Pages

Tuesday, May 20, 2008

அர்ச்சனம் வந்தனம்




பகவானைப்பத்தி ய பெருமைகள கேட்டு அவனையே நினைச்சு அவன் பெருமைகளை பாடிய பக்தன் அடுத்த என்ன செய்ய நினைக்கனும்? பகவானுக்கு அர்ச்சனை செய்ய நினைக்கிறானாம். பகவானோட பாதங்கள சுத்த நீராலே கழுவி மலர்கள் இட்டு பூசிக்கிறான். எல்லாவற்றிலும் புனிதமானது பகவான் திருவடிகள்ன்னு நினைக்கிற பக்தன் பூஜை பண்ண பண்ண தான் தன் உடல் என்கிற நினைப்பு ஒழிகிறதாம். தன்னை முழுக்க முழுக்க அவன்கிட்டே ஒப்படைக்க தயாராகிறான். இததான் அர்ச்சனம் என்கிறாங்க.

வந்தனம்
அர்ச்சனம் என்கிற செய்கை வரை வந்தவர்களுக்கு அப்பறமா ஒண்ணுமே செய்ய வேண்டாமே சிவனேன்னு அவன் கால்கள்ளேயே விழுந்து கிடக்கலாமேன்னு தோணும்.
இப்படி செய்யறதே வந்தனம். அப்படி செய்கிறப்ப தான் என்கிற நினைப்பு அழிக்கப்படுது. தான் பெரிய ஆள் என்ற நினைப்பு போய் பணிவு வரும்.

கம்ஸன் கிருஷ்ணன் இருக்கிற இடத்தை தெரிஞ்சதும் அவனையும் பல ராமனையும் மதுராவுக்கு அழைச்சு வரச்சொல்லி அக்ரூரர் என்கிறவரை அனுப்பினான். அக்ரூரர் வசுதேவரோட தாயாதி. அவரும் போய் அழைச்சதும் கண்ணன் உடனே கிளம்பிட்டான். வந்ததோட முக்கிய காரியம் முடியணுமே. இன்னும் மத்த பல காரியங்கள் இருக்கே.
வரவழில ஒரு சாயங்காலம் யமுனை ஆறில மாலை அனுஷ்டானம் செய்ய இறங்கினார் அக்ரூரர். அப்படியே திகைச்சு போயிட்டார். கரை பக்கம் திரும்பி பாக்கிறார். கிருஷ்ணனும் பலராமனும் ஜபம் செய்யராங்க. தண்ணிக்குள்ளே பாத்தா அங்க சிரிச்சுகிட்டே இருக்காங்க. அக்ருரருக்கு கொஞ்ச நேரம் ஒண்ணும் புரியலை. இங்கேயும் அங்கேயும் திருப்பி திருப்பி பாத்துட்டு இரண்டு பேரும் சாதாரண ஆசாமிங்க இல்ல பகவான் அவதாரம்தான் அப்படின்னு புரிஞ்சுகிட்டார். புரிய ஆரம்பிச்சதும் எல்லா இடத்திலேயும் கண்ணனே தென்பட்டானாம். அக்ரூரரும் அவனை பாக்கிற இடமெல்லாம் விழுந்து விழுந்து வந்தனம் பண்ணார்.
இப்படி செய்தே அவரோட மனசு பகவான்ல லயிச்சு ஸ்திரப்பட்டதாம்.

8 comments:

Geetha Sambasivam said...

"ஓம் நமோ, நாராயணாய, ஓம் நமோ, நாராயணாய, உலகெல்லாம் முழங்க வேண்டும், ஓம் நமோ நாராயணாய,
நீல மேக வடிவழகை நித்தியமும் காண்போம், நேரமெல்லாம் பாடி ஆடி நிர்ப்பயமாய் வாழ்வோம்!"

ambi said...

ஆஜர்!

திவாண்ணா said...

@ கீ அக்கா!
என்ன அக்கா! ராமாயண பாதிப்பா? கேஆர் எஸ் பாதிப்பா?
:-))

@அம்பி அட்டென்டஸ் மார்க்ட்.

jeevagv said...

பக்கத்திலேயே பகவான் இருக்கும்போது, அவரை விட்டுவிட்டு, ஆற்றில் அனுஷ்டானும் என்ன வேண்டிக் கிடக்கு? அதனால்தான் கிருஷ்ணன், அப்பா, நீ ஆற்றுக்குப்போனா அங்கேயும் நான் தான் இருக்கிறேன், எனக் காட்டினானோ!

மெளலி (மதுரையம்பதி) said...

அக்ரூரர் கதை புதுசு...என்ன பண்றது? இன்னிக்கு நேற்று அல்ல, மகாபாரதகாலத்திலும் இறைவனை உணர்வது கஷ்டமாகவே இருந்திருக்கு அப்படின்னு தெரியுது.. :)

மெளலி (மதுரையம்பதி) said...

என்னது கீ அக்காவா? இல்லை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அக்காவா? :)))

திவாண்ணா said...

@ ஜீவா, அதானே! அடைய வேன்டியவன் பக்கத்தில் இருக்க என்ன அனுஷ்டானம்?
ஆனாலும் ராமர் காட்டில் திவசம் செய்ய பூமியில் இருந்து தசரதர் கை நேரடியாக பிண்டம் வாங்க வந்ததாம். ரொம்ப சந்தோஷம், ஆனா பூமியில்தான் வைக்க வேண்டும்னு சாஸ்திரம் கைல கொடுக்க மாட்டேன். பூமியிலே வைக்கிறேன். எடுத்துக்குங்கன்னு ராமர் சொன்னாராம்.
கர்ம யோகத்துல கதை வரும்!

திவாண்ணா said...

மௌலி கீ 3 ஸ்ட்ரோக்ஸ் . க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நிறைய. அவ்ளோதான்.
:-))