ஸவிசாரத்துக்கு உதாரணம் பார்க்கலாமா? மனசையே எடுத்துக்கலாம். அது என்ன செய்கிறது, எங்கே போகிறது ன்னு கவனிக்கிறது ஸவிசார பாவனை. (இதுவே ரமணர் காட்டிய வழி.)
விதர்க்கம், விசாரம் இரண்டும் சேர்ந்தது க்ராஹ்ய ஸமாதி (த்யானம்). அதெப்படி இரண்டும் ஒண்ணா சேரும்ன்னா.... ஒரு பொருளோட தோற்றம், அதோட ஸூக்ஷ்ம சொரூபம் ரெண்டையுமே ஒரே நேரத்திலே த்யானிக்கலாம் இல்லையா?
சத்வமான சித்தம் ரஜோ, தமோ சலனங்களோட த்யானம் செய்கிறப்ப இந்திரியங்கள் மூலமா சுகமும் பிரகாசமும் அனுபவிக்கப்படும். இது ஆநந்தம்.
மூடிய கண் முன்னே கோடி சூர்ய பிரகாசத்தோட ஏதோ தெரிகிறது. இல்லை அருமையான மல்லிகைப்பூ வாசனை உணர்கிறோம். தென்றல் வருடின மாதிரி உணர்கிறோம். அபூர்வமான இசை கேட்கிறது. இவை எல்லாம் ரஜோ தமோ குண சலனங்கள். சத்வ சித்தம் அனுபவிக்கும் போது இவை ஆநந்தம் ஆகும்.
இப்படி ரஜோ, தமோ சலனங்கள் இல்லைன்னா அது ஸாஸ்மிதம். இந்த அஸ்மிதத்திலே சத்வமான சித்தம் இருக்கு என்கிறது மட்டுமே உணரலாம். வேற தூல, ஸூக்ஷ்ம இந்திரிய (புலன்கள்) சமாசாரம் ஒண்ணுமே தெரியாது.
இந்த விதர்க்கம், விசாரம், ஆநந்தம், அஸ்மிதை நாலுமே ஒரு வகை.- ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.
ப்ரக்ஞை ன்னு கேள்வி பட்டிருக்கோம் இல்லையா. உணர்ச்சி. அனெஸ்தடிஸ்ட் ஊசி போட்டார். ப்ரக்ஞை போயிடுத்து. ஆபரேஷன் நடந்ததே தெரியாது என்கிறோம். ஸமாதியிலே ஏதோ ஒரு உணர்ச்சி இருந்தா அது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.
2 comments:
3- 4 வாரங்களா ரெகுலரா படிக்க முடியல்ல.மேலோட்டமா பாத்துட்டு போனேன். விட்டுப்போனதை படிக்கணும்.
இந்த பதிவை கொஞ்சம் மாத்தினேளா? முதல்ல படித்தப்போ ரமணர் சொன்னதுன்னு வேற மாதிரி எழுதியிருந்த மாதிரி இருந்தது. Comment எழுத வந்தேன் இப்ப என்னொட சந்தேகத்துக்கான விஷயம் இல்லை!! INFORMATIVE.
நான் இத்தனை நாளும் பொறி இயல் ஆழ்த்துனர்னா என்ன ENGINEERING னு விசாரம் பண்ணிண்டு இருந்தேன்!! இப்பத்தான் பார்த்தேன் அது துயில் ஆழ்த்துனர்னு. ANAESTHETIC COMMENT STRUCK THE RIGHT CORD!!:))SPARK !! HA! HA
3- 4 வாரங்களா ரெகுலரா படிக்க முடியல்ல.மேலோட்டமா பாத்துட்டு போனேன். விட்டுப்போனதை படிக்கணும்.//
பரவாயில்லையே? தொடர்ந்து படிக்கிறா மாதிரி என் பதிவுகள் இருக்கு போல இருக்கு!
// இந்த பதிவை கொஞ்சம் மாத்தினேளா? //
டெம்ப்லேட் மாத்தி இருக்கு. வேற பின் புல படங்கள் எழுத்துக்கள்....
// முதல்ல படித்தப்போ ரமணர் சொன்னதுன்னு வேற மாதிரி எழுதியிருந்த மாதிரி இருந்தது. //
ரமணரோட விசார சங்கிரகம் தொடர் எழுதிக்கொண்டு இருந்தேன். அது முடிஞ்சு போச்சே!
//Comment எழுத வந்தேன் இப்ப என்னொட சந்தேகத்துக்கான விஷயம் இல்லை!! INFORMATIVE.
நான் இத்தனை நாளும் பொறி இயல் ஆழ்த்துனர்னா என்ன ENGINEERING னு விசாரம் பண்ணிண்டு இருந்தேன்!! இப்பத்தான் பார்த்தேன் அது துயில் ஆழ்த்துனர்னு. ANAESTHETIC COMMENT STRUCK THE RIGHT CORD!!:))SPARK !! HA! HA //
:-)))) பொறி துயில்!
Post a Comment