4. துர்பிக்ஷம் நீங்க:
உத்பாத தாப விஷபீ4திம் அஸத்க்3ரஹ கார்த்திம் வ்யாதீம்ச் ச நாசயது மே ஜகதாம் அதீ4ச:
-பிரும்மோத்தரம்.
இதை 8 முறை ஜபித்து விபூதி இட கெட்ட கனவு, கெட்ட சகுனத்தால் வரும் தீமை, தௌர்பாக்யம், துர்பிக்ஷம், துக்கம், கெட்ட கீர்த்தி, விஷம், கெட்ட க்ரஹங்களால் உண்டாகும் துன்பம் ஆகியன நீங்கும்.
5 comments:
சுபிக்ஷம் என்பதற்கு எதிர்பதமாக துர்பிக்ஷம் என்று கொள்ளலாம். ஸ்லோகத்தில் சொல்லப்படும் யாவும் துர்பிக்ஷத்தின் அங்கங்களே. அதிலேயும் துர்பிக்ஷம் என்று நடுவில் வரும் போது அதை தகாத உணவு (அ) தகாத இடங்களில் உணவு அருந்துதல் என்று பொருள் கொள்ளலாமா?
இங்கு பிக்ஷா என்பதை பிட்சை என்ற பொருளில் வைத்து கேட்கிறேன்.
அதென்ன துர்பிக்ஷம்? கொஞ்சம் விவரியுங்களேன்.
நல்ல கிரகம் என்பது யாவை. நவகிரங்கள் எல்லாம் நல்ல கிரகங்கள்தானே. கேது ராகு மட்டும் நல்ல கிரகத்தோடு சேரும்போது நால்லது செய்யும் கிரகத்தோட கெட்ட மார்க்கம் இருக்கும் போது கெட்டது செய்யும் ஏன்னா அவை இரண்டும் தேவன் பாதி அசுரன் பாதி இரண்டும் கலந்த கலவை.சரியா சார்
வருகை தந்த எல்லாருக்கும் நன்ஸ்காரம். வேலை பளிவில் பதில் உடனே போட முடியவில்லை.
@ கபீரன்பரே, துர் பிக்ஷம் என்பதை அன்ன பானம் கிடைக்காமல்போவது என்று கொள்ளலாம்.
துர்பிக்ஷம்"தேவ லோகேஷு"என்று ஆருணத்தில் (சூர்ய நமஸ்காரம்) வருகிறது இந்த பொருளிலேதான்.
@ அனன்யா
வாங்கோ அனன்யா அக்கா. முதல் வருகை, நல்வரவு. முக்கிய அர்த்தம் மேலே கொடுத்து இருக்கிறேன். அன்னம் என்பதுக்கு நாம் consume செய்யும் எல்லாமே என்றும் பொருள் கொள்வதுண்டு. ஆனாலும் முக்கிய அர்த்தம் உணவுதான்.
திராச சார், தர்மரோட பார்வை உங்களுக்கு. கிரஹங்கள் எல்லாமே இருக்கும் இடம், சேர்க்கை, பார்வை பொருத்து நன்மையோ தீமையோ தருவதாக சொல்கிறாங்க. உணமியிலே அதுவா தருது? சட்டியில் இல்லாம... நம் கர்மாவுக்கு ஏற்ப நல்லது கெட்டது எப்போது நடக்கும் என்று காட்டுவதாக கொள்ளலாம். ஆனா இந்த தீய க்ரஹம், நல்ல க்ரஹம் கான்செப்ட் லேதான் பரிகாரங்கள் எல்லாமே நடக்குது!
Post a Comment