்க்கு முதல் வரி எடுத்து கொடுத்ததுனு தான் இத்தனை நாளா நினைத்து கொண்டு இருந்தேன். முன்னேச்சரிக்கையா பாட்டு எல்லாம் வேற போட்டு இருக்கீங்க. புதிய செய்திக்கு நன்னி.
தாஸ்யம் என்பதற்க்கு சரியான தமிழ் சொல் என்ன? (ஏன்னா இன்னும் கதையோடு இந்த வார்த்தையை எனக்கு சரியா பொருந்தி பாக்க தெரியலை) :p
ஈகோவை ஒரு போடு போட்டு அமுக்கி, நான் ஒண்ணுமே இல்லை, இறைவா உனக்கும் மத்தவங்களுக்கும் தொண்டு செய்யறதே என் பாக்கியம்.
இதுவே தாஸ்ய பாவம்.
அடியார்க்கும் அடியேன் என்கிற போது இது வெளிப்படுகிறது.
விரி பொழில் சூழ் குன்றையார் விறன் மிண்டர்க்கு அடியேன்
அருமை.
தீர்ந்தது சந்தேகம்.
ஆயிரம் பொற்காசுகள் எங்கே?னு கேக்காதீங்க. :)
தாஸானு தாஸன்...அடியே, அடிப்பொடியேன் அப்படிங்கறதெல்லாம் இது தான். :-)
வீர வைஷ்ணவத்தில் இது மிக அருமையா பழக்கத்தில் இருக்கு. ஆனா என்ன யார் ஆக்ட் குடுங்கறாங்க, யார் உண்மையான தாஸ்ய பாவத்துடன் இருக்காங்கன்னு தெரியாது :-)
வாங்க ஜெய், நன்றி! வலைப்பூ ஆரம்பிச்சாச்சா?
~~~~~~~~~~
மௌலி சொல்கிற மாதிரி எனக்கு வழக்கமா அதெல்லாம் செயற்கையாதான் தோணூம்.
ம்ம்ம்ம்ம்ம்ம்... துரியோதனப்பார்வை!
~~~~~
போச்சே, போச்சே, ஆயிரம் பொற்காசு! எனக்கில்லே எனக்கில்லே!
//வாங்க ஜெய், நன்றி! வலைப்பூ ஆரம்பிச்சாச்சா?//
இன்னும் இல்லை. 2 மாதத்தில்
திவா சார்,
உங்கள் blog அருமையாக உள்ளது. சில பிழைகளைத் தவிர்க்கலாம்.
'மதியம்' என்பது நிலவைக் குறிக்கும் சொல்.
'மத்யானம்' என்பதற்கு 'நண்பகல்' என்று எழுத வேண்டும்.
'மாசில் வீணையும், மாலை மதியமும்....'
'சமயக் குரவர்' என்பது தவறு.
அது 'ஸமய குரவ:' எனும் வட சொல்லின் தமிழ் வடிவம். ஒற்று மிகாது. இரண்டுமே வட சொற்கள் என்பதால் தமிழ் இலக்கண
மரபிற்கு அங்கு வேலை இல்லை.
'திருத் தொண்டத் தொகை' என்பதே சரி.
'தொண்டர் தொகை' அன்று.
தேவராஜன்
வாங்க தேவராஜன் நல்வரவு.
எனக்கு நல்ல தமிழ் அதிகம் தெரியாது. பேச்சு தமிழில் எழுதனும்ன்னு முடிவு பண்ணி அப்படியே எழுதறேன். கூடியவரை தவறுகளை தவிர்க்கிறேன். அதனாலதான் இது பாப்புலர் ஆகலை போல இருக்கு! :-))
மதியம் என்பது பேச்சுத்தமிழில் அப்படித்தான் பழக்கம்.
சமயக் குரவர்' சொற்களை பிரித்துவிட்டதாலே க் தேவை இல்லைதான்.
அது 'ஸமய குரவ:' எனும் வட சொல்லின் தமிழ் வடிவம். ஒற்று மிகாது. இரண்டுமே வட சொற்கள் என்பதால் தமிழ் இலக்கண
மரபிற்கு அங்கு வேலை இல்லை.
சரி ஆனால் எழுதுவது தமிழில் இல்லையா? "ஸமய குரவ:" என்று எழுதி இருந்தால் கேள்வியே இல்லை. அதை தமிழ் படுத்திய பின் தமிழ் இலக்கணம்தானே வரும்?
திருத் தொண்டத் தொகை' என்பதே சரி.
ஒத்துக்கொள்கிறேன். நன்றி!
பாராட்டுதலுக்கு நன்றி!
Post a Comment