Pages

Friday, May 9, 2008

தானம்



கடைசியா தானம். இதுல கொடுக்கிறவர் எவ்வளவு கொடுக்கிறார் என்கிறது அவ்வளவு முக்கியமில்ல. என்ன உள்ளத்தோட கொடுக்கிறார்ன்னு பாக்கணும். கோவில் கட்டறாங்க, திருவிழா நடத்தறாங்க. அதுக்கு ஒரு கோடீஸ்வரன் ஆயிரம் ரூபா கொடுக்கிறது பெரிசு இல்ல. ஒரு அன்னாடங்காச்சி நிறைஞ்ச உள்ளத்தோட ஒரு ரூபா கொடுக்கிறது ரொம்ப பெரிசு.

பக்தர்கள் எல்லா ஜீவ ராசிகள் கிட்டேயும் இறைவனை பாத்தா தன் கிட்ட இருக்கிறா எல்லாத்தையும் அவற்றோட பகிர்ந்துக்கதானே நினைப்பான்?

நாம தேவர் என்று ஒரு பக்தர் மகாராஷ்ரத்துலே. விட்டலனுடைய பரம பக்தர். நிறைய அபங்கங்கள் பாடி இருக்கார்.
(அபங்கம் என்கிறது நம்ம தேவாரம் மாதிரிம். பக்தி பாடல்கள்.)
வாழ்கை முழுதும் வறுமைதான்.

ஒரு நாள் யாரோ ஒரு ரொட்டியையும் கொஞ்சம் வெண்ணையும் கொடுத்துட்டு போனாங்க. அதை சாப்பிட பக்கத்துல வெச்சுட்டு "விட்டலா! இன்னிக்கி சாப்பாடு அனுப்பிட்டாயா" ன்னு விட்டலனை நினைச்சு பஜன் செய்ய ஆரம்பிச்சார். அப்ப ஒரு நாய் வந்து ரொட்டியை கவ்விகிட்டு ஓட ஆரம்பிச்சது. பக்கத்துல இருந்த எல்லாரும் சத்தம் போட முழுச்சுகிட்டார் நாமதேவர். எல்லாரும் "பாரு பாரு ரொட்டியை நாய் கவ்விகிட்டு ஓடறது" ன்னாங்க. நாம தேவரும் அதன் பின்னாலேயே ஓட ஆரம்பிச்சார். நாய் இன்னும் வேகமா ஓடறது. நாமதேவர் "விட்டலா, விட்டலா, ரொட்டியை மட்டும் எடுத்துக்கிட்டு வெண்ணையை விட்டுட்டயே. ரொட்டியை அப்படியே சாப்பிட முடியாது. தொண்டை அடைக்கும்"ன்னு கத்திக்கிட்டே ஓடினார்.

சுத்தி இருந்தவங்க எல்லாரும் இது சரியான கிறுக்குன்னு நினைச்சாங்க.

இவருக்கு நிலையா வருமானம் ஏதும் கிடையாது. எப்படியோ நாலு காசு சேர்ந்தாலும் பாகவதர்களை கூப்பிட்டு பஜனை எல்லாம் நடத்தி சாப்பாடு போட்டு தீத்துடுவார்.
இவரோட போக்கு வெறுத்துப்போய் இவர் மனைவியே விட்டலன் கிட்டே போய் புகார் பண்ணி இருக்கா. "நீ இப்படி எம் புருஷனை போட்டு இழுக்கிறயே! பாரு, இந்த மனுஷன் ஒரு சல்லி காசு கூட வீட்டுக்கு கொண்டுவர மாட்டேங்கிறார். நான் எப்படி குடும்பம் நடத்தறது?” என்று கேட்டா. விட்டலனோ "நான் ஒன் புருஷனை இழுக்கலை. அவன்தான் என்னை இழுக்கறான். என்ன செய்யட்டும்?” ன்னார். இவளோ "அதெல்லாம் எனக்கு தெரியாது. காசு வரலைனா நாங்க பட்டினி கிடக்க வேண்டியதுதான்" அப்படினா. விட்டலன் "சரி, சரி, எங்கிட்டே ஏது காசு? நீ போய் ருக்குமாயியை பாரு.” அப்படின்னான். இவளும் ருக்குமாயியை போய் பாத்து புகார் பண்ணா. "சரி, நான் கவனிக்கிறேன்" அப்படின்னு ருக்குமாயி சொன்னா. நாமதேவர் மனைவியும் திருப்தியா வீட்டுக்கு போனா.

அன்னிக்கு இரவு ஒரு வண்டியை ஓட்டிக்கிட்டு ஒரு ஆசாமியும் ஒரு பெண்ணும் நாமதேவர் வீட்டுக்கு வந்தாங்க. நாமதேவரோட குரு கொண்டு கொடுக்கச்சொன்னதா நிறைய மூட்டைகளை இறக்கி விட்டுவிட்டு போயிட்டாங்க. இறக்கின மூட்டையெல்லாம் பிரிச்சு பாத்தா நிறைய காசும் பொருளும் இருந்தது. இது ஏன் என் குரு இங்க அனுப்பினார்ன்னு கேட்டுக்கிட்டே கொண்டு வந்தவங்களை தேடினா அவங்களை காணோம். விட்டலனும் ருக்குமாயியும் எப்பவோ திரும்பி போயிட்டாங்க!


12 comments:

Geetha Sambasivam said...

பண்டரிநாதன் படமும், ரெகுமாயி படமும் போட்டிருக்கலாமோ??????? ஓகே, அபங்கம்= பங்கம் இல்லாததுனும் ஒரு அர்த்தம் உண்டு. உங்களுக்குத் தெரியாமல் இருக்க முடியாது. முழுமையான பாடல்கள், விட்டலன் மேல் பாடப் பட்டது. இப்போ இந்த "அபங்க்" பாடல்களைத் திருநெல்வேலியில் ஒருத்தர் பேரை "துகாராம்"என்றே வச்சுட்டு இருக்கார். அவர் பாடிப் பிரபலப் படுத்திட்டு வரார். அருணா சாயிராமும் அபங்க் பாடுவதில் மிகவும் திறமை உள்ளவர். ஓ.எஸ். அருணும் பாடுவார்.

jeevagv said...

அந்த நாமதேவர் கதையிலே - தானத்துக்கு பின்னாலே அன்பு (உயிர்களிடத்தில் அன்பு வேணும் பாப்பா!) அடிப்படையா இருந்ததால் அல்லவா - அதன் வெளிப்பாடா - தானமா, அஹிம்சையா - இப்படி பல்வேறு வெளிப்பாடு வருகிறது...!

அந்தக் கதையில் வரும் அந்த ரொட்டி - சுக்கா ரொட்டியாம் - உண்மையிலேயே வரட்டி போல இருக்குமாம் - வெண்ணையோ, சப்ஜியோ இல்லாமால் ஒரு வாய் கூட உள்ளே இறக்க இயலாது! :-)

ஜீவி said...

//இவரோட போக்கு வெறுத்துப்போய் இவர் மனைவியே விட்டலன் கிட்டே போய் புகார் பண்ணி இருக்கா. "நீ இப்படி எம் புருஷனை போட்டு இழுக்கிறயே! பாரு, இந்த மனுஷன் ஒரு சல்லி காசு கூட வீட்டுக்கு கொண்டுவர மாட்டேங்கிறார். நான் எப்படி குடும்பம் நடத்தறது?” என்று கேட்டா. விட்டலனோ "நான் ஒன் புருஷனை இழுக்கலை. அவன்தான் என்னை இழுக்கறான். என்ன செய்யட்டும்?” ன்னார். //

படித்துக் கொண்டே வரும் பொழுது,
படிப்பவனைத் திக்பிரமை அடையச் செய்யும் இடம் இது. இறைவன்
பக்தனின் அழைப்புக்கு எப்படி இறங்கி
குழைந்து போகிறான் என்பதைச் சொல்ல் வந்த இடம். அருமை!
சிறப்பாக மனத்தில் தைக்கிற மாதிரி எழுதியிருக்கிறீர்கள்.

தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

மெளலி (மதுரையம்பதி) said...

கதையினை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

தானம் - திரோதானம் இரண்டையும் விளக்கி சிறுகுறிப்பு வரைக.

திவாண்ணா said...

@ கீதாக்கா
நிறைய மேலதிக தகவல்கள். நன்ஸ்1
எழுதவே நேரம் காணோம். படம் வேற தேடி போடணுமா? இப்ப பொருத்தமான கதை எதுடன்னு யோசிக்கிறேன். அப்புறம் பொருத்தமன படம் எதுன்னு வேற யோசிக்கணும். ம்ஹும்! சாரி.

@ ஜீவா
உண்மைதான். அன்போட பல வெளிப்பாடுகள்ன்னு சொல்லறதா இல்லை இறைத்தன்மையோட பல வெளிப்பாடுகள்ன்னு சொல்லறதா? எனிவே ரெண்டும் ஒண்ணுதான்!
வட நாட்டில ரொட்டினாலே சுக்கா ரொட்டிதான் அனேகமா. இங்கதான் நெய்யோ எண்ணையோ ஏதோ ஒண்ணு போட்டு செய்யறாங்க. இதை வட இந்தியர்கள் ரொட்டியாவே ஒத்துக்க மாட்டாங்க! சரிதானே கீதா அக்கா?
@ ஜீவி
முதல் முறையா. நல்வரவு! ஆமாம், நாம் பகவானைப்பத்தி நினைக்கிறோமோ இல்லையோ பகவான் நம்மைப்பத்தி கவலைப்படறான். நாம் ஒரு அடி அவனை நோக்கி வச்சா அவன் பத்தடி வைக்க தயாரா இருக்கான். நாம்தானே இடக்கு பண்ணறோம். பாராட்டுக்கு நன்றி!
@ மௌலி.
ஐயா! குழப்பறதுன்னு முடிவா? தானத்தாலே தெளிவு பிறக்கும். திரோதானத்தாலே மறைவு பிறக்கும். வேற என்ன?

ambi said...

பல வருடங்களுக்கு முன் ஞான பூமியில் படித்தது. மிக்க நன்னி.

Unknown said...

கதை அருமை. பல வருடங்களுக்கு முன் ஞான பூமியில் படித்தது.ராம கிருஷ்ன விஜயத்திலும் படித்தது. நல்ல கதை நன்றி

திவாண்ணா said...

வாங்க ஜெய்சங்கர். சமீப ப்ளாகரா? ப்ரொபைல்ல ஒண்ணும் காணோம்!
ஆமாம் தெரிஞ்ச கதைதான். ஆனா பொருத்தமா இருந்தது. திருப்பி கேக்கறதுல பிரச்சினை இல்லையே? சின்ன பசங்களா இருந்தப்ப அப்பாகிட்டே ஒரே கதையை திருப்பி திருப்பி அதே மாதிரிதான் சொல்லச்சொல்லி கேப்போம்!

Geetha Sambasivam said...

ஐயா! குழப்பறதுன்னு முடிவா? தானத்தாலே தெளிவு பிறக்கும். திரோதானத்தாலே மறைவு பிறக்கும். வேற என்ன?

ம்ம்ம்ம்ம்???? இரண்டு நாளா யோசிச்சேன், நாராயணீயத்தை வேறே ஒரு தகவலுக்குப் பார்த்தப்போ, இது கண்ணிலே பட்டது.

"காலா கர்ம குணாஸ்ச ஜீவநிவஹா விஸ்வஞ்ச கார்யம் விபோ
சில்லீலா ரதிமேயுஷி த்வயி ததா நிர்வீந்தாமாயயு:

அந்தச் சமயம் நீர் சித்து? அல்லது சித்தானந்தம் (எது சரி?) விளையாட்டில் இருந்தீர்கள். காலம், கர்ம்மம், குணங்கள், உயிர்கள், கார்யப்ரபஞ்சம் அனைத்துமே மறைக்கப் பட்டு இருந்தன.

மேற்சொன்னது தான் திரோதானம் அல்லது திரோபாவம்????

Unknown said...

நான் blog க்கு புதுசு.(அதாவது படிக்க மட்டும்) இப்போ தான் profile create பண்ணினேன். ஆன்மீகம் எனக்கு பிடிக்கும்.

பதிவு பண்ணுவது எப்படி என்று இப்போழுது தான் கற்றுக்கொண்டிருக்கிறேன்

திவாண்ணா said...

@ கீதாக்க
உங்க கேள்விக்கு அப்புறமா பதில் சொல்கிறேன்
@ஜெய்
வெல்கம்!
உங்க படிப்பும் தொழிலும் தெரியலை. கணினிசார் தொழிலா இருந்தா அனேகமா எங்க உதவி தேவை படாது. ப்ளாக் சம்பந்தமா எதேனும் உதவி தேவையானா கேளுங்க. தெரிந்த வரை உதவுவோம்.

திவாண்ணா said...

@கீதாக்கா
1.சிதானந்தம் இல்லை.
விளையாட்டில் ஈடுபட்டு இருந்தீர்கள் என்று சொல்வதாகதான் தோன்றுகிறது.

2. இங்கே சிருஷ்டி இருப்பதாக தெரியவில்லை. பிரலய காலத்தை பற்றி சொல்வதாக தோன்றுகிறது.

3. திரோதானம் என்பது ஈசனின் 5 கிருத்தியங்களில் ஒன்று. மறைப்பு. சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோதானம், அனுகிரஹம்.
உண்மையான பிரம்ம சொரூபத்தை தெரியவிடாமல் மறைக்கிறான். பின்னால் அனுகிரஹம் செய்யும்போது அந்த மறைப்பை நீக்குகிறான்.

நீங்கள் கைவைல்லியத்தில் ஆவரண சக்தி என்று படித்த அதேதான் இது.