Pages

Saturday, July 28, 2012

கங்கா ஸ்தோத்ரம் -3




(5)

पतितोद्धारिणि जाह्नवि गङ्गे खण्डित-गिरि-वर-मण्डित-भङ्गे ।
भीष्म-जननि हे मुनि-वर-कन्ये पतित-निवारिणि त्रिभुवन-धन्ये ॥

பதிதோத்³தா⁴ரிணி ஜாஹ்நவி க³ங்கே³
க²ண்டி³த-கி³ரி-வர-மண்டி³த-ப⁴ங்கே³
பீ⁴ஷ்ம ஜநநி ஹே முநி-வர-கந்யே
பதித-நிவாரிணி த்ரிபு⁴வந-த⁴ந்யே

ஜஹ்னு முனிவரின் மகளே! பாதை தவறியவர்களை உயர்த்தி விடுபவளே! நீ எந்த பெரும் (இமய) மலையைப் பிளந்து கொண்டு வருகிறாயோ அதனால் (அதன் சிகரங்கள் உன்னிடம் பிரதிபலிப்பதனால்) உன் பிரவாஹம் அழகுபடுத்தப்படுகிறது. பீஷ்மனின் தாயே! மூவுலகையும் உய்வுறச்செய்பவளே!

patitoddhāriṇi jāhnavi gaṅge khaṇḍita-giri-vara-maṇḍita-bhaṅge
bhīṣma janani he muni-vara-kanye patita-nivāriṇi tribhuvana-dhanye


(6)

कल्प-लताम् इव फलदाम् लोके प्रणमति यस् त्वां न पतति शोके ।
पारावार-विहारिणि गङ्गे विमुख-युवति-कृत-तरलापाङ्गे ॥

கல்ப-லதாம் இவ ப²லதா³ம்' லோகே
ப்ரணமதி யஸ் த்வாம்ʼ ந பததி ஶோகே
பாராவார-விஹாரிணி க³ங்கே³
விமுக²-யுவதி-க்ருʼத-தரலாபாங்கே³

தாயே! கல்பவ்ருக்ஷத்தைப் போல் உன் பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைக்கிறாய்! அத்தகைய உன்னைத் தொழுபவர்கள் (எதற்கும்) வருத்தப்படுவதில்லை.  புருஷனை அடையத்துடிக்கும் வனிதை போல் நீ கடலை அடையத்துடிக்கிறாய்!

kalpa-latām iva phaladām loke praṇamati yas tvāṁ na patati śoke
pārāvāra-vihāriṇi gaṅge vimukha-yuvati-kṛta-taralāpāṅge

1 comment:

Jayashree said...

கங்கை ஸ்தோத்ரம் சமீபத்தில் தோழி சொல்லிக்கொடுத்து கத்துண்டது. பக்தி என்பது ஒரு வினோதமானதுன்னு இப்பல்லாம் எனக்கு தோணறது மிஸ்டர் திவா. என் தோழி சிவனை உபாசிக்கும் வைதீக குடும்பத்தில் பிறந்தவள்.Flawlessஆ அவ ருத்ரம் சமகம் சொல்லும்போது நான் என்ன அறியாமலேயே அழுதுடுவேன். ஆனா கடவுள் என்கிற concept ஐ நம்பாதவள்."I don't believe in any of these crap j, I don't believe that I am fortunate to chant this either .I like the rhythm of it that is it" என்பாள். அவளை பொருத்தமட்டில் அவளுக்கு அது நன்னா இருக்கறதுனால பா டறதா சொல்வா. Michael Buble யோடcrazy fan :))) நான் பத்ரி போன்றேனு தெரிஞ்சவுடன் கங்கையை நீ பார்ப்பாயே !அதுல கட்டாயம் குளிப்பையானு நு பல கேள்வி.:)) தான் போகலையேன்னு ஒரே ஏமாற்றம். சரி இந்த ஸ்லோகத்தை எடுத்துண்டு போய் அவகிட்ட கொடுன்னு எனக்கு சொல்லித்தந்தா. சின்னவயதில் பெற்றோரினால் சின்மயானந்தா க்ரூப்ல் இருந்ததின் உபயம்!! கங்கையை மாதிரி என்ன பிரவாஹம் நு அவ பாடும்போது நினைச்சேன். பக்தி பலவிதம். சாமி இல்லைன்னு சொல்லிண்டே!!!!!!!