Pages

Saturday, March 27, 2010

விசார சங்கிரகம் -25




34.ஞானாஷ்டாங்கங்க ளெவை?
இயம் நியமமாதிகளாகிய முற்கூறிய அவ்வெட்டுமாம். இவற்றில்
1.இயமம்: தேகாதி ப்ரபஞ்ச விஷயங்களிலுள்ள தோஷங்களை தெரிந்து இந்திரிய சமூகங்களை அடக்குதல்.
2. நியமம்: சஜாதீய விருத்தியின் ப்ரவாகமும் விஜாதீய விருத்தியின் திரஸ்காரமுமாம். அதாவது பரமாத்மாவின் கண் இடையறா துண்டாகும் அன்பு.
3.ஆசனம்: எதனிடத்து இடைவிடாத ப்ரஹ்ம சிந்தனம் சுகமாகவுண்டாகுமோ அஃதாசனம்.
4,ப்ராணாயாமம்: தேகாதி ப்ரபஞ்ச விஷயங்களின் நாமரூப மென்ற அசத்தான இரண்டம்சங் களையும் நீக்குதல் இரீசகமும் அவைகளில் அனுசூதமா யிருக்கும் ஸத் சித், ஆனந்தமென்ற சத்தான மூன்றம்சங்களையும் கிரகித்தல் பூரகமும், அங்ஙனம் கிரகித்த அம்சங்களை உள்ளிருத்தல் கும்பகமுமாம்.
5.பிரத்யாகாரம்: முன் நீக்கிய நாமரூபங்கள் மனதிற்கலவாது காத்தல்.
6.தாரணை: அஸ்தி, பாதி, ப்ரியரூபமே தானாகிய ஆத்மசொரூபமென்று மனதை வெளி நாடாது ஹிருதயத்தில் நிறுத்தல்.
7.தியானம்: "சின்மாத்ர வடிவே நாம்" என்று சிந்தித்திருத்தல், அதாவது முற்கூறியபடி பஞ்சகோசாத்மகமான சரீரத்தை நானல்ல வென்று அப்படியே யிருத்தி நானாரென்று விசாரிக்க, அங்கு தான்றானாய் ஸ்புரித்துக் கொண்டிருக்கும் அஹம் சொரூபமாய் இடையறாதிருத்தல்.
8.சமாதி: முற்கூறிய அஹம் ஸ்புரிப்பும் அடங்கிய சூக்ஷ்மமான சாக்ஷாத்கார நிலையாம்.

இவ்வித ப்ராணாயாமாதிகளுக்கு, முன் யோகப் பிரிவிற் கூறிய ஆசனாதி நியமங்கள் வேண்டுவதின்று. எங்கிருந்தாலும் எப்போதும் செய்யலாம். யோகம், ஞானம் ஆகிய இவ்விரண்டில் தனக்கு பிரியமாகத் தோன்றுவதையாவது அல்லது இரண்டையுமேயாவது அனுஷ்டிக்கலாம். மறதியே சர்வ அனர்த்தங்களுக்கும் மூலமென்றும் முமுக்ஷுக்களுக்கு காலனென்றும் பெரியோர் கூறுவதால் எவ்விதத்திலேனும் ஆன்ம சொரூபமாகிய தன்னிடத்தில் மனதை நிறுத்தி எப்போதும் தன்னை மறவாதிருக்க வேண்டுமென்பதே முக்கிய தாற்பரியம். மனமொன் றடங்கினால் எல்லாங் கைவந்ததாகும். இந்த யோக அஷ்டாங்கப் பிரிவுகளும் அவற்றின் விவரங்களும் சாஸ்திரங்களில் விஸ்தாரமாக கூறப்பட்டிருத்தலால் இங்கு வேண்டிய அளவு சுருக்கி கூறப்பட்டது.

ஞான அஷ்ட அங்கங்கள் எவை?
இயம் நியமம் ஆதிகள் ஆகிய முற்கூறிய அவ்வெட்டுமாம். இவற்றில்
1. இயமம்: தேகம் முதலான ப்ரபஞ்ச விஷயங்களிலுள்ள குற்றங்களை தெரிந்து இந்திரிய கூட்டங்களை அடக்குதல்.
2. நியமம்: சஜாதீய விருத்தியின் ப்ரவாகமும் விஜாதீய விருத்தியின் நிராகரிப்புமுமாம். அதாவது பரமாத்மாவின் கண் இடையறாது உண்டாகும் அன்பு.
3. ஆசனம்: எதனிடத்து இடைவிடாத ப்ரஹ்ம சிந்தனம் சுகமாக அமருமோ அதுவே ஆசனம்.
4. ப்ராணாயாமம்: தேகம் முதலான ப்ரபஞ்ச விஷயங்களின் நாமம், ரூபம் என்ற அசத்தான இரண்டு அம்சங்களையும் நீக்குதல் இரேசகம்; அவைகளில் உள் இருக்கும் மாறாத ஸத், சித், ஆனந்தம் என்ற சத்தான மூன்று அம்சங்களையும் கிரகித்தல் பூரகம், அப்படி கிரகித்த அம்சங்களை உள் இருத்தல் கும்பகமாம்.
5. பிரத்யாகாரம்: முன் நீக்கிய நாமரூபங்கள் மனதில் கலவாது காத்தல்.
6. தாரணை: அஸ்தி (இருக்கிறது), பாதி (ப்ரகாசிக்கிறது), ப்ரிய ரூபமே தானாகிய ஆத்ம சொரூபம் என்று கருதி, மனதை வெளி நாடாது ஹிருதயத்தில் நிறுத்தல்.
7. தியானம்: "சின்மாத்ர வடிவே நாம்" என்று சிந்தித்திருத்தல், அதாவது முற்கூறியபடி பஞ்ச கோச ஆத்மகமான சரீரத்தை நானல்ல என்று அப்படியே இருத்தி நான் யாரென்று விசாரிக்க, அங்கு தான் தானாய் ஸ்புரித்துக் கொண்டிருக்கும் அஹம் சொரூபமாய் இடையறாது இருத்தல்.
8. சமாதி: முற்கூறிய அஹம் ஸ்புரிப்பும் அடங்கிய சூக்ஷ்மமான சாக்ஷாத்கார நிலையாம்.
இவ்வித ப்ராணாயாமாதிகளுக்கு, முன் யோகப் பிரிவில் கூறிய ஆசனாதி நியமங்கள் வேண்டுவது இல்லை. எங்கிருந்தாலும் எப்போதும் செய்யலாம். யோகம், ஞானம் ஆகிய இவ்விரண்டில் தனக்கு பிரியமாகத் தோன்றுவதையாவது அல்லது இரண்டையுமேயாவது அனுஷ்டிக்கலாம். மறதியே எல்லா அனர்த்தங்களுக்கும் மூலம் என்றும் முமுக்ஷுக்களுக்கு காலனென்றும் பெரியோர் கூறுவதால் எவ்விதத்திலேனும் ஆன்ம சொரூபமாகிய தன்னிடத்தில் மனதை நிறுத்தி எப்போதும் தன்னை மறவாதிருக்க வேண்டுமென்பதே முக்கிய தாற்பரியம். மனமொன்று அடங்கினால் எல்லாம் கை வந்ததாகும். இந்த யோக அஷ்டாங்கப் பிரிவுகளும் அவற்றின் விவரங்களும் சாஸ்திரங்களில் விஸ்தாரமாக கூறப்பட்டிருத்தலால் இங்கு வேண்டிய அளவு சுருக்கி கூறப்பட்டது.

1 comment:

yrskbalu said...

this yoga called as raja yoga/ kiriya yoga by sivandar