Pages

Wednesday, May 7, 2008

சத்வம், தர்மம், அனவஸ்தை,அனுதர்ஷம்.



கடைசியாக சத்வம் என்கிற உயர்ந்த சீலம்.

எப்பவும் சோம்பலோட தூங்கி வழிஞ்சுகிட்டு சும்மா இருக்கிறது தமஸ்.
இது எப்படி சரியாகும்? ஆள எழுப்பி ஏதாவது வேலைல இறக்கினா சரியாகும்.
ஏதாவது வேலை செய்துக்கிட்டே, கோபப்பட்டுக்கிட்டே இருக்கிறவரை என்ன செய்யறது? அட கொஞ்சம் அமைதியா இருப்பான்னு சொல்லி சரி பண்ணலாம்.
அதாவது-
செயல் இல்லாம இருக்கிற தமஸ் ஐ ராஜஸ குணத்தால ஜெயிக்கணும். அதை சத்வ குணத்தால ஜெயிக்கணும். அப்படி செய்தா மனசு எப்பவும் சாந்தமா அலை கழியாம இருக்கும். இதுவே இறை உணர்வை இதயத்துல நிரப்பி பக்தியோட உயர்ந்த நிலைக்கு சாதகனை கொண்டு போகும்.

தர்மம் என்பது நம் பெரியவங்களும் சாஸ்திரங்களும் எதை சரின்னு ஒப்பு கொண்டதோ அதுதான். அதுக்கு மாறா செய்கிற எதையும் பெரியவங்க ஒத்துக்க மாடடாங்க. "தர்மோ ரக்ஷதி ரக்ஷித:" என்ற படி யார் தர்மத்தை காக்கிறாங்களோ அவங்களை தர்மம் காக்கும். இங்க காக்கிறதுன்னா என்ன? நாம தர்மத்தை காப்பாத்தறதாவது?
தர்மத்தை கடைபிடிக்கனும். அதுதான் காக்கிறது.

அடுத்து வர அனவஸ்தை பக்குவமான மனநிலையை சாதகனுக்கு கொடுக்கும். இத வச்சே சாதகனோட பக்குவத்தை எடை போடலாம். எப்ப எல்லா இடத்திலேயும் பரம் பொருளை சாதகன் பாக்கிறானோ அப்ப எப்பவுமே சந்தோஷமா இருப்பான். மனசில குறை எல்லாம் போய் நிறைஞ்சு இருக்கும்.

இது எப்படி கிடைக்கும்னா....
இது நமக்கு இயல்பானதுதான். ஆனால் இந்த நிலைலேந்து புலன்களால அனுபவிக்கிற ஆசையும் வெளிப்புற சூழலும் நம்மை வேற எங்கயோ இழுத்துப்போக நாம அனுமதிக்கிறோம். பக்தியால வெளிப்பக்கம் போகிற புலன்களை உள்ளே திருப்பி வெளிப்புற சூழலையும் ஜெயிச்சா இயல்பான ஆனந்தத்தை அனுபவிக்கலாம்.

அனுத்தர்ஷ என்கிற மிகையான களிப்பு அடையாமை அடுத்தது.

இது கொஞ்சம் ஆச்சரியமா இருக்கலாம். சாதாரணமா எல்லாரும் சந்தோஷமா இருக்க விரும்பறாங்க? அது இருக்கலாம், ஆனா அளவுக்கு மேலே போக வேண்டாம்னு சொல்கிறாங்க. இன்பத்தையும் துன்பத்தையும் சமமா பாக்க கத்துக்கன்னு சொல்கிறார் கிருஷ்ணன்.
து:கேஷ்வனுத் விக்ன மனோ:ஸுகேஷு விகதஸ்ப்ருஹ:
வீத ராக பய க்ரோத:ஸ்திததீர் முனிருச்யதே -கீதை 2-56

துன்பத்தில் துயரடையாத, இன்பத்தில் வேட்கை இல்லாத, பற்று- அச்சம்- சினம் இவை இல்லாத, உறுதியான உள்ளம் உடையவனே முனி எனப்படுவான்.
சுருக்கமா சொன்னா இச்சைகளை அடக்கி ஆள்கிறவனே அதிக சந்தோஷத்துல அகப்பட மாட்டான். அவன் ஆத்ம ஞானத்தையும் பெறுவான்.


5 comments:

Geetha Sambasivam said...

//தர்மத்தை கடைபிடிக்கனும். அதுதான் காக்கிறது.//

கடைப்பிடிக்கணும்., ம்ம்ம்ம்ம்ம்., தர்மம் காப்பாற்றட்டும்! வேறே என்ன சொல்றது?

திவாண்ணா said...

வி.எ சுட்டி காடினதுக்கு நன்ஸ்!

//முனி எனப்படுவான்.//

மனன சீலத்தை உடையவர் முனி. அதாவது தைலதாரை போல யாருடைய மனசு இடையறாது ஆத்ம சொரூபத்தில் திளைத்து இருக்கோ அவனே முனி ஆகிறான்.

ambi said...

ம்ம், ரொம்ப எளிமையா ஆனா வலிமையா இருக்கு இந்த பகுதி.

மெளலி (மதுரையம்பதி) said...

தலை மூர்ச்சனையா இருக்கு திவாண்ணா!!!

திவாண்ணா said...

//ரொம்ப எளிமையா ஆனா வலிமையா இருக்கு//

//தலை மூர்ச்சனையா இருக்கு திவாண்ணா!!!//

:-))))))