Pages

Thursday, March 4, 2010

குளியல் மேலும்...



கடைசியா மகளிருக்கு வீட்டு விலக்கு ஏற்படுவது போல நதிகளுக்கும் உண்டு. அவை ஆடி மாத ஆரம்ப மூன்று நாட்கள். 4 ஆவது நாள் நதிக்கு கங்கை போல சுத்தம் உண்டாம்.
உடல் பலத்தைப் பொறுத்து தங்கி இருக்கிற இடத்திலிருந்து தீர்த்தத்துக்கு செருப்பில்லாம நடந்தே போகணும். குடை பிடிச்சு கொண்டு போனா கால் பாகமும், செருப்பு போட்டுக்கொண்டு போனா பாதியும், டோலியில் போனால் முழு ஸ்நாந பலனும் போய்விடுமாம்.
உடம்பு சரியில்லாதவர்கள் குதிரை வண்டியில் போக அனுமதி இருக்கு.
மற்ற ஸ்நாநங்கள்.
ஜலத்தில் குளிக்கிறதுதான் முக்கிய ஸ்நாநம். எல்லாத்திலேயும் இரண்டாவதா ஒரு தேர்வு இருக்குமில்லையா? செகண்ட் பெஸ்ட் ம்பாங்க.
அப்படி ஜலம் கிடைக்கலை அல்லது ஜலத்தில் குளிக்க முடியாதுன்னு இருக்கிறப்ப பலவித ஸ்நாநங்கள் இருக்கும்.
ஆக்னேயம் என்கிறது பஸ்ம ஸ்நாநம். வழக்கம்போல ஆசமனம், ப்ராணாயாமம், சங்கல்பம் எல்லாம். வெள்ளையான அக்னிஹோத்ர பஸ்மா எடுத்து (கிடைக்காட்டா மற்ற பஸ்மா) ஈசான மந்திரத்தால் தலையில் பூசணும். தத் புருஷ மந்திரத்தால் முகம்; அகோர மந்திரத்தால் ஹ்ருதயம்; வாமதேவ மந்திரத்தால் குஹ்யம்; ஸத்யோஜாத மந்திரத்தால் பாதங்கள்; ப்ரணவத்தால் உடம்பு முழுதும்.
சும்மா நெத்தியிலே விபூதி இட்டுக்கொண்டு ஆக்னேய ஸ்நாநம் செய்ததா நினைக்கிறாங்க. அது தப்புன்னு சொல்லத்தான்…
ஜலத்தில் குளிக்கிறதுதான் முன்னேயே பாத்த வாருண ஸ்நாநம். உடம்பு சரியில்லாதவன் தலையில் விட்டுக்காம குளிக்கலாம்; அல்லது ஈர துணியால உடம்பை துடைச்சுக்கலாம். இதுக்கு காபில ஸ்நாநம்ன்னு பெயர். வேத மந்திரங்களை (ஆபோஹிஷ்டா) சொல்லி தர்ப்பைகளால ப்ரோக்ஷணம் செய்வது ப்ராம்ம ஸ்நாநம். அஸ்தமன வேளையில் பசு மாடுகள் வீடு திரும்பும்போது அவற்றோட குளம்பு அடிபட்டு அதிலிருந்து கிளம்பற புழுதி நம் மேலே விழுவது வாயவ்ய ஸ்நாநம்.
எப்பவாவது உத்தராயண காலத்திலே மாலை வெய்யில் அடிக்கும்போதே மழை (இந்தியா இலங்கையில் கோடை மழை) பெய்யுமில்லையா? அப்படி ஏதேனும் பாத்தா உடனே அதிலே போய் நிண்ணுடனும். இது திவ்ய ஸ்நாநம். கங்கையில் குளிக்கிறதுக்கு ஒப்பாகுமாம் இது.
நல்ல மனக்குவிப்போட சங்கு சக்ர கதாதாரியா நாராயணனை மனசிலே த்யானிக்கிறது மானச ஸ்நாநம். இது யோகிகளுக்கு உரியது.
சுத்தமான மண்ணால மந்திரங்கள் சொல்லி உடம்பை தேய்த்து சுத்தி செய்து கொள்வது பார்த்திவ ஸ்நாநம்.
இத்தோட குளியல் குறித்த பதிவுகள் முடிந்தன.




No comments: