Pages

Saturday, March 27, 2010

16. த்ரிகரண பாபமகல - த்ரிமூர்த்தி ஸ்துதி:




16. த்ரிகரண பாபமகல - த்ரிமூர்த்தி ஸ்துதி:

ஸ்ருஜதி விதி4ஸமாக்3ய: ராஜஸேந ஆத்மநா அஸௌ வஹதி ஹரி ஸமாக்2ய: ஸத்வ நிஷ்ட2: ப்ரபஞ்சம்|

ஹரதி ஹர ஸமாக்2ய: தாமஸீம் ஏத்ய வ்ருத்திம் மது4மத3ந மஹிம்னாம் அஸ்தி வேத்தா நகோபி || 
- ஸ்காந்தம்

ரஜோ குணத்தால் ப்ரும்மாவாகி உலகைப்படைக்கிறார். ஸத்வ குணத்தால் விஷ்ணுவாகி உலகை ரக்ஷிக்கிறார். தமோ குணத்தால் ருத்ரனாகி உலகை ஒடுக்குகிறார். மதுஸூதனுடைய மஹிமையை யாரே அறிவார்?

இதை 3 முறை ஜபிக்க மநம், வாய், உடல் இவைகளால் செய்யப்பட்ட பாபம் அகலும்

விசார சங்கிரகம் -25




34.ஞானாஷ்டாங்கங்க ளெவை?
இயம் நியமமாதிகளாகிய முற்கூறிய அவ்வெட்டுமாம். இவற்றில்
1.இயமம்: தேகாதி ப்ரபஞ்ச விஷயங்களிலுள்ள தோஷங்களை தெரிந்து இந்திரிய சமூகங்களை அடக்குதல்.
2. நியமம்: சஜாதீய விருத்தியின் ப்ரவாகமும் விஜாதீய விருத்தியின் திரஸ்காரமுமாம். அதாவது பரமாத்மாவின் கண் இடையறா துண்டாகும் அன்பு.
3.ஆசனம்: எதனிடத்து இடைவிடாத ப்ரஹ்ம சிந்தனம் சுகமாகவுண்டாகுமோ அஃதாசனம்.
4,ப்ராணாயாமம்: தேகாதி ப்ரபஞ்ச விஷயங்களின் நாமரூப மென்ற அசத்தான இரண்டம்சங் களையும் நீக்குதல் இரீசகமும் அவைகளில் அனுசூதமா யிருக்கும் ஸத் சித், ஆனந்தமென்ற சத்தான மூன்றம்சங்களையும் கிரகித்தல் பூரகமும், அங்ஙனம் கிரகித்த அம்சங்களை உள்ளிருத்தல் கும்பகமுமாம்.
5.பிரத்யாகாரம்: முன் நீக்கிய நாமரூபங்கள் மனதிற்கலவாது காத்தல்.
6.தாரணை: அஸ்தி, பாதி, ப்ரியரூபமே தானாகிய ஆத்மசொரூபமென்று மனதை வெளி நாடாது ஹிருதயத்தில் நிறுத்தல்.
7.தியானம்: "சின்மாத்ர வடிவே நாம்" என்று சிந்தித்திருத்தல், அதாவது முற்கூறியபடி பஞ்சகோசாத்மகமான சரீரத்தை நானல்ல வென்று அப்படியே யிருத்தி நானாரென்று விசாரிக்க, அங்கு தான்றானாய் ஸ்புரித்துக் கொண்டிருக்கும் அஹம் சொரூபமாய் இடையறாதிருத்தல்.
8.சமாதி: முற்கூறிய அஹம் ஸ்புரிப்பும் அடங்கிய சூக்ஷ்மமான சாக்ஷாத்கார நிலையாம்.

இவ்வித ப்ராணாயாமாதிகளுக்கு, முன் யோகப் பிரிவிற் கூறிய ஆசனாதி நியமங்கள் வேண்டுவதின்று. எங்கிருந்தாலும் எப்போதும் செய்யலாம். யோகம், ஞானம் ஆகிய இவ்விரண்டில் தனக்கு பிரியமாகத் தோன்றுவதையாவது அல்லது இரண்டையுமேயாவது அனுஷ்டிக்கலாம். மறதியே சர்வ அனர்த்தங்களுக்கும் மூலமென்றும் முமுக்ஷுக்களுக்கு காலனென்றும் பெரியோர் கூறுவதால் எவ்விதத்திலேனும் ஆன்ம சொரூபமாகிய தன்னிடத்தில் மனதை நிறுத்தி எப்போதும் தன்னை மறவாதிருக்க வேண்டுமென்பதே முக்கிய தாற்பரியம். மனமொன் றடங்கினால் எல்லாங் கைவந்ததாகும். இந்த யோக அஷ்டாங்கப் பிரிவுகளும் அவற்றின் விவரங்களும் சாஸ்திரங்களில் விஸ்தாரமாக கூறப்பட்டிருத்தலால் இங்கு வேண்டிய அளவு சுருக்கி கூறப்பட்டது.

ஞான அஷ்ட அங்கங்கள் எவை?
இயம் நியமம் ஆதிகள் ஆகிய முற்கூறிய அவ்வெட்டுமாம். இவற்றில்
1. இயமம்: தேகம் முதலான ப்ரபஞ்ச விஷயங்களிலுள்ள குற்றங்களை தெரிந்து இந்திரிய கூட்டங்களை அடக்குதல்.
2. நியமம்: சஜாதீய விருத்தியின் ப்ரவாகமும் விஜாதீய விருத்தியின் நிராகரிப்புமுமாம். அதாவது பரமாத்மாவின் கண் இடையறாது உண்டாகும் அன்பு.
3. ஆசனம்: எதனிடத்து இடைவிடாத ப்ரஹ்ம சிந்தனம் சுகமாக அமருமோ அதுவே ஆசனம்.
4. ப்ராணாயாமம்: தேகம் முதலான ப்ரபஞ்ச விஷயங்களின் நாமம், ரூபம் என்ற அசத்தான இரண்டு அம்சங்களையும் நீக்குதல் இரேசகம்; அவைகளில் உள் இருக்கும் மாறாத ஸத், சித், ஆனந்தம் என்ற சத்தான மூன்று அம்சங்களையும் கிரகித்தல் பூரகம், அப்படி கிரகித்த அம்சங்களை உள் இருத்தல் கும்பகமாம்.
5. பிரத்யாகாரம்: முன் நீக்கிய நாமரூபங்கள் மனதில் கலவாது காத்தல்.
6. தாரணை: அஸ்தி (இருக்கிறது), பாதி (ப்ரகாசிக்கிறது), ப்ரிய ரூபமே தானாகிய ஆத்ம சொரூபம் என்று கருதி, மனதை வெளி நாடாது ஹிருதயத்தில் நிறுத்தல்.
7. தியானம்: "சின்மாத்ர வடிவே நாம்" என்று சிந்தித்திருத்தல், அதாவது முற்கூறியபடி பஞ்ச கோச ஆத்மகமான சரீரத்தை நானல்ல என்று அப்படியே இருத்தி நான் யாரென்று விசாரிக்க, அங்கு தான் தானாய் ஸ்புரித்துக் கொண்டிருக்கும் அஹம் சொரூபமாய் இடையறாது இருத்தல்.
8. சமாதி: முற்கூறிய அஹம் ஸ்புரிப்பும் அடங்கிய சூக்ஷ்மமான சாக்ஷாத்கார நிலையாம்.
இவ்வித ப்ராணாயாமாதிகளுக்கு, முன் யோகப் பிரிவில் கூறிய ஆசனாதி நியமங்கள் வேண்டுவது இல்லை. எங்கிருந்தாலும் எப்போதும் செய்யலாம். யோகம், ஞானம் ஆகிய இவ்விரண்டில் தனக்கு பிரியமாகத் தோன்றுவதையாவது அல்லது இரண்டையுமேயாவது அனுஷ்டிக்கலாம். மறதியே எல்லா அனர்த்தங்களுக்கும் மூலம் என்றும் முமுக்ஷுக்களுக்கு காலனென்றும் பெரியோர் கூறுவதால் எவ்விதத்திலேனும் ஆன்ம சொரூபமாகிய தன்னிடத்தில் மனதை நிறுத்தி எப்போதும் தன்னை மறவாதிருக்க வேண்டுமென்பதே முக்கிய தாற்பரியம். மனமொன்று அடங்கினால் எல்லாம் கை வந்ததாகும். இந்த யோக அஷ்டாங்கப் பிரிவுகளும் அவற்றின் விவரங்களும் சாஸ்திரங்களில் விஸ்தாரமாக கூறப்பட்டிருத்தலால் இங்கு வேண்டிய அளவு சுருக்கி கூறப்பட்டது.

Friday, March 26, 2010

15. யம கிங்கரர் ஹிம்சிக்காமலிருக்க :



15. யம கிங்கரர் ஹிம்சிக்காமலிருக்க :

விஷ்ணோ ந்ருஸிம்ஹ மது4 ஸூத3ந ஸ2க்ர பாணே கௌ3ரீபதே கி3ரிச ங்கர சந்த்ர சூட |

நாராயண அஸுர நிபர்ஹண சார்ங்கபாணே த்யாஜ்யா: ப4டா: ய இதி ஸந்த்தம் ஆமநந்தி || - ஸ்காந்தம்.

சிவ விஷ்ணு நாமாக்களை பேதமின்றி கூறுவோரை ஹிம்சிக்காதே என்று யமன் கூறிய ஸ்துதியை ஜபிப்போரை யமகிங்கரர் ஹிம்ஸிக்க மாட்டார்.


Wednesday, March 24, 2010

விசார சங்கிரகம் -24.




33. ஆந்தர பூஜை அல்லது நிர்குண பூஜை யென்பதென்ன?
நிர்குண பூஜையைப்பற்றி ரிபுகீதை முதலிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருந்தாலும் சர்வ யக்ஞ, தான, தப, வ்ரத, ஜப, யோக பூஜைகளும் அஹம் ப்ரஹ்மம் என்னும் தியானமே யாகலான் சர்வ பிரகாரத்தாலும் "அஹம் ப்ரஹ்ம" பாவனையை எப்போதும் விடாதிருக்க வேண்டு மென்பதே நிர்குண பூஜையின் தாற்பரியம்.

நிர்குண பூஜையைப்பற்றி ரிபுகீதை முதலிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருந்தாலும் எல்லா யக்ஞ, தான, தப, வ்ரத, ஜப, யோக பூஜைகளும் " அஹம் ப்ரஹ்மம்" என்னும் தியானமே ஆதலால், எல்லா வழியாலும் "அஹம் ப்ரஹ்ம" பாவனையை எப்போதும் விடாதிருக்க வேண்டும் என்பதே நிர்குண பூஜையின் தாத்பரியம்.


13. கர்மாவை விட்ட பாபமகல:



13. கர்மாவை விட்ட பாபமகல:

பாரம்பரம் விஷ்ணு: அபார: பார: பர:ப்ரேப்ய: பரமாத்ம ரூபி |

ஸ ப்3ரம்மபார: பரபா4ர பூ4த: பர: பரணாம் அபிபார பூத: ||
-பிராம்மம்

கரையில்லாத ஸம்ஸாரக்கடலுக்கும் துன்பக்கடலுக்கும் கரையாக உள்ளவர் விஷ்ணு.

இதை காலையிலும் மாலையிலும் மும்முறை ஜபித்தால் ஸந்த்யாகாலத்தில் செய்யத்தகாத கர்மாவை செய்ததால் உண்டாகும் பாபமும், சந்த்யாவந்தனத்தை அகாலத்தில் செய்த பாபமும் அகலும்.


Tuesday, March 23, 2010

12. ஔபாசன பலனைப்பெற:



12. ஔபாசன பலனைப்பெற:

சதுர்பி4ச்ச சதுர்பி4ச்ச த்3வாப்4யாம் பஞ்சபி4ரேவச |

ஹூயதேச புநர்த்3வாப்யாம் ஸநோ விஷ்ணு:ப்ரஸீதது ||

ஆஸ்ராவய, அஸ்துஷ்ரௌஷட், யஜ, யேயஜாமஹே, வௌஷட் என்ற சப்தங்களுடன் ஹோமம் செய்யப்படும் யக்ஞ ரூபியான விஷ்ணு அருள் புரியட்டும். இதை காலையிலும் மாலையிலும் சந்தியாவந்தனம் முடித்து மும்முறை ஜபித்தால் ஔபாசனம் செய்த பலனுண்டாகும்.


Monday, March 22, 2010

விசார சங்கிரகம் -23




32.ஹ்ருதயத்தில் நான் நான் என்று ஆன்ம ரூபமாக ஸ்புரித்துக்கொண்டிருக்கிறது என்ற ப்ரஹ்ம நிலையை எளிதிற் போதமாகுமாறு இன்னும் சற்று விளக்கமாக விஸ்தரித்துக் கூறுதல் கூடுமா?

சுழுத்தி மூர்ச்சையாகிய காலங்களில் எவ்வித ஞானமும் அதாவது தன் ஞானமோ அன்னிய ஞானமோ அற்பமுமின்றென்பது எவருக்குமவநுபவமன்றோ? பின்னர் "தூக்கத்தினின்றும் விழித்தேன், மயக்கத்தினின்றுந் தெளிந்தேன்" என்ற அனுபவம் முற்கூறிய நிர்விசேஷ நிலையின்றுதித்ததோர் விசேஷ ஞானத்தின் தோற்றமன்றோ? இவ்விசேஷ ஞானமே விஞ்ஞானமெனப்படுகிறது. இவ்விஞ்ஞானமானது ஆன்மாவையேனும் அனான்மாவையேனும் ஆஸ்ரயித்தே விளங்குமல்லாது தனியாகப் பிரகாசிக்காது. இது ஆன்மாவை ஆஸ்ரயிக்கும்போது மெய்ஞானம், ஆன்மாகார மனோவிருத்தி ஞானம், அகண்டாகார ஞானமென்றும் அனான்மாவை ஆஸ்ரயிக்கும்போது அஞ்ஞானமென்றும் சொல்லப்படுகிறது. இவ்விஞ்ஞானம் ஆன்மாவை ஆஸ்ரயித்து ஆன்மாகாரமாக விளங்கும் ஸ்திதியே 'அஹம் ஸ்புரிப்பு' எனச்சொல்லப்படுகிறது. இந்த ஸ்புரிப்பு வஸ்துவை விட்டுத் தனியாக இராது. இந்த ஸ்புரிப்பே வஸ்துவை அபரோக்ஷப் படுத்தற்கான தக்க குறியாம். என்றாலும் இதுவே வஸ்து நிலை ஆகாது. இந்த ஸ்புரிப்பானது எதனை ஆஸ்ரயித்து விளங்குகிறதோ அந்த மூலமே வஸ்து அல்லது ப்ரஜ்ஞானம் எனப்படும். வேதாந்தம் 'ப்ரஜ்ஞானம் ப்ரஹ்மம்' என்றது இது பற்றியேயாம்.
இதனை

நிகழ்சுயஞ் சோதியாகி நிகில சாட்சியுமா மான்மா
புகலும்விஞ் ஞான கோசம் பொருந்தியே விளங்குமென்றும்
இகழ்விலா விவ்வான் மாவை யிலக்கிய மாகப்பற்றி
அகமென வனுபவிப்பா யகண்டமாம் விருத்தி யாலே 
-(விவேக சூடாமணி)

என்னும் சுருதியின் தாத்பரியத்தானுந்தெளிக.

ஹ்ருதயத்தில் நான் நான் என்று ஆன்ம ரூபமாக ஸ்புரித்துக்கொண்டிருக்கிறது என்ற ப்ரஹ்ம நிலையை எளிதிற் விளங்குமாறு இன்னும் சற்று விளக்கமாக விஸ்தரித்துக் கூறுதல் கூடுமா?

சுழுத்தி, மூர்ச்சை ஆகிய காலங்களில் எவ்வித ஞானமும் - அதாவது தன் ஞானமோ அன்னிய ஞானமோ - அற்பமும் இல்லை என்பது எவருக்குமவநுபவமன்றோ? பின்னர் "தூக்கத்தினின்றும் விழித்தேன், மயக்கத்தினின்றும் தெளிந்தேன்" என்ற அனுபவம் முன்னே சொன்ன நிர்விசேஷ நிலையிலிருந்து உதித்த ஓர் விசேஷ ஞானத்தின் தோற்றம் அன்றோ? இந்த விசேஷ ஞானமே விஞ்ஞானம் எனப்படுகிறது. இந்த விஞ்ஞானமானது ஆன்மாவையாவது அனான்மாவையாவது சார்ந்தே விளங்கும். அப்படி அல்லாது தனியாகப் பிரகாசிக்காது. இது ஆன்மாவை சார்ந்திருக்கும் போது "மெய்ஞானம், ஆன்மாகார மனோவிருத்தி ஞானம், அகண்டாகார ஞானம்" என்றும் அனான்மாவை சார்ந்திருக்கும் போது அஞ்ஞானம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விஞ்ஞானம் ஆன்மாவை சார்ந்து ஆன்மாகாரமாக விளங்கும் ஸ்திதியே 'அஹம் ஸ்புரிப்பு' எனச் சொல்லப்படுகிறது. இந்த ஸ்புரிப்பு வஸ்துவை விட்டுத் தனியாக இராது. இந்த ஸ்புரிப்பே வஸ்துவை மறைவிலிருந்து நீக்க தக்க குறியாம். என்றாலும் இதுவே வஸ்து நிலை ஆகாது. இந்த ஸ்புரிப்பானது எதனை சார்ந்து விளங்குகிறதோ அந்த மூலமே வஸ்து அல்லது ப்ரஜ்ஞானம் எனப்படும். வேதாந்தம் 'ப்ரஜ்ஞானம் ப்ரஹ்மம்' என்றது இது பற்றியேயாம்.
இதனை

நிகழ் சுயம் சோதி ஆகி நிகில சாட்சியும் ஆன்மா
புகலும் விஞ்ஞான கோசம் பொருந்தியே விளங்குமென்றும்
இகழ்வு இலா இவ் ஆன்மாவை இலக்கியமாகப் பற்றி
அகம் என அனுபவிப்பாய் அகண்டமாம் விருத்தியாலே
(- விவேக சூடாமணி)
என்னும் வேதத்தின் தாத்பரியத்தாலும் தெளிக.

11. யாக பலனை பெற:




11. யாக பலனை பெற:

நமஸ்கார: ஸ்ம்ருதோ யக்ஞ: ஸர்வ யக்ஞ உத்தம உத்தம:

நமாமி ஸததம் தேவம் ஸமேதேவ: ப்ரஸீத3து ||

- பவிஷ்ய புராணம்

நமஸ்காரமே யக்ஞங்கள் எல்லாவற்றிலும் உயர்ந்த யாகம் எனக்கூறி ஸ்வாமி எதிரில் நமஸ்காரம் செய்தால் யாகம் செய்த பலன் உண்டாகும்.


Saturday, March 20, 2010

10. தீராத நோய் அகல:



10. தீராத நோய் அகல:

ஓம் நம: பரமார்த்தா2ய புருஷாய மஹாத்மநே |

அரூப ப3ஹுரூபாய வ்யாபினே பரமாத்மநே || 
-ஆக்னேய புராணம்

இதை ப்ரதி தினம் 1008 முறை ஜபம் செய்தால் ஒரு மண்டலத்துக்குள் தீராத மஹா ரோகமும் அகலும்.

Wednesday, March 17, 2010

விசார சங்கிரகம் -22



31.ஆன்மாவை பாவிப்ப தெப்படி?

ஆன்மா இருட்டும் பிரகாசமும் மல்லாத சுயஞ்ஜோதியாய் தன்மயமாய்த் தனக்குத் தானே ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் வஸ்துவாகலான் அதை இப்படியென்றும் அப்படியென்றும் பாவித்தல் கூடாது. பாவிக்கும் நினைப்பே பந்தமாக முடியும். மனதை ஆன்மாகார மாக்குவதே ஆன்ம பாவத்தின் தாற்பரியமாம். ஹ்ருதயமென்னும் குகையின் மத்தியில் கேவல ப்ரஹ்மமே நான் நான் என்று ப்ரத்யக்ஷமாய் ஆன்ம ரூபமாகப் பிரகாசித்துக் கொண்டிருத்தலை அறியாது ஆன்மாவை பல விதங்களாகப் பாவிப்பதினும் அறியாமை வேறுண்டோ?

ஆன்மா இருட்டும் பிரகாசமும் அல்லாத சுயம் ஜோதியாய், தன் மயமாய், தனக்குத் தானே ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் வஸ்து. ஆதலால் அதை இப்படியென்றும் அப்படியென்றும் பாவித்தல் கூடாது. பாவிக்கும் நினைப்பே கட்டுப்பாடு செய்வதாக முடியும். மனதை ஆன்மாகாரம் ஆக்குவதே ஆன்ம பாவத்தின் தாற்பரியமாம். ஹ்ருதயம் என்னும் குகையின் மத்தியில் ப்ரஹ்மம் மட்டுமே நான் நான் என்று ப்ரத்யக்ஷமாய் ஆன்ம ரூபமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இதை அறியாது ஆன்மாவை பல விதங்களாகப் பாவிப்பதை விட அறியாமை வேறுண்டோ? [பாவிப்பதை விட்டு இதை "பார்க்க" கற்றுக்கொள்ள வேண்டும்.]


8. கெட்ட கனவு அகல:




8. கெட்ட கனவு அகல:

அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸத்யம் ஜநார்த்த4னம்|

ஹம்ஸம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் து3ஸ்வப்ந ஸா2ந்தயே

இரவில் படுக்கப்போகும்போது 3 முறை பாராயணம் செய்ய கெட்ட கனவுகள் தோன்றா. இரவில் கெட்ட கனவு கண்டவர்கள் காலை எழுந்தவுடன் யாருடனும் பேசாமல் பசுவின் காதில் அதை கூறிவிட்டு ஸ்2லோகத்தை 3 முறை ஜபிக்க கெட்ட பலன் தோன்றாது.

Tuesday, March 16, 2010

மானச பூஜை




சரி பெண்கள் செய்யற பாவ புண்ணியங்கள் பலன் யாருக்கு? புண்ணியங்கள் பலன் அத்தனையும் அவங்களுக்கேதான். போனா போகுது. பாவமும் அப்படித்தானே? இல்லியே! 50% பாபம் அவங்களோட கணவனுக்குதான். எங்க போறீங்க? கொடி தூக்கவா? இதுல இருக்கிற லாஜிக்கை சொல்லுங்களேன்.....

ஆண்கள் பூஜை செய்ய பெண்கள் உதவணும். பூஜை செய்கிற இடத்தை மெழுகி கோலம் போட்டு, பூக்கள் போன்ற தேவையான பொருட்களை கொண்டு வந்து வைத்து நிவேதனம் செய்ய ஏதேனும் தயார் பண்ணி - இப்படி பல வேலைகளை ஒழுங்கா செய்து இருந்தாதான் நிம்மதியா பூஜையை ரங்கமணி செய்யலாம். இல்லாவிட்டால் எங்கே வில்வம் காணோம், நிவேதனம் கொண்டு வர இவ்வளவு நேரமா ன்னு ஆரம்பிச்சு பல பிரச்சினைகள் துவங்கி பூஜை செய்கிற குறிக்கோளே போயிடும். கடேசில கோபம்தான் மிஞ்சும்.
அதனால பூஜைக்கு உதவற தங்கமணிகளுக்கு 50% புண்ணியம்.

மனைவி செய்கிற புண்ணிய காரியத்திலே இந்த மாதிரி பங்கு ஏதும் இல்லாம போகிற வாய்ப்பே அதிகம். அதனால அவங்க புண்ணியம் முழுக்க அவங்களுக்கே.

மனைவி தப்பு பண்ணா சரியா சொல்லிக்கொடுத்து செய்ய வைக்காத தப்பு ரங்கமணிது. அதானால 50% பாபம் ரங்கமணிக்கு.

ரங்கமணி செய்கிற தப்புக்கு தங்கமணி பாவம், என்ன பண்ணுவா? முழு பொறுப்பு ரங்குக்கு. அதனால பாபம் முழுக்க அவனுக்கே!
என்ன தங்கமணிகளே சரிதானே?

பூஜைகள்ல ஆயிரத்து எட்டு விதங்கள் இருக்கிறதால அதுக்குள்ள இப்ப போகலை. அடுத்ததா...

பலரும் கேக்கிறது. தினசரி பூஜை செஞ்சுகிட்டு இருக்கேன். திடீர்ன்னு ஊருக்கு போகணும். என்ன செய்யறது?
இப்படி பட்ட கேள்விகள் ஆயிரம் முளைக்கலாம். ஒரே விடை எல்லாருக்கும் பொருந்தாது. எங்கே போனாலும் பூஜையை கூட எடுத்துகிட்டு போய் போகிற இடத்திலே செய்கிற சிலரைத்தெரியும். அந்த காலத்திலே அப்படித்தான் இருந்து இருக்காங்க.
இப்ப இது கொஞ்சம் கஷ்டமா போயிடுத்து. ஆசார அனுஷ்டானங்களோட இருக்கிறவங்களுக்கு இது சிரம சாத்யம் ஆகிகிட்டு இருக்கு.
இதிலே என் வழி என்னன்னு சொல்கிறேண். உங்களுக்கு சரின்னு தோன்றினா அப்படியே செய்யுங்க.
ஊருக்கு பூஜையை எடுத்துக்காமலே கிளம்பிடுவேன். வீட்டிலே மனைவி, அம்மா அப்பா இருக்கிறதாலே யாரானா சின்னதா பூஜையை செஞ்சுடுவாங்க. அப்படி வாய்ப்பில்லாத போதும் மற்றும் சில நாட்களும் பூஜை நேரத்திலே பஸ், ட்ரெயின் எதுலே இருந்தாலும் அப்படியே மனசுலே பூஜையை ஆரம்பிச்சு செய்வேன். இதிலே சில அட்வான்டேஜ் இருக்கு. நிறைய விதவிதமான பூக்களை அர்ப்பணிக்கலாம். நைவேத்யம் இஷ்டத்துக்கு எது வேணா எவ்வளோ வேணா செய்யலாம்!
மனசால செய்கிறது சுலபமா தோணினாலும் அப்படி இல்லை. முழு கான்சென்ட்ரேஷன் வேணும். இல்லை வழக்கம் போலே மனசுக் குதிரை எங்கானா மேய போயிடும். ஆரம்ப காலத்திலே இது பழகாதது என்பதாலே சுலபம். பழகின பிறகுதான் கஷ்டம். ஏன்னு புரியுது இல்லே?

7. நோயகல: விஷ்ணு ஸ்துதி:



7. நோயகல: விஷ்ணு ஸ்துதி:

அச்யுத அநந்த கோவிந்த நாம உச்சாரண பே4ஷஜாத் |

நச்யந்தி ஸகலா: ரோகா3: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||

இதை 108 முறை ஜபித்து விபூதி இட்டால் நோய் அகலும். நீடித்த நோயானால் 40 நாட்கள் ஜபிக்கவும்.


Monday, March 15, 2010

விசார சங்கிரகம் -21



30.ஹ்ருதயமும் ப்ரஹ்மரந்திரமுமே தியான ஸ்தானங்களெனினும் அவசியமாயின் ஆறாதார தரிசனைகளையுங் கொள்ளலாமா?

தியான ஸ்தானங்களாக கொள்ளப்படும் ஆறாதார முதலியவனைத்தும் கற்பனைகளேயாம். இவையாவும் ஆரம்ப யோகிகளுக்கே உரியன. ஆறாதார தரிசனைகளைப்பற்றி நம்மை சிருஷ்டி திதி சங்காரங்கள் செய்யும் அத்வைத பரிபூரண ஞான சொரூப ஆன்மாவாகிற கடவுளை கணபதி ப்ரஹ்மா விஷ்ணு உருத்திரன் மஹேச்வரன் சதாசிவனாதிய நாம ரூபங்களாக பாவனையாலுண்டாக்கிக் கெடுப்பது மஹா பாவமே என்று சிவ யோகிகளும் அவையனைத்தும் கற்பனைகளே என்று வேதாந்திகளும் கூறுகின்றனர். ஆகவே எல்லாவற்றையும் அறியும் ஞான சொரூபமாகிற தன்னையறிந்தால் எல்லாமறிந்ததாகும். யாதொன் றிருந்த படியறிய அறியாவெல்லா மறிந்தனவாம் என்று பெரியோருங் கூறியிருக்கின்றனர். நாநாபாவனையோடுங் கூடியுள்ள நாம் கடவுளாகிய ஆன்மாவை பாவித்து வந்தால் அந்த ஏக பாவனையால் அநேக பாவனைகள் நீங்கி முன்னுள்ள ஏக பாவனையும் நசிக்கும். இதுவே தன்னை அல்லது கடவுளை யறிவதாம். இதுவே முக்தி.

தியான ஸ்தானங்களாக கொள்ளப்படும் ஆறு ஆதார ஸ்தானங்கள் முதலியன அனைத்தும் கற்பனைகளேயாம். இவை யாவும் ஆரம்ப யோகிகளுக்கே உரியன. ஆறு ஆதார தரிசனைகளைப்பற்றி சொல்லும் போது: நம்மை சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்கள் செய்யும் அத்வைத பரிபூரண ஞான சொரூப ஆன்மாவாகிற கடவுளை கணபதி, ப்ரஹ்மா, விஷ்ணு, உருத்திரன், மஹேச்வரன் சதாசிவன் ஆதிய நாம ரூபங்களாக பாவனையால் உண்டாக்கிக் கெடுப்பது மஹா பாவமே என்று சிவ யோகிகளும்; அவை அனைத்தும் கற்பனைகளே என்று வேதாந்திகளும் கூறுகின்றனர். ஆகவே எல்லாவற்றையும் அறியும் ஞான சொரூபமாகிற தன்னை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும். "யாது ஒன்று இருந்த படி அறிய, அறியா எல்லாம் அறிந்தனவாம்" என்று பெரியோரும் கூறியிருக்கின்றனர். நாநா வித பாவனையோடும் கூடியுள்ள நாம் கடவுளாகிய ஆன்மாவை பாவித்து வந்தால் அந்த ஏக பாவனையால் அநேக பாவனைகள் நீங்கி முன்னுள்ள ஏக பாவனையும் நசிக்கும். இதுவே தன்னை அல்லது கடவுளை அறிவதாம். இதுவே முக்தி.



6. இஷ்டம் பூர்த்தியாக:




6. இஷ்டம் பூர்த்தியாக:

ஏகம் ப்3ரம்மைவ அத்3விதீயம் ஸமஸ்தம் ஸத்யம் ஸத்யம் நேஹ நாநாஸ்தி கிஞ்சித் |

ஏகோ ருத்ரோ நத்3விதீயாய தஸ்தே தஸ்மாத் ஏகம் த்வாம் ப்ரபத்3யே மஹேசம் ||

இரண்டாக இல்லாமல் ஒன்றாக எங்குமிருப்பது பிரம்மம். இதே உண்மை. பலவாக காணப்படுவது பொய். ஒன்றாக இருப்பவன் ருத்திரனே. அப்படிப்பட்ட உன்னை சரணடைகிறேன்.
– இதை காலையில் சுத்தனாக 108 முறை பிரதி தினம் ஜபித்தால் ஒரு மண்டலத்தில் விரும்பிய காரியம் கைகூடும்.

Thursday, March 11, 2010

5 சிவ ஸஹஸ்ர நாம பாராயண புண்யம் பெற




சிவோ மஹேஸ்வரச்சைவ ருத்ரோ விஷ்ணு: பிதாமஹ: |

ஸம்ஸார வைத்ய: ஸர்வேச: பரமாத்மா ஸதா சிவ: || - சிவபுராணம்

இதை 3 முறை ஜபித்தால் சிவ ஸஹஸ்ர நாம பாராயணம் செய்த புண்யம் உண்டாகும்.


விசார சங்கிரகம் -20



29.தியானத்தில் தீப ஜ்வாலைபோல் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் தேஜோமய சொரூபத்தினும் தான் வேறில்லை யென்று ஸோஹம் பாவத்துடன் தியானிக்கக் கூறியதின் தாற்பர்யமென்ன?

(அ) தேஜோமயத்திலும் தான் வேறில்லையென்று பாவிக்கக்கூறியதன் தாற்பரியமிதுவாம் சுருதிகளில் தியான லக்ஷணத்தைப் பற்றி கைலாசம் வைகுண்டம் பரமபத மென்பனவாகக் கூறப்படுகிற அஷ்டதளத்தோடுங் கூடிய சர்வாத்மகமான ஹ்ருதய கமல மத்தியில் அங்குஷ்ட மாத்ர பரிமாணமாய் மின்னலைப்போற் காந்தியுள்ளதாய் தீபஜ்வாலைபோலும் ப்ரகாசிக்கும் அவ்வஸ்துவைத் தியானித்து புருஷன் அமிர்தத்வத்தை அடைகிறான் என்று கூறியிருத்தலால் இதிலிருந்து தான் வேறு அது வேறு என்ற பேத பாவமும் பின்னத்யானமும் வஸ்துவில் பரிச்சின்ன புத்தியும் ஏகதேச புத்தியுமாகிய தோஷங்கள் சம்பவியாதிருத்தற் பொருட்டாம்.

(ஆ) ஸோஹம் பாவத்துடன் தியானிக்கக்கூறியதன் தாற்பரிய மிதுவாம் ஸ + அஹம் ஸோஹம் ஸ பரமாத்மா அஹம் நானென விளங்கும் ஆத்மா. பிரமபுரமென்னும் தேகமாகியபட்டணத்தில் ஹ்ருதய கமலாசனத்தில் வசிக்கும் ஜீவனாகிய சிவலிங்கத்தை அதாவது தன்னை தேகாதிகளை தானென்று வெளிமுகத்திற் சஞ்சரிக்கும் அகங்கார ரூப மனதை ஹ்ருதயத்திலடக்கி தேகாதிகளிலுள்ள அஹம் பாவம் நீங்கி தேகத்திலிருக்கும் நானார் என்ற விசாரத்தோடும் நிச்சலமாக இருந்தபடியிருந்து விசாரிக்குங்கால் அங்கு அஹம் அஹம் என்று சூக்ஷ்மமாக ஸ்புரித்துக் கொண்டிருக்கும் ஆத்ம சொரூபமே எல்லாமா யல்லாவுமாய் பாஹ்யாந்தர பேதமின்றி எங்கும் விளங்கும் பரமாத்ம சொரூபமாக லானும் அந்த ப்ரஹ்மமே நான் என்பதன் பொருளாய் விளங்கலானும் அதை தன் மயமாக பாவிக்கின் அறியாமை நீங்காதாகலான் அங்ங்னம் பாவிக்கக் கூறியதாம்.
வெகு காலம் இவ்வாத்மாநுசந்தானடாகிற ஸோஹம் பாவனையால் நிரந்தரம் வஸ்துவை நிச்சலமாய் த்யானித்து வந்தால் ஹ்ருதயத்திலுள்ள அஞ்ஞான அந்தகாரமும் அஞ்ஞான தற்காரியங்களான ஸர்வ ப்ரதிபந்தங்களும் நீங்கி பரிபூரண ஞானம் லப்த மாகும்.
சிந்தனை புறஞ்செலாச் சிவோகம் பாவனை சந்தத முஞற்றிடின் சமாதி வந்துறும் -வள்ளலார்.
இங்ஙனம் தேகமாகிய பட்டணத்தில் ஹ்ருதய குஹையிலிருக்கும் வஸ்துவையறிதலே ஸர்வ பரிபூரணமாயிருக்கும் ஈச்வரனை அறிதலாம்.
நவத்வாரங்களுடன் கூடிய தேகமாகிய புரியில் ஞானி சுகமாய் வசிப்பன். தேகமே ஆலயம் ஜீவனே சிவன். அவனை ஸோஹம் பாவனையால் பூஜிக்கின் முக்தியுண்டாம்.
பஞ்சகோசாத்மக தேகமே குஹை அதில் வசிக்கும் பரமே குஹேசன் என்று சுருதிகளும் கூறுகின்றன. ஆத்மாவே ஸர்வ தியானங்களிலும் தானாகிய ஆத்மத்யானமே சர்வ சிரேஷ்டமாம். மற்ற த்யானங்க ளனைத்தும் இதில அந்தர்பூத மாகலானும் இது ஸித்தியானால் மற்றவை தேவையில்லை. தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும் தியானிக்கும் தன்னை யறியாமல் இதரமாய் தெய்வமிருக்கிறதென்றென்னி த்யானிப்பது தனது நிழலைக்காலால் அளத்தற்கு சமானம் என்றும் கையிலிருக்கும் அத்ய பூர்வமான கௌஸ்துப ரத்தினத்தை தூர எறிந்துவிட்டு மிக அற்பமான சங்குமணி தேடுதற்குச் சமான மென்றும் பெரியோர் கூறுகின்றனர்.

தியானத்தில் தீப ஜ்வாலை போல் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் தேஜோமய சொரூபத்தை விட்டு தான் வேறு இல்லை என்று ஸோஹம் பாவத்துடன் தியானிக்கக் கூறியதின் தாத்பர்யமென்ன?
(அ) தேஜோமயத்திலும் தான் வேறில்லையென்று பாவிக்கக்கூறியதன் தாத்பரியம் இதுதான்: சுருதிகளில் தியான லக்ஷணத்தைப் பற்றி கைலாசம், வைகுண்டம், பரமபதம் என்பனவாகக் பலவிதமா சொல்லப்படுகிற எட்டு இதழ்களோட கூடிய சர்வ ஆத்மகம் ஆன ஹ்ருதய தாமரை மத்தியிலே கட்டைவிரல் அளவே மின்னலைப் போல காந்தியுள்ளதாய், தீப ஜ்வாலை போலும் ப்ரகாசிக்கிற அந்த வஸ்துவைத் தியானித்து புருஷன் அழியா தன்மையை அடைகிறான் என்று கூறியிருக்கிறதால; இதிலிருந்து தான் வேறு, அது வேறு என்ற வித்தியாச பாவமும், வேறு வகையாக த்யானமும், வஸ்துவை பலதாக பார்க்கும் புத்தியும், ஏகதேசபுத்தியுமாகிய தோஷங்கள் சம்பவிக்காம இருக்கணும் என்றே.
--
(ஆ) ஸோஹம் பாவத்துடன் தியானிக்கக்கூறியதன் தாத்பரியம் இதுவாம்: ஸ + அஹம் = ஸோஹம் ஸ = பரமாத்மா; அஹம் = நான் என விளங்கும் ஆத்மா. உடம்பை பிரமபுரமென்னும் பட்டணம் ந்னு சொன்னா, ஹ்ருதயம் கமலாசனம். அங்கே வசிக்கிற ஜீவனாகிய சிவலிங்கம் எதுன்னா , தேகம் முதலானதை தான்னு நினைச்சு வெளிமுகமா சஞ்சரிக்கும் அகங்கார ரூபமான மனசு. இந்த மனசை ஹ்ருதயத்திலே அடக்கி, தேகம் முதலானதில இருக்கிற நான் என்கிற பாவத்தை நீங்கி, தேகத்தில இருக்கிற நான் யார் என்கிற விசாரத்தோட, அசைவில்லாம இருந்தபடி இருந்து விசாரிக்கிறப்ப அங்க “அஹம், அஹம்” ந்னு கண்ணுக்கு தெரியாதபடி துடிக்கிற ஆத்ம சொரூபமே எல்லாமாயும் எல்லாம் இல்லாமாயும் வெளி உள் வித்தியாசமில்லாமல் எங்கும் விளங்கும் பரமாத்ம சொரூபமாக ஆவதால, அந்த ப்ரஹ்மமே நான் என்பதன் பொருளாய் விளங்குகிறதாலேயும்; அதை தன் – உடம்பு, மனம் - மயமாக பாவித்தால் அறியாமை நீங்காது என்பதால் அப்படி பாவிக்கச் சொன்னாங்க.
வெகு காலம் இந்த ஆத்மா அநுசந்தானம் ஆகிற ஸோஹம் பாவனையால நிரந்தரம் வஸ்துவை நிச்சலமாய் த்யானித்து வந்தா, ஹ்ருதயத்திலுள்ள அஞ்ஞான அந்தகாரமும் அஞ்ஞான தற்காரியங்களான ஸர்வ ப்ரதிபந்தங்களும் நீங்கி பரிபூரண ஞானம் கிடைக்கும்.

சிந்தனை புறம் செலா சிவோகம் பாவனை சந்ததமுஞற்றிடின் சமாதி வந்துறும் -வள்ளலார்.

இப்படி தேகமாகிய பட்டணத்தில் ஹ்ருதய குஹையில் இருக்கும் வஸ்துவை அறிதலே ஸர்வ பரிபூரணமாக இருக்கும் ஈச்வரனை அறிதலாம்.
நவத்வாரங்களுடன் கூடிய தேகமாகிய புரியில் ஞானி சுகமாய் வசிப்பன். தேகமே ஆலயம் ஜீவனே சிவன். அவனை ஸோஹம் பாவனையால் பூஜிக்கின் முக்தியுண்டாம்.
பஞ்சகோச ஆத்மக தேகமே குஹை; அதில் வசிக்கும் பரமே குஹேசன் என்று சுருதிகளும் கூறுகின்றன. ஆத்மாவே ஸர்வ தியானங்களிலும் தானாகிய ஆத்ம த்யானமே சர்வ சிரேஷ்டமாம். மற்ற த்யானங்கள் அனைத்தும் இதில அடங்கும். இது ஸித்தியானால் மற்றது எதுவும் தேவையில்லை. தன்னை அறிவதே கடவுளை அறிவதாகும். தியானிக்கும் தன்னை அறியாமல் இதரமாய் தெய்வம் இருக்கிறது என்று எண்ணி த்யானிப்பது தனது நிழலைக் காலால் அளத்தற்கு சமானம் என்றும், கையிலிருக்கும் கௌஸ்துப ரத்தினத்தை தூர எறிந்துவிட்டு மிக அற்பமான சங்குமணி தேடுதற்குச் சமானம் என்றும் பெரியோர் கூறுகின்றனர்.


Wednesday, March 10, 2010

4. துர்பிக்ஷம் நீங்க:




4. துர்பிக்ஷம் நீங்க:

து3ஸ்வப்ன து3ச்சகுன து3ர்கதி தௌ3ர்மநஸ்ய து3ர்பிக்ஷ து3ர்வ்யஸந து3ஸ்ஸஹ து3ர்யசாம்ஸி |
உத்பாத தாப விஷபீ4திம் அஸத்க்3ரஹ கார்த்திம் வ்யாதீம்ச் ச நாசயது மே ஜகதாம் அதீ4ச:

-பிரும்மோத்தரம்.
இதை 8 முறை ஜபித்து விபூதி இட கெட்ட கனவு, கெட்ட சகுனத்தால் வரும் தீமை, தௌர்பாக்யம், துர்பிக்ஷம், துக்கம், கெட்ட கீர்த்தி, விஷம், கெட்ட க்ரஹங்களால் உண்டாகும் துன்பம் ஆகியன நீங்கும்.

Tuesday, March 9, 2010

3. ஜ்வரமகல: சிவ ஸ்துதி




3. ஜ்வரமகல: சிவ ஸ்துதி

பா3லாம்பி3கேச வைத்யேச ப4வரோக3 ஹரேதிச |
ஜபேந்நாம த்ரயம் நித்யம் மஹா ரோக3 நிவாரணம் || -ஸ்காந்தம்

இதை 108 முறை ஜபித்து விபூதி இட ஜ்வரமகலும்.

Monday, March 8, 2010

சூன்யம் பார்வை அகல



2. சூன்யம் பார்வை அகல : ஸுப்ரமண்ய ஸ்துதி

ஸுப்ரம்மண்யச்ச ஸேநாநீ: கு3ஹ-ஸ்கந்தச்ச வாமந: |

மஹா ஸேநோ த்3வாத3 சாக்ஷ விஸ்வபூ4: ஷண்முக: சி2வ: ||

சம்பு4 புத்ர: ச வல்லீச தேவ ஸேநாபதி: ப்ரபு4: |

சரோத்3ப4வ: சக்தி புத்ர: ப்ரமபூ4: அம்பிகாஸுத: ||

பூ4தேச: பாவகி: ஸ்ரீமான் விசாக2: சிகி2 வாஹந: |

கா3ங்கேய: ச கஜாரூட4: சத்ரு ஹந்தா ஷட3க்ஷர: || 

-ஸ்காந்தம்

இந்த நாமாக்களை தினச்சரி காலை, மாலைகளில் மூன்று மூன்று முறை ஜபித்தால் சூன்யம். பில்லி, பார்வை இவற்றால் உண்டாகும் துன்பமும், பகைவன் பயமும் அகலும்.


Sunday, March 7, 2010

1 விக்னமகல



1. விக்னமகல:
ஸுமுக2ச் சைகத3ந்தச்ச கபிலோ க3ஜ கர்ணக: |
லம்போ3த3ரச்ச விகட: விக்4ந ராஜோ விநாயக: ||
தூ4ம கேது: கணாத்4யக்ஷ: பா2ல சந்த்ரோ க3ஜாநந: |
வக்ர துண்ட3 சூர்ப்ப கர்ண: ஹேரம்ப4 ஸ்கந்த பூர்வஜ: || - விநாயக புராணம்
(இதில் விக்நேஸ்வரருடைய 16 நாமாக்கள் இருக்கின்றன. இவற்றை முதலில் சொல்லிவிட்டு எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் அது விக்நமின்றி பூர்த்தியாகும்)


Saturday, March 6, 2010

ஸ்ரீ காலபைரவாஷ்டகம்



கோடை வருது. நாய்கள் தொந்திரவு அதிகமாகுமாம். பிரச்சினை வராம இருக்க....

 ஸ்ரீ காலபைரவாஷ்டகம்

தே3வராஜ ஸேவ்யமான பாவனாம்க்4ரி பங்கஜம்
வ்யால யக்ஞஸூத்ரமின் து3ஷேகரம் க்ருபாகரம் .
நாரதா3தி3 யோகி3வ்ரு‍ந்த வந்திதம் தி3க3ம்ப3ரம்
காஷிகா புராதி4னாத2 காலபை4ரவம் பஜே .. ௧..

பா4னு கோடிபா4ஸ்வரம் ப4வாப்தி4தாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்த2தா3யகம் த்ரிலோசனம் .
கால காலமம்புஜாக்ஷ மக்ஷஷூலமக்ஷரம்
காஷிகா புராதி4னாத2 காலபை4ரவம் பஜே .. ௨..

ஷூல டம்க பாஷ தண்டபாணி மாதி3காரணம்
ஷ்யாம காயமாதி3 தே3வமக்ஷரம் நிராமயம் .
பீ4ம விக்ரமம் ப்ரபு4ம் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகா புராதி4னாத2 காலபை4ரவம் பஜே .. ௩..

பு4க்திமுக்திதா3யகம் ப்ரஷஸ்த சாருவிக்ரஹம்
ப4க்தவத்ஸலம் ஸ்தித2ம் ஸமஸ்த லோக விக்ரஹம் .
வினிக்வணன் மனோக்ஞஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காஷிகா புராதி4னாத2 காலபை4ரவம் பஜே .. ௪..

த4ர்மஸேதுபாலகம் த்வத4ர்ம மார்க3னாஷனம்
கர்மபாஷ மோசகம் ஸுஷர்மதா4யகம் விபு4ம் .
ஸ்வர்ணவர்ண ஷேஸ2பாஷ ஷோபி4தாம் கமண்டலம்
காஷிகா புராதி4னாத2 காலபை4ரவம் பஜே .. ௫..

ரத்னபாது3கா ப்ரபா4பி4 ராமபாத3 யுக்3மகம்
நித்யம த்3விதீயமிஷ்ட தை3வதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யு த3ர்ப நாஷனம் கரால த3ம்ஷ்ட்ர மோக்ஷணம்
காஷிகா புராதி4னாத2 காலபை4ரவம் பஜே .. ௬..

அட்டஹாஸ பி4ன்ன பத்மஜாண்டகோஷ ஸம்ததிம்
த்ரு‍ஷ்டி பாத்தனஷ்ட பாபஜால முக்ரஷாஸனம் .
அஷ்டஸித்3தி4 தா3யகம் கபாலமாலிகாத4ரம்
காஷிகா புராதி4னாத2 காலபை4ரவம் பஜே .. ௭..

பூ4தஸம்க4னாயகம் விஷாலகீர்திதா3யகம்
காஷிவாஸ லோகபுண்ய பாபஷோத4க1ம் விபும் .
நீதிமார்க3கோவித3ம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகா புராதி4னாத2 காலபை4ரவம் பஜே .. ௮..

.. பல ஷ்ருதி ..
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாத4னம் விசித்ரபுண்யவர்த4னம் .
ஷோகமோஹ தை3ன்யலோப4 கோபதாப னாஷனம்
விப்ரயான்தி காலபைரவாம் க்4ரிஸன்னிதி4ம் நராத்4ருவம்

.. இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..



Thursday, March 4, 2010

குளியல் மேலும்...



கடைசியா மகளிருக்கு வீட்டு விலக்கு ஏற்படுவது போல நதிகளுக்கும் உண்டு. அவை ஆடி மாத ஆரம்ப மூன்று நாட்கள். 4 ஆவது நாள் நதிக்கு கங்கை போல சுத்தம் உண்டாம்.
உடல் பலத்தைப் பொறுத்து தங்கி இருக்கிற இடத்திலிருந்து தீர்த்தத்துக்கு செருப்பில்லாம நடந்தே போகணும். குடை பிடிச்சு கொண்டு போனா கால் பாகமும், செருப்பு போட்டுக்கொண்டு போனா பாதியும், டோலியில் போனால் முழு ஸ்நாந பலனும் போய்விடுமாம்.
உடம்பு சரியில்லாதவர்கள் குதிரை வண்டியில் போக அனுமதி இருக்கு.
மற்ற ஸ்நாநங்கள்.
ஜலத்தில் குளிக்கிறதுதான் முக்கிய ஸ்நாநம். எல்லாத்திலேயும் இரண்டாவதா ஒரு தேர்வு இருக்குமில்லையா? செகண்ட் பெஸ்ட் ம்பாங்க.
அப்படி ஜலம் கிடைக்கலை அல்லது ஜலத்தில் குளிக்க முடியாதுன்னு இருக்கிறப்ப பலவித ஸ்நாநங்கள் இருக்கும்.
ஆக்னேயம் என்கிறது பஸ்ம ஸ்நாநம். வழக்கம்போல ஆசமனம், ப்ராணாயாமம், சங்கல்பம் எல்லாம். வெள்ளையான அக்னிஹோத்ர பஸ்மா எடுத்து (கிடைக்காட்டா மற்ற பஸ்மா) ஈசான மந்திரத்தால் தலையில் பூசணும். தத் புருஷ மந்திரத்தால் முகம்; அகோர மந்திரத்தால் ஹ்ருதயம்; வாமதேவ மந்திரத்தால் குஹ்யம்; ஸத்யோஜாத மந்திரத்தால் பாதங்கள்; ப்ரணவத்தால் உடம்பு முழுதும்.
சும்மா நெத்தியிலே விபூதி இட்டுக்கொண்டு ஆக்னேய ஸ்நாநம் செய்ததா நினைக்கிறாங்க. அது தப்புன்னு சொல்லத்தான்…
ஜலத்தில் குளிக்கிறதுதான் முன்னேயே பாத்த வாருண ஸ்நாநம். உடம்பு சரியில்லாதவன் தலையில் விட்டுக்காம குளிக்கலாம்; அல்லது ஈர துணியால உடம்பை துடைச்சுக்கலாம். இதுக்கு காபில ஸ்நாநம்ன்னு பெயர். வேத மந்திரங்களை (ஆபோஹிஷ்டா) சொல்லி தர்ப்பைகளால ப்ரோக்ஷணம் செய்வது ப்ராம்ம ஸ்நாநம். அஸ்தமன வேளையில் பசு மாடுகள் வீடு திரும்பும்போது அவற்றோட குளம்பு அடிபட்டு அதிலிருந்து கிளம்பற புழுதி நம் மேலே விழுவது வாயவ்ய ஸ்நாநம்.
எப்பவாவது உத்தராயண காலத்திலே மாலை வெய்யில் அடிக்கும்போதே மழை (இந்தியா இலங்கையில் கோடை மழை) பெய்யுமில்லையா? அப்படி ஏதேனும் பாத்தா உடனே அதிலே போய் நிண்ணுடனும். இது திவ்ய ஸ்நாநம். கங்கையில் குளிக்கிறதுக்கு ஒப்பாகுமாம் இது.
நல்ல மனக்குவிப்போட சங்கு சக்ர கதாதாரியா நாராயணனை மனசிலே த்யானிக்கிறது மானச ஸ்நாநம். இது யோகிகளுக்கு உரியது.
சுத்தமான மண்ணால மந்திரங்கள் சொல்லி உடம்பை தேய்த்து சுத்தி செய்து கொள்வது பார்த்திவ ஸ்நாநம்.
இத்தோட குளியல் குறித்த பதிவுகள் முடிந்தன.




Wednesday, March 3, 2010

குளிக்கும்போது கவனிக்க வேண்டியது..



குளிக்கும்போது கவனிக்க வேண்டியது சிலதை பார்க்கலாம்.
சாப்பிடும்போது பேசக்கூடாது. பேசாமல் சாப்பிட்டால் ஆயுசு அதிகமாகும். பேசிக்கொண்டு சாப்பிட்டால் ஆயுசு குறையும். ஹோமம் செய்யும் போது பேசினால் செல்வம் குறையும். பேசாமல் ஹோமம் செய்தால் அதிகமாகும்.
இதே போல குளிக்கும் போது பேசக்கூடாது.
நதி, குளங்களில் குளிக்கும்போது சூரியனை நோக்கியே குளிக்க வேண்டும். நதியில் ஓடும் தண்ணீர் இருந்தால் நீர் ஓட்டத்தை எதிரிட்டு குளிக்க வேண்டும்.

ஒரு கோவிலில் இருக்கும்போது இன்னொரு கோவில் ஸ்வாமியை புகழக்கூடாது. ஒரு க்ஷேத்திரத்தில் இன்னொரு க்ஷேத்திரத்தை புகழக்கூடாது. அதே போல ஒரு நதியில் குளிக்கும்போது இன்னொரு நதியை நினைக்கக்கூடாது. (காசியும் கங்கையும் மட்டும் விதிவிலக்கு)
கோவிலுக்கு போய் வருகிறோம். இல்லை தேர் திருவிழாவில்/ உத்ஸவத்தில் கலந்துகொண்டு திரும்புகிறோம். உடனே குளிக்கக்கூடாது. மங்கள் காரியம் செய்த உடன் குளிக்கக்கூடாது. உறவினர், சினேகிதர் ஆகியோரை வழி அனுப்பிவிட்டு வந்து உடனே குளிக்கக்கூடாது. சாப்பிட்ட பிறகு குளிக்கக்கூடாது.
வியாதி உள்ளவர்; பல கவலைகளால் குழப்பமடைஞ்ச மனமுள்ளவர்: சாப்பிட்டவர்; நன்றாக அலங்காரம் செய்து கொண்டவர் இவர்கள் நதிகளில் குளங்களில் குளிக்கக்கூடாது.
யாருடைய மனைவி கர்ப்பமாக இருக்கிறாரோ அவர் சமுத்திரத்தில் குளிக்கக்கூடாது.
குளங்கள் தர்மத்துக்கான பொது குளமாயிருந்தால் குற்றமில்லை. தனியார் குளமானால் அனுமதி இல்லாமல் அதில் குளித்தால் குளத்தின் சொந்தக்காரருடைய பாபத்தில் கால் பங்கை பெறுவோம். அனுமதி பெற்று 4-5 மண் கட்டிகளை அதிலிருந்து எடுத்து போட்டு விட்டு அதில் குளிக்கலாம்.
வீட்டுக் கிணறானாலும் ஒரு அடி இரண்டு அடி ஜலமே இருந்தால் அது குளிக்கத் தகுந்தது இல்லை. குறைந்தது 4 அடி ஆழம் ஜலமிருக்க வேண்டும்.
அதே போல் கொஞ்சமே ஜலமிருக்கிறதெனில் ஏரி, நீர்நிலை இவற்றில் *முழுகிக்* குளிக்கக்கூடாது. கைகளால் ஜலத்தை எடுத்து தலையில் விட்டுக்கொள்ளணும். அதே போல சமுத்திரத்திலும்.
[முழுக வேண்டும் என்ற ஆசையில் வெகுதூரம் ஆழமான இடத்துக்கு போய்விட வாய்ப்பு இருக்கிறதே? இதை காரணம் காட்டி சொல்லவில்லை. ஆனாலும் சில சாஸ்திர விஷயங்கள் லாஜிக்காக இருக்கிறன.]
நதி வற்றிப்போய் இருக்கு. அப்புறம் மழை பெய்தோ அணை திறந்தோ தண்ணீர் வருகிறது. இது அசுத்தமானது. பத்து நாட்கள் வரை இது குளிக்க அருகதையில்லாதது.
வண்ணான் துறையில் குளிக்ககூடாது. சரி, நதியில் துணி துவக்கிறார்களே, என்ன செய்வதுன்னா - வேறு வழியில்லாவிடில் பத்து முழம் தள்ளி குளிக்கலாம்.

சில சமயங்களில் சுத்தமாகிறதுக்காக குளிக்கச்சொல்லி இருக்கு.
அழுதால், வாந்தி எடுத்தால், ஷவரம் செய்து கொண்டால். மைதுனம் செய்தால், நாய், நாயை தின்பவனை தொட்டால், பிரசவித்த பெண்ணை தொட்டால், வீட்டு விலக்கானவர்களை தொட்டால்....லிஸ்ட் ரொம்ப பெரிசு. அத்தோட நம்ம டாபிக்குக்கு நேரடி சம்பந்தமில்லை. சிரத்தை உள்ளவர்கள் தேடி தெரிந்து கொள்ளலாம்.

இரவில் குளிக்கக்கூடாது. ராத்திரியில் நடுவில் உள்ள இரண்டு யாமம் மஹா நிசி எனப்படும்.
[ஒரு யாமம்  என்பது சுமார்  3 மணி நேரம். நடு இரவு 12 மணி என்று வைத்துக்கொண்டால் இரவு 9 முதல் காலை 3 வரை மஹா நிசி. இன்னும் சரியாக வேண்டுமானால் சூர்ய அஸ்தமனம் முதல் உதயம் வரை 4 ஆக பிரித்துக்கொள்ளவும். ஒரு இரவில் 4 யாமம்.] இந்த நேரத்தில் நிச்சயம் குளிக்கக்கூடாது. காம்ய ஸ்நாநமும் நைமித்திக ஸ்நாநமும் விலக்கானதால் அவசியமானால் சில விதிகள் படி செய்யலாம்.
ஊருக்கு போய்விட்டு வருகிறோம். குளிக்க வாய்ப்பு கிடக்கவில்லை. இரவாகிவிட்டது. இப்படி இருந்தால் வென்னீரில் அக்னியின் முன்னிலையில் அல்லது தங்கத்தை (யார் அதுன்னு கேக்கக்கூடாது!) பார்த்து/ நீரில் போட்டுக்கொண்டு குளிக்கலாம். க்ரஹணம், ஸூர்ய சங்க்ரமணம் (மாதப்பிறப்பு), விவாஹம், மரண ஜனனங்கள், யாத்திரை ஆகியன இந்த சட்டத்தில் வரும்.

மீன், தவளை, ஆமை எல்லாமே தண்ணீரில் முழுகித்தான் இருக்கின்றன. [கங்கையிலேயே முழுகி இருந்தாலும்] அவற்றுக்கு ஸ்நாந பலன் இல்லை. அது போல விதிப்படி செய்யாத ஸ்நாநம் என்கிறார் யாக்ஞவல்கியர்.


Tuesday, March 2, 2010

விசார சங்கிரஹம் - 19




28.ப்ரத்யாகாரத்தில் ப்ரணவத்தை மனோமயமாகத் தியானிக்கச் சொல்லியதின் தாற்பரியமென்ன?
ப்ரணவத்தியானம் செய்யச்சொல்லியதின் தாற்பரிய மிதுவாம். ப்ரணவமென்பது அகார உகார மகார அர்த்தமாத்திரை யென்னும் மூன்றரை மாத்திரைகள் கூடிய ஓங்காரமாம். இவற்றில் அகாரமென்பது ஜாக்ர விச்வஜீவ ஸ்தூல தேகங்களென்றும் உகாரமென்பது ஸ்வப்ன தைஜஸஜீவ சூக்ஷ்ம தேகங்க ளென்றும் மகார மென்பது சுழுப்தி பிராஜ்ஞ ஜீவ காரண தேகங்களென்றும் அர்த்த மாத்திரை யென்பது துரியம் அல்லது அஹம் சொரூப மென்றும் இதற் கப்பாற்பட்ட நிலை துரியாதீதமாகிய ஆநந்த மாத்திர சொரூப மென்றும் சொல்லப்படும். முன் தியானத்திற் கூறிய இந்நான்காவதான அஹம் சொரூபமே மற்ற அகார உகார மகாரங்களென்னும் மூன்று மாத்திரைக ளடங்கியுள்ள அமாத்திரை சொரூப மென்றும் மௌனாக்ஷர மென்றும் அஜபை யென்றும் ஜபியாமல் ஜபித்தலென்றும் பஞ்சாக்ஷராதி மந்திரங்களின் சாரமான அத்வைத மந்திர மென்றும் கூறப்படும். இவ்வெதார்த்த அர்த்தம் சித்தித்தற்பொருட்டே ப்ரணவத் தியானம் செய்யப்படுவதாம்.இந்த ஆத்மாநுசந்தான பக்திரூப தியானத்தின் பரிபாக அவஸ்தையே சமாதி யெனப்பட்டு நிரதிசயாநந்த மோக்ஷ கதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வாத்மாநுசந்தான ரூப பக்தி யொன்றினாலேயே மோக்ஷமடைய வேண்டும் எனக்கூறியிருக்கின்றனர்.

நாம ரூபங்களிலே மனசை போக விடாம ஒரு முகப்படுத்த சொன்னதிலே ப்ரணவத்தை மனோமயமாகத் தியானிக்க சொல்லியிருக்கே, அதோட தாத்பரியமென்ன?
ப்ரணவத்தியானம் செய்யச் சொல்லியதோட தாத்பரியம் இதான்: ப்ரணவமென்கிறது என்ன? அ உ ம ன்னு 3 எழுத்துக்கள். அப்புறம் எழுத்தில்லாம பாதி மாத்திரை. இதெல்லாம் சேர்ந்த ஓங்கார சப்தம். இவற்றில அகாரம் என்பது ஜாக்ரத், விச்வஜீவன், ஸ்தூல தேகம். உகாரமென்பது ஸ்வப்னம், தைஜஸன், ஜீவ சூக்ஷ்ம தேகம். மகாரம் என்பது சுழுப்தி, பிராஜ்ஞன், ஜீவ காரண தேகம். அர்த்த மாத்திரை என்பது துரியம் அல்லது அஹம் சொரூபம். (இதெல்லாம் ஞான வழி முதல் பாகத்திலே இருக்கு. மறந்து போயிருந்தா தேடிப்பாருங்க!) இதற்கு அப்பாற்பட்ட நிலை துரியாதீதம். ஆநந்த மாத்திர சொரூபம் ன்னும் சொல்லுவாங்க.
முன் தியானத்திலே சொன்ன இந்த நான்காவதான அஹம் சொரூபம் என்னன்னா, மத்த அகார உகார மகாரங்கள் என்னும் மூன்று மாத்திரைகள் அடங்கியுள்ள அமாத்திரை (கால அளவுக்குள்ளே வராத) சொரூபம். மௌனாக்ஷர மென்றும், அஜபை யென்றும், ஜபியாமல் ஜபித்தலென்றும், பஞ்சாக்ஷராதி மந்திரங்களின் சாரமான அத்வைத மந்திர மென்றும் சொல்கிறாங்க. இந்த எதார்த்த அர்த்தம் சித்திக்கனும்னே ப்ரணவத் தியானம் செய்யப்படுகிறது. இந்த ஆத்மாநுசந்தான, பக்தி ரூப தியானத்தின் பலனான, பக்குவமான நிலையே சமாதி எனப்பட்டு, நிரதிசய ஆநந்த மோக்ஷ கதியைக் கொடுக்கும். பெரியோர்களும் ஸ்வ ஆத்ம அநுசந்தான ரூப பக்தி ஒன்றினாலேயே மோக்ஷமடைய வேண்டும் ன்னு சொல்லி இருக்காங்க.