Thursday, December 18, 2008
விடல்
அடுத்து விடல்.
உபரதின்னும் சொல்லுவாங்க.
ஒரு வேலையும் இல்லாம மனசு ஓய்ஞ்சு போய் விட்ட நிலை. சமதம பயிற்சியால வெளியே இருக்கிற பிடிப்பு எல்லாத்திலிருந்தும் விடுபட்டு ஒரு செயலும் இல்லாம இருக்கிற நிலை. அப்படித்தான் விவேக சூடாமணி சொல்லுது. (1)
வெளியே உள்ளதில்பிடிப்பு விட்ட உத்தமமான நிலை. வெளியேன்னா? ஆத்மாவுக்கு வெளியே இருக்கிற எல்லாமேதான். மனது எழுப்புகிற எண்ணங்களும் இந்த ¨வெளி¨யில்தான் இருக்கு.
ஒரு பட்டி மன்றம் நடக்குது. ஒரு பக்க பேச்சாளார் ரொம்ப திறமையா வாதாடறார். ஆணித்தரமான வாதங்கள். எவ்வளோ திறமைனா எதிர் தரப்பு பேச்சாளர் சொல்லறத்துக்கு ஒண்ணுமே இல்லாம வாயடைச்சு போய் ஓஞ்சு நிக்கிறார்! இப்படி செயலத்து போகிறது உபரதி.
எல்லாருக்கும் பல விஷயங்கள் விட்டு விட முடிஞ்சாலும் மூணு கஷ்டமாம். மகன், பெண்ணாட்டி, பணம். பலருக்கும் மகன் மேல பாசம் விடறது கஷ்டம். (இந்த கால அரசியல் பத்தி சொல்லல சாமி!) எல்லாத்தையும் விட்ட சன்னியாச வாழ்கை வாழறதா மத்தவங்க நினைக்கிற பேர்கள் கூட. அப்படி இருந்தவர் ¨அண்ணா¨ ன்னு பலராலும் அழக்கப்பட்ட சுப்ரமண்ய சர்மா. ராம கிருஷ்ண மட தமிழ் வெளியீடுன்னா அனேகமா இவருதா இருக்கும். அப்படி ஒரு கால் கட்டத்திலே நிறைய கிரந்தங்கள் மொழி பெயர்ப்பு, தமிழாக்கம் இப்படி செய்தவர். ஏறக்குறைய சன்னியாச வாழ்க்கையே வாழ்ந்தவர். ஆனாலும் இவரோட மகன் இறந்து போனதா கேள்விப்பட்ட பின் மூணு நாளாச்சாம் சுய நிலைக்கு வர.
பெண்டாட்டி மேலே இருக்கிற ஆசையும் பாசமும் சொல்ல வேண்டியதில்லே. தொண்டு கிழமானாலும் இந்தா பாட்டி காபின்னு கொடுக்கச்சே அந்த கிழம் குடிச்சுடுத்தா ன்னு கேட்டுட்டு குடிக்கிற பாட்டியை பாத்து இருக்கோமே! கிழவனும் அதே மாதிரி ஏண்டி காப்பி குடிச்சயான்னு தட்டு தடுமாறிக் கொண்டு வந்து கேட்டு போகும்!
பணம்/ சொத்து மேலே ஆசையும் நல்லா தெரிஞ்சதுதானே! இதுக்காக மக்கள் அலைகிற அலைச்சல்! பல சமயம் ஆச்சரியமா இருக்கும். இத்தனைக்கும் இதை எல்லாம் மூட்டை கட்டிகிட்டு போக முடியாதுன்னு நல்லாவே தெரியும். பின்னே ஏம்பான்னா i can´t help it ன்னு பதில் வரும். நகரத்திலே வாழ ஒரு வீடுதான் இருக்கே இன்னும் ஒண்ணு எதுக்கு? இருந்தாலும் மாநகரத்திலே ஒண்ணு வாங்கிப்போடுவாங்க. புத்தியும் அப்பப்ப மாநகரம் போறப்ப பயன்படுமேன்னு ஒரு சமாதானம் கற்பிக்கும். இது போல பலது.
இந்த மகன், பெண்ணாட்டி, பணம் மூணையும் ஏஷணா த்ரயம் என்பர்.(2)
இந்த மூணு மேலே ஆசையும் விட்டவன்னா உபரதி வந்தாச்சுன்னு அர்த்தமாம்! விடல் ன்னா இந்த மூணையும் விடல்.
அட, முன்னேயே வைராக்கியம் பத்தி பாத்தோமே, அதுல இதை எல்லாம் விடலையா? அப்படின்னா....
வைராக்கியத்துல ஒரு வெறுப்பு இருக்கும். ஆசையை ஒழிக்கிறதுன்னே முனைப்பு இருக்கும். சம தமங்கள்லே மனசையும் புலன்களையும் அடக்குகிறதா இருக்கும். இப்படி எல்லாம் செஞ்சு இப்ப வெறுப்பும் இல்லை ஆசையும் இல்லை. ஓய்வு! சம தமத்தால மனசு ஓய்ஞ்சு போச்சு.
ஒரேயடியா இன்னும் ஒழியலை. அது ரொம்ப கடேசிலதான் நடக்கும். ஆத்ம அனுபவம், ஆனந்தம் எல்லாம் இன்னும் வரலை. இப்ப சும்மா வெத்தா பாழா சூன்யமா இருக்கு. இருந்தாலும் சஞ்சலங்கள் இல்லை. அதனால் ஒரு நிம்மதி நிலை.
சரி மனசு இப்படி உபரதில ஓய்ஞ்சு போச்சே, அப்படியே போயிடுமான்னா..
இல்லை.
இப்படி ஓய்ஞ்சு போச்சுன்னா மேலே எப்படி ப்ரஹ்ம சத்தியத்தை தெரிஞ்சுக்க காரியம் நடக்கும்? அதனால் பகவானோட ஒரு அனுக்கிரஹம் இங்கே கிடைக்கும். அதுக்குன்னு உடனடியா பிரஹ்ம சாக்ஷாத்காரமும் கிடைச்சுடாது. வெத்தா இருக்கிற நிலையாவும் இல்லாம இரண்டுக்கும் நடுவே அடுத்த/ மற்ற நிலையான ஜீவனோட இருக்கிற சமாதானம் என்கிற நிலைக்கு கொண்டுபோவான்.
சில சமயம் வாசனைகள் பலமா இருந்தா திருப்பி நழுவுகிறதும் இருக்கும்.
ஆசைகள் விட்டு போனதால இதையே சன்னியாசம்ன்னு சங்கரர் பிருஹதாரண்ய பாஷ்யத்திலே சொல்லிவிடறார். அது எப்படி சொல்லலாம்? இன்னும் திதிக்ஷா, ஷ்ரத்தா, சமாதானம், முமுக்ஷுத்துவம்ன்னு எவ்வளோ பாக்கி இருக்குன்னா....
முன்னேயே சொன்ன மாதிரி இவை எல்லாம் வரிசையான படிகள் இல்லை. ஏறத்தாழ ஒரே நேரத்திலே பயிற்சி செய்ய வேண்டிய சமாசாரங்கள். சில சமயம் சிலது அதிகம் சிலது குறைவுன்னு போகும்.
உபரதி பூரணமா வந்தாச்சுன்னா சன்னியாசம் வந்தாச்சு.
1.பாஹ்யாவலம்பனம் வ்ருத்தே: ஏஷோ(உ)பரதிருத்தமா
பாஹ்ய = வெளி. அவலம்பனம்= பிடிப்பு. உபரதிர் உத்தமா= உத்தமமான உபரதி நிலை
2. ஏஷணா ரஹிதாத்ருதா = ஆசைகள் அற்றவர்களால் பூஜிக்கப்படுபவள்.
Labels:
நான்காம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
அப்படி 'சும்மா' இருக்கற நாள் எப்போ வருமோ?
நோ உபரதி.
மகன், பொண்ணு, பூனை, யானை இப்படி எதாவது இருந்துண்டே இருக்கும்.
பேசாம உபரதியை விட்டுடலாம்:-)
//மகன், பொண்ணு, பூனை, யானை இப்படி எதாவது இருந்துண்டே இருக்கும்.//
ரிபீஈஈஈஈட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏ
//அப்படி 'சும்மா' இருக்கற நாள் எப்போ வருமோ?//
இப்படி ஏங்க ஏங்க, சாதனை வலுப்பட்டு இந்த ஜன்மத்திலேயே!
துளசி அக்கா அன்ட் கீதா அக்கா,
பரவாயில்லை. ஆத்ம சாதனைகள்ள ஒண்ணு வந்து வலுப்பட்டாலும் மத்தது தானா வரும்! உங்க பூனையையும் யானையையும் நெருர் பைரவர் மாதிரி தியானம் பண்ண சொல்லுங்க!
ஏஷணா ரஹிதாத்ருதா - த்ரிசதியில் வரும் ஒரு நாமா ஆச்சே?, பிரஹதாரண்யத்தில் இப்படியே வருதா?
த்ரிசதிதான் மௌலி. ப்ருஹதாரண்யம் இல்லை.
Post a Comment