சரீ, எப்ப பாத்தாலும் எல்லாம் ப்ராம்ஹணுக்கு கொடுக்கவே சொல்லி இருக்கே? அநியாயம் இல்லே? அவன் என்ன அப்படி உசத்தியா?
ஹும்!
அப்படி எல்லாமில்லே!
எனர்ஜி கேன் நாட் பி
க்ரியேடட் ஆர் டெஸ்ட்ராய்ட் மாதிரிதான் பாபத்தை அழிக்க முடியாது. ப்ராம்ஹணனுக்கு கொடுன்னு சொல்லி இருக்கு இல்லையா? அது பசுவோ, அல்லது
அதுக்கு பதிலா நிஷ்கம்- ன்னு சொன்ன பணமோ – அதை கொடுக்கிறப்ப நம்ம பாபத்தின் பெரும் பகுதி அந்த கொடுக்கப்பட்ட
பொருளோடேயே போய் வாங்கிக்கறவரை சேரும். அதனாலத்தான் விஷயம்
தெரிஞ்ச ப்ராம்ஹணர்கள் இப்படி வாங்கிக்கறதில்லை. பலருக்கும்
விஷயம் எதுவும் தெரியாம போயிட்டதால அசட்டுத்தனமா வாங்கிக்கறாங்க. பின்னால் கஷ்டப்படும் போது அது ஏன் வந்ததுன்னு புரியறதில்லை!
அட,
அப்படின்னா ஏன் கொடுக்கச்சொன்னாங்க? விஷயம்
தெரிஞ்சவங்களும் வாங்கிக்கறாங்கன்னா…. அதுதான் தர்மம்.
அந்தணர்களுக்கு விதிச்ச தொழில் ஆறுல தானம் வாங்கிக்கறதும் ஒண்ணு.
அப்ப தானம் வாங்கி
பாபத்தை சேத்துண்டே இருக்கணுமா? இல்லை,
அது வாங்கிண்ட பாபத்தை பொருத்து நித்திய அக்னி காரியம் செய்யும்போதோ,
சந்தியாவந்தனம் செய்யணும் போதோ, வேதம் ஓதும்
போதோ போயிடும். பசு மாடு தானம் வாங்கின மாதிரி கொஞ்சம் பெரிய
விஷயங்களுக்கு குறிப்பா 10 ஆயிரம் காயத்ரி செய்ய அது போகும்.
எங்க போகும்? நீங்கதான் இட் கேன் நாட் பி
டெஸ்ட்ராய்ட் ன்னு சொன்னீங்களேன்னா… அது வேத மந்திரங்கள்
ஜபிக்க வேதத்துக்கு போகும். வேதம் பரப்ரம்ஹ ஸ்வரூபம்.
இந்த ப்ரபஞ்சமே ப்ரம்ஹம். ஆகவே நல்லது கெட்டது,
பாப புண்ணியங்கள் எல்லாமே ப்ரம்ஹம் ஆனதால அங்கே போய் சேர்ந்த பிறகு கடலில
கரைச்ச பெருங்காயம் மாதிரி செயலிழக்கும். அது யாரையும்
ஒன்றும் செய்யாது.
பின்ன ஏன்
அசட்டுத்தனம்ன்னு சொன்னீங்க?
தானம் வாங்கிக்கலாம்.
அதுக்கு ஏத்தபடி காயத்ரியோ, அக்னியில் ஹோமமோ,
வேத பாராயணமோ செய்யணுமே? அதை செய்யறதில்லையே?
பரிகாரத்தை செய்யாம தானம் வாங்கிண்டே இருந்தா எப்படி?
பாவம்,
(!) அவர்களுக்கு ஏது நேரம்? இப்பல்லாம் காலை 4
மணிக்கு கணபதி ஹோமம் ஆரம்பிச்சு என்கிற ரீதியில்தான் ப்ரோக்ராம்
எல்லாம் இருக்கு. சிம்பிளா செய்ய வேண்டிய ஹோமத்தோட நிக்காது.
ஒரு கணபதி ஹோமம், ம்ருத்யுஞ் ஜய ஹோமம்,
நவக்ரஹ ஹோமம் (எது செய்யறோமோ இல்லையோ இது
மஸ்ட்!),ஆயுஷ் ஹோமம், சுதர்சன் ஹோமம்…. முடிய மதியம் ரெண்டு மணி ஆகிடும். காலாகாலத்தில் சந்தியாவந்தனம் செய்யக்கூட நேரமில்லை! வெளிப்படையா இல்லாமல் மனசில செய்யறேன் ன்னு காம்ப்ரமைஸ் ஆரம்பிக்கும்.
அப்புறம் மெதுவா அதுவும் காணாமல் போகும்!
1 comment:
இப்படிதான் தனது தன்மையை இழந்து வருகிறார்கள்
Post a Comment