30.ஹ்ருதயமும் ப்ரஹ்மரந்திரமுமே தியான ஸ்தானங்களெனினும் அவசியமாயின் ஆறாதார தரிசனைகளையுங் கொள்ளலாமா?
தியான ஸ்தானங்களாக கொள்ளப்படும் ஆறாதார முதலியவனைத்தும் கற்பனைகளேயாம். இவையாவும் ஆரம்ப யோகிகளுக்கே உரியன. ஆறாதார தரிசனைகளைப்பற்றி நம்மை சிருஷ்டி திதி சங்காரங்கள் செய்யும் அத்வைத பரிபூரண ஞான சொரூப ஆன்மாவாகிற கடவுளை கணபதி ப்ரஹ்மா விஷ்ணு உருத்திரன் மஹேச்வரன் சதாசிவனாதிய நாம ரூபங்களாக பாவனையாலுண்டாக்கிக் கெடுப்பது மஹா பாவமே என்று சிவ யோகிகளும் அவையனைத்தும் கற்பனைகளே என்று வேதாந்திகளும் கூறுகின்றனர். ஆகவே எல்லாவற்றையும் அறியும் ஞான சொரூபமாகிற தன்னையறிந்தால் எல்லாமறிந்ததாகும். யாதொன் றிருந்த படியறிய அறியாவெல்லா மறிந்தனவாம் என்று பெரியோருங் கூறியிருக்கின்றனர். நாநாபாவனையோடுங் கூடியுள்ள நாம் கடவுளாகிய ஆன்மாவை பாவித்து வந்தால் அந்த ஏக பாவனையால் அநேக பாவனைகள் நீங்கி முன்னுள்ள ஏக பாவனையும் நசிக்கும். இதுவே தன்னை அல்லது கடவுளை யறிவதாம். இதுவே முக்தி.
தியான ஸ்தானங்களாக கொள்ளப்படும் ஆறு ஆதார ஸ்தானங்கள் முதலியன அனைத்தும் கற்பனைகளேயாம். இவை யாவும் ஆரம்ப யோகிகளுக்கே உரியன. ஆறு ஆதார தரிசனைகளைப்பற்றி சொல்லும் போது: நம்மை சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்கள் செய்யும் அத்வைத பரிபூரண ஞான சொரூப ஆன்மாவாகிற கடவுளை கணபதி, ப்ரஹ்மா, விஷ்ணு, உருத்திரன், மஹேச்வரன் சதாசிவன் ஆதிய நாம ரூபங்களாக பாவனையால் உண்டாக்கிக் கெடுப்பது மஹா பாவமே என்று சிவ யோகிகளும்; அவை அனைத்தும் கற்பனைகளே என்று வேதாந்திகளும் கூறுகின்றனர். ஆகவே எல்லாவற்றையும் அறியும் ஞான சொரூபமாகிற தன்னை அறிந்தால் எல்லாம் அறிந்ததாகும். "யாது ஒன்று இருந்த படி அறிய, அறியா எல்லாம் அறிந்தனவாம்" என்று பெரியோரும் கூறியிருக்கின்றனர். நாநா வித பாவனையோடும் கூடியுள்ள நாம் கடவுளாகிய ஆன்மாவை பாவித்து வந்தால் அந்த ஏக பாவனையால் அநேக பாவனைகள் நீங்கி முன்னுள்ள ஏக பாவனையும் நசிக்கும். இதுவே தன்னை அல்லது கடவுளை அறிவதாம். இதுவே முக்தி.
No comments:
Post a Comment